பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார்.
மியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன.
மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர். புத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா? முழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா?
இன்னொரு பக்கமும் பாருங்கள்… அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். அதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திக் விஜய்சிங் கூறியுள்ளார்.
கோவில்களை உடைப்பதும் கட்டுவதும் யார் ?மதவாதிகளே ……மரத்தை நடுவதும் தண்ணி ஊற்றுவதும் யார் ? மனிதர்களே…மரங்கள் அதிகமாக வழர்வது இயற்கையாகவே..மரங்களை செயற்கையாக்கி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வியாதியை ஏற்ப்படுத்தி எத்தனை நூற்றாண்டு காளம் செய்கிறான் மனிதன்.இந்த கோவில் என்ற மரநடுகை அழிக்கப்பட வேண்டியவைகளே .பறவைபோல் பறந்து செல்லும் மனிதர்களுக்கு என்றும் வியாதியே கோவில்
Regional Autonomy and the Central Government bt Kalaignar Muthuvel Karunanithy. It is written in Tamil. Our boys have had it here in 1990. I think they should translate it into English. Chief Minister Narendra Modi of Gujarat was accused of the racial riots too. They must appoint a Commission like that Shakaria Commission against Kalaignar then Chief Minister by then Prime MInister Indra Ghandhi.