மகிந்த ராஜபபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கை புலனாய்வுத் துறையின் இயக்குனாராகவிருந்த கபில ஹெந்தவிதாரண என்பவர் பொதுமக்களின் பணத்தைச் சூறையாடி வெளி நாடுகளில் பதுக்கியமை தொடர்பான விசாரணைகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. அவுஸ்திரேலியாவிற்குக் கப்பல்களில் அகதிகளை அனுப்பி கடல் நடுவில் அனாதரவாகக் கைவிட்ட சம்பவங்களோடு கபில ஹெந்தவிதாரணவிற்குத் தொடர்புகள் இருப்பதான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற வெள்ளை வான் கடத்தல் முதல் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் ஈறாக பல கொலைகளின் பின்னணியில் கபில கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதன் மற்றைய பக்கத்தில் கபில ஹெந்தவிதாரண என்ற அரச பயங்கரவாதியுடன் தமிழர் ஒருவரும் இணைந்து செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கொழுபிலிருந்து நடத்தப்படும் டான் தொலைக்காட்சியின் உரிமையாளரான குகநாதன் என்பவரே அத் தமிழர். தேர்தல் காலங்களின் மகிந்த ராஜபக்சவின் தமிழ் ஊது குழலாகச் செயற்பட்ட டான் தொலைக்காட்சி இப்போது புலம்பெயர் நாடுகளிலும் ஒளிபரப்பாகின்றது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள அரச ஆதரவாளர்களின் போக்கிடமாகச் செயற்பட்டுவரும் டான் தொலைக்காட்சியின் உரிமையாளர் இனியொரு ஆசிரியர்கள் மீது அவதூறுப் பிரச்சாரம் ஒன்றை அங்குள்ள அரச சார்பு ஊடகங்கள் ஊடாக மேற்கொண்டு தோல்விகண்டார்.
இனியொரு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த இருவர் தம்மைத் தமிழ் நாட்டில் வைத்துத் தமிழ் நாட்டுப் போலிசின் ஆதரவோடு கடத்தி அறுபது லட்சம் பணம் கோரியதாக குகநாதனின் அவதூறுப் பிரச்சாரம் இலங்கை பேரினவாத அரசின் சூழ்ச்சித் திட்டமே என்பது இப்போது உறுதியாகின்றது.
கபில ஹெந்தாவித்தாரண உள்ளிட்ட சிலரின் பணத்தை குகநாதன் லக்ஸம்பார்க்கில் உள்ள வங்கியொன்றில் வைப்புச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னர் பிரான்சில் வசித்த குகநாதனின் வங்கிக் கணக்குகளையும் நிதி நிறுவனங்களின் அவரின் வைப்பீடுகளையும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குகநாதன் ஒரு மோசடிப்பேர்வளி என்பது தெரியும் ஆனால் பல ஆள்கடத்தல் மற்றும் கொலைகளிலும் சம்பந்தப்பட்டதாக பலர் கதைத்தபோது நான் முன்னர் நம்பவில்லை ,இப்போ அதெல்லாம் உண்மை என்பது போல் உள்ளது