பிலிப்பைன்சில் அரசிற்கு எதிராகப் போராடும் புதிய மக்கள் இராணுவத்தின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனைய 53 வரையன இராணுவத்தினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். அமரிக்காவின் பினமி அரசாகச் செயற்படும் பிலிப்பைன்ஸ் அரசிற்கு எதிராகப் போராடும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவான புதிய மக்கள் இராணுவம் பிலிப்பைன்சில் பல கிராமங்களை ஆட்சி செய்கிறது. நிலப் பகிர்வு, நிர்வாகம் போன்றவற்றை நடத்திவருகிறது.
1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வாதிகார அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட பிலிப்பன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் அப்பால் தனது போராட்டத்தை இன்றுவரை வெற்றியை நோக்கி நகர்த்தி வருகிறது. கிராமங்களில் தற்காப்புக் குழுக்களாக ஆரம்பித்து உறுதியான இராணுவமாக புதிய மக்கள் இராணுவம் வளர்ச்சியடைந்துள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி மற்றும் புதிய மக்கள் இராணுவம் ஆகியன பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி என்ற முன்னணிப் படையால் வழி நடத்தப்படுகின்றன.
ஆறாம் திகதி பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் 8 வது படைப்பிரிவின் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதல் குறித்து பிலிப்பைன்ஸ் தேசிய ஜனநாயக முன்னணி அறிக்கை ஒன்று சமர்ப்பித்துள்ளது. ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்றும் புதிய உலக ஒழுங்கு உருவாக்கி ஆயுதப் போராட்டத்தை அழிக்கிறது என்றும் ஆய்வு நடத்தி ஆனந்தமடைபவர்களுக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வாளகளின் எஜமானர்களின் முன் நந்திபோல் குந்தியிருக்கிறது.