Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு!

இனியொரு... by இனியொரு...
06/29/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
17
Home பிரதான பதிவுகள் | Principle posts

 
ஊடகங்களுக்கான அறிக்கை 27-06-2010

தேசிய இனப் பிரச்சினை இன்னும் இலங்கையின் பிரதான முரண்பாடாக இருப்பதால் அதற்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முழுப் பொறுப்பையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய தேசிய இனத்தவர்கள் மற்றும் சமூகத்தினர் இலங்கையில் பல்இன சமூகமாக வாழ்வதன் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அவர்களிடையே சமத்துவம் சுயாட்சி சுயநிர்ணய உரிமை, ஐக்கியம் என்பனவற்றை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் உரிய அரசியல் தீர்வு காணப்படுவது தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் அவசரகாலச் சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன நீக்கப்படுவதுடன் அவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும், அச் சட்டங்களின் கீழ் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவர்களும், கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகின்றது. மேலும் அனைத்தையும் இழந்து நிற்கும் வடக்கின் மூன்று இலட்சம் மக்களின் புனரமைப்புக்கும் புனர்வாழ்வுக்கும்  மேலாக அகதிகளாக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அனைத்து மக்களது மறு வாழ்வும் இயல்பு வாழ்வும் உடனடியாக மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதே வேளை, அடிப்படை முரண்பாடாக இருந்து வரும் வர்க்க அடிப்படையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதன் வெளிப்பாடான பொருட்களின் விலை உயர்வுகளும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் சம்பள உயர்வு மறுப்பும் தொடர்கிறது. இவற்றால் வறுமை வேலை இன்மை என்பன உயர்ந்து கல்வி சுகாதாரம் சமூக நலன்கள் யாவும் சீரழிக்கப்பட்டும் வருகின்றன. பூதாகரமாகி வரும் இப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது மக்களைத் திசை  திருப்பவே ஆளும் வர்க்க சக்திகள் தேசிய இனப் பிரச்சினையை தகுந்த கருவியாகத் தமது கைகளில் வைத்து ஆட்சி அதிகாரம் நடாத்தி வருகின்றனர். இதனை அனைத்துச் சிங்கள, தமிழ்,  முஸ்லீம், மலையகத் தமிழ் உழைக்கும் மக்களும் உணர்ந்து வர்க்க அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுக்க அணிதிரள வேண்டும் என மாநாடு கோருகின்றது.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் (புதிய ஜனநாயக கட்சி) ஐந்தாவது மாநாட்டில் அங்கிகரிக்கப்பட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில், 2009 ஆண்டின் இராணுவ நடவடிக்கைகளின் போது  இடம் பெற்றுள்ளது எனப் பரவலாக முன்வைக்கப்படும்  போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் நேர்மையாக விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடின் இலங்கையின் சுதந்திரம் இறைமை சுயாதிபத்தியத்தில் ஏகாதித்திய மேலாதிக்க நவகொலனித்துவ சக்திகளும் ஐ.நா. சபை போன்ற நிறுவனங்களும் மேன்மேலும் தலையிடுவதற்கே வாய்ப்பு ஏற்படும். போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாக  கூறிக்கொண்டு வெளிநாட்டு சக்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. அதே போன்று  உள்நாட்டு விவகாரங்களில் வெளியார் தலையிடக் கூடாது என்று கூறிக்கொண்டு தனது சொந்த நாட்டு மக்கள் மீதான போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கம் முடி மறைக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைகவோ முடியாது என்பதையும்  மாநாடு வலியுத்தியது. 

