இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள், தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) போன்றவற்றின் ஆரம்பகால செயற்பாட்டாளரும் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்துகொண்டவருமான புதுவை இரத்தினதுரை இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளதாக இலங்கை அரச சார்பு பேரினவாத ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளின் இலக்கிய நிகழ்வுகளில் இணைந்துகொண்ட புதுவை பின்நாட்களில் புலிகளின் பிரச்சாரக் கவிஞரானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராகவிருந்த புதுவை இரத்தினதுரை வன்னிப்படுகொலையின் பின்னர் இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.
சரணடைந்த புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் புதுவை இரத்தினதுரை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளை புதுவை இரத்தினதுரையை விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரங்களை சிலர் புலம்பெயர் நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்கூறும் தமிழ் உலகம் அவர் வரவுக்காய் ஏங்குகின்றது
அவர் வருவார் வடபகுதி இலச்சனுக்கு மகேந்த ராஜபட்சவை ஆதரித்து பாடல் கவிதை வரிகளூடன் இன்றூ தகதியை குறீத்து வையுங்கள் பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர் இரத்தினதுரை கவிஞர் சொன்னதும் பொய்யே பொய்யே ……ஆகா……பூவயர் ஜடயூம் பொய்யே பொய்யெ…
வந்த வுடன், செல்வியை எப்ப்டி கொன்றார்கள் என்று கேள்விக்கு பதில் தருவாரா?
புலவர் சொன்னதும் பபொய்யே பொய்யே, தலைவர் சொன்னதும் பொய்ய்யே பொய்யே, கொலைகல் மட்டும் தான் உண்மை உண்மை ….. தலிவரின்ட ஓடர், அதால ஒன்டும் செய்ய ஏலாது, போடத்தான் வேண்டும், என்று சொன்ன பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராகவிருந்த புதுவை இரத்தினதுரை, இவருக்கும் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்