புதிய ஜனநாயகக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு யூன் 25,26 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்றது. சி.கா. செந்திவேல், இ. தம்பையா, க. தணிகாசலம், சோ. தேவராஜா, வெ. மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட தலைமை குழு தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது. அதன் போது கட்சியின் பெயர் புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி என மாற்றம் செய்யப்பட்டது.
இம் மாநாட்டில் சர்வதேச உள்நாட்டு அறிக்கைகளும் ஸ்தாபன, நிதி அறிக்கைகளும் கட்சியின் யாப்புத் திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்களின் ஊடே ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ன.
புதிய ஜனநாயகக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு யூன் 25,26 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம் பெற்றது. சி.கா. செந்திவேல், இ. தம்பையா, க. தணிகாசலம், சோ. தேவராஜா, வெ. மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட தலைமைக் குழுவின் தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது. அதன் போது கட்சியின் பெயர் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி என மாற்றம் செய்யப்பட்டது.
இம் மாநாட்டில் சர்வதேச உள்நாட்டு அறிக்கைகளும் ஸ்தாபன, நிதி அறிக்கைகளும் கட்சியின் யாப்புத் திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்களின் ஊடே ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாக்சிசம் லெனினிசம் மாஓ சேதுங் சிந்தனையையும் அவற்றின் விருத்திகளையும் வழிகாட்டும் கோட்பாடுகளாக ஏற்றுக் கொண்டுள்ளதால் அதனை பிரதிபலிக்கும் வகையில் கட்சியின் பெயர் அமைய வேண்டும். புதிய ஜனநாயகக் கட்சி என்ற பேரில் உலகின் பல நாடுகளில் முதலாளித்துவ கட்சிகள் இயங்கி வருகின்றன. அத்துடன் ஒத்த பெயருடைய கட்சி ஒன்றை தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அரசியல் கட்சியாக அங்கஷீகரித்தும் இருக்கிறார். அத்துடன் வெளிநாடுகளின் மாக்சிச லெனினிச சகோதரக் கட்சிகள் எமது கட்சியின் பெயர் பற்றிச் சுட்டி காட்டி இருந்தனர். மேற்படி காரணங்களை விவாதித்த மாநாடு கட்சியின் பெயரை புதிய- ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி என மாற்றுவதற்கு அங்கீகாரம் அளித்தது.

அந்த அடிப்படையில் நடைபெற்ற புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாடு சுதந்திரமான ஐக்கிய இலங்கை, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான புதிய ஜனநாயப் புரட்சி, சோசலிஷ எதிர்காலம் என்பனவற்றை  அடிப்படை அரசியல் இலக்குகளாகப் பிரகடனப்படுத்தியது.

மேற்படி மாநாடு 15 பேரைக் கொண்ட மத்திய குழுவை தெரிவு செய்தது. அம் மத்திய குழுவானது கட்சியின் தலைமை நிர்வாகிகளையும் தெரிவு செய்து கொண்டது. பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன், சர்வதேச அமைப்பாளர் இ. தம்பையா, பொருளாளர் சோ. தேவராஜா ஆகியோர்  தெரிவாயினர்.

மாநாடு அங்கீகரித்த முக்கிய தீர்மானங்கள்.

1. பௌத்த சிங்கள நிலவுடைமை பழைமைவாத பெருமுதலாளித்துவ அல்லது தரகு முதலாளரித்துவ  அதிகார சக்திகளே இலங்கையின் இன்றைய நவ கொலனித்துவ அமைப்பைக் கட்டிக் காத்து நிற்கும் ஆளும் வர்க்கங்களாக இருந்து வருகின்றன.

இத்தகைய சக்திகளே தொழிலாளர்கள், விவாசாயிகள்  சிறு வியாபாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மைத் தேசிய இனங்கள் போன்ற பிரிவினர் உட்பட ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஆள்வதுடன் இலங்கை மக்களுக்குரிய தேசிய ஜனநாயகத்தைக் மறுத்தும் வருகின்றன. ஆதலால் தேசிய ஜனநாயகத்தை வென்றெடுப்பது உடனடியானதும் அவசரமானதுமான தேவையாகவே உள்ளது. அதனை வென்றெடுக்க இடதுசாரி ஜனநாயக முற்போக்கு கட்சிகளும் தேசிய இனங்களின் அரசியல் கட்சிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகள் தொழிற்சங்கள் விவசாய அமைப்புள் கலை இலக்கிய அமைப்புகளையும் புத்திஜீவிகளையும் கொண்ட பரந்துபட்ட ஐக்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். பாராளுமன்ற வரையறைகளுக்கப்பால் விரிந்தது பரந்த அரசியல் வேலைத்திட்டம் உறுதியாக முன்னெடுக்கப்பட  வேண்டும். அரசியல் பொருளாதார தீர்மானங்களை எடுப்பதில் மக்கள் முடிவெடுப்பவர்களாக மாறும் நிலையில் மக்களின் கைகளுக்கு அதிகாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இலங்கையின் சுதந்திரம் இறைமை ஐக்கியத்தை உறுதிசெய்யும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் தேசிய இனங்களின் சமத்துவம், சுயாட்சி;, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். தேசிய பொருளாதாரத்தைக்  கட்டியெழுப்பிப் பல்லினத் தேசியப் பண்பாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுத் தேசிய ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும்.

2. அடுத்த கட்டமாக இலங்கை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடல்லாதபடியால் சோஷலிஸ புரட்சியின் முன்தேவையாகப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பது அவசியமாகும். புரட்சிகரப் போராட்டங்களினூடாக தொழிலாளர் விவசாயிகளின் ஐக்கிய முன்னணியில் தேசிய இனங்களும் அனைத்து சுரண்டப்படும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசபக்த சக்திகள் தேசிய முதலாளித்துவ சிறு முதலாளித்துவ வர்க்கங்களை அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும் பெரும் தரகு முதலாளித்துவத்தையும் தோற்கடித்து தேசிய இனங்களின் சுயாநிர்ணய உரிமைமயை அந்தந்த இனங்களின் சுயவிருப்பின் படி உறுதிசெய்து, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை அகற்றி, சோஷலிஸ கட்டுமானங்களை முன்னெடுக்க வேண்டும்.

3. ஏகாதிபத்திய முகவரான ஐ.நா. சபையையும் அதன் நவகொலனித்துவ நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக் கொண்டு பலவிதமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு யுத்தத்தை நடத்துவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகளின் இராணுவ உதவிகளையும் பெற்றுக் கொண்டே செயற்பட்டது. யுத்தத்தின் போதும் அதன் பிறகும் வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டது. அப்போதெல்லாம் இலங்கை அரசு நாட்டின் இறைமை சுதந்திரம் சுயாதிபத்தியம் மீது எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை. ஆனால், இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் போர்க்குற்றங்களும் மனிதஉரிமை மீறல் களும் பற்றிய ஆலோசனை வழங்கவென ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் குழுவொற்றை நியமித்த பிறகே கவலையடைவதாகவும் அதனால் ஆத்திரமடைவதாகக் காட்டுவது நம்பகத்தன்மையற்றதும் மக்களை ஏமாற்றக் கூடியதுமாகும். ஐ.நா. போன்ற அமைப்புகளினது ஏகாதிபத்திய மேலாதிக்க நிகழ்ச்சி நிரல் அவற்றின் உள் நோக்கத்துடனேயே நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்து சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்துள்ள ஆலோசனை வழங்கும் குழு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கோ அரசியல் தீர்வு காணப்படுவதற்கோ எவ்வகையிலும் உதவப்போவதில்லை. எனவே தமிழ் மக்கள் ஐ.நா.விடம் எதிர்பார்க்க எதுவும் இருக்க மாட்டாது.
அதேவேளை, இலங்கை போர்க்குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களையும் மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை அரசாங்கம் பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காண்பதுடன் போர்க் குற்றங்களும்; மனித உரிமை மீறல்களும் பற்றி விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அதனுடாகவே வெளிநாட்டுச் சக்திகள் இலங்கையில் தலையிடுவதை தடுக்க முடியும்.

4. மிதவாதத் தமிழர்கள் முதல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரை எவரும் முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்காது ஏகாதிபத்தியச் சார்பு, இந்தியச் சார்பு நிலை நின்று பழைமைவாதப் பிற்போக்குத் தேசியத்தை முன்னெடுத்தனர். அவர்கள் தமிழ் மக்கள் மீது தனிநாட்டுக் கோரிக்கையைத்  திணித்தார்கள். தற்போது புலம் பெயர்ந்த தமிழர்களில் மேட்டுக்குடியினர் “நாடு கடந்த தமிழீழ அரசை” நிறுவி, அதனைத் தமிழ் மக்கள் மீது மீண்டும் திணிக்கின்றனர். இதற்கு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஆதரவு தெரிவிப்பதாக  கூறுகின்றனர். 1998ம் ஆண்டில் முதல்முதலாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது இந்தியாவே. அத் தடை இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அவ்வாறே வட அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இடம் பெற்றது. இடையிடையே முணுமுணுப்பதற்கு அப்பால் மேட்டுக்குடியினரால் எதனையும் செய்யமுடியவில்லை. இந்தியா இலங்கையுடன் இணைந்து யுத்தம் செய்து கொண்டிருந்த போது விமானத்தை அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களைக் காப்பாற்றப் போவதாக உறுதியளித்த அமெரிக்கா காத்திருந்து கழுத்தறுத்தது போன்று செயற்பட்டது தெரிந்ததே. தனிநாட்டைக் கோரிய சிலர், மாகாண சபை அதிகாரங்களையே தர மறுக்கும் பேரினவாத அரசாங்கத்துடன் கூட்டிணைந்துள்ளதால் தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் கிடைக்கப் போவதில்லை. இலங்கையில் தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டும்போதே நியாயமான அரசியல் தீர்வைக் காணமுடியும். புதிய-ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் சூழ்நிலையில், தமிழ் மக்களின் சுய விருப்பின் பேரிலான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும். எனவே தேசிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் பங்கெடுப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்க முடியும். தேசிய இன விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாடு ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் தரகு முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும்  ஆதரவாக இருக்க முடியாது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் பெரும்பான்மைச் சிங்கள உழைக்கும் மக்களது ஏகாதிபத்திய ஏதிர்ப்பு, பூகோளமயமாதல் எதிர்ப்பு, நவகொலனித்துவ எதிர்ப்பு, பெரும் தரகு முதலாளித்துவ அதிகாரத்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியாது. அதேபோன்று சிங்கள மக்களது. மேற்படி போராட்டங்களுக்கு ஆதரவளிக்காமலோ அவற்றுடன் இணையாமலோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ― அதாவது பிரதான முரண்பாட்டைத் தீர்ப்பதற்குச் ― சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவோ அவர்களை இணைத்துக் கொள்ளவோ முடியாது.

5. மலையகத் தமிழர்கள் தனியான தேசிய இனமும் இன ஒடுக்கு முறைக்கு உள்ளானவர்களும் ஆவர். இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அவர்கள் ஒர் அங்கமாக உள்ளனர். அதே வேளை, வர்க்கச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். எனவே இன, வர்க்க ரீதியில் ஒடுக்கப்பட்டு வரும் மலையக மக்கள் அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு வர்க்கப் போராட்டப் பாதையில் அணி திரட்டப்படுவது அவசியமானதாகும்.

6. முஸ்லீம் மக்களம் ஒரு தேசிய இனமாக உள்ள போதிலும், மத அடையாள எல்லைகளுக்குள் மட்டும் நிற்பதற்கும் அப்பால், வர்க்க ரீதியான அணிதிரள்வுக்கு உள்ளாக்கப் படல் வேண்டும்.

7. இனவாதம் மக்களின் ஐக்கியத்திற்குப் பாரிய தடையாக இருந்துவருகிறது. இலங்கையின் தொழிற்சங்க-இடதுசாரி இயக்க வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு அனைத்து இனத் தொழிலாளர்களையும் வர்க்க ரீதியாக ஐக்கியப்படுத்தும் புரட்சிகர இயக்கம் கட்டி வளர்க்கப்பட வேண்டும். சமூக ரீதியாகவும் தொழிற் பிரிப்பினாலும் இனவாதத்தினாலும் பிரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடையே வர்க்க ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஐக்கியத்தைக் கட்ட வேண்டும்.
தொழிலாளர்களின் உடனடிக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களினூடாக அரசியல் ரீதியாகத் தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டி ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டி அவர்களைத் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் தலைமைச் சக்திகளாக வளர்க்கச்  செயற் திட்டங்களுடன் செயற்பட வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவரையும் தொழிலாளர்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வருவதுடன் அவர்களது அனைத்துப் போராட்டங்களிடையேயும் ஒத்துழைப்பை உறுதி செய்து வர்க்கப் போராட்ப் பாதையில் அணிதிரளச் செய்தல் வேண்டும்.

8. விவசாயிகள் சமூக மாற்றப் புரட்சியின் பிரதான சக்திகளாவர். அதனால் விவசாயிகளதும் விவசாயத் தொழிலாளர்களதும் பரந்துபட்ட ஐக்கியம் கட்டப்பட வேண்டும். விவசாயத் துறையில் ஏகாதிபத்திய முகவர்களாக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் (என்.ஜி.ஓக்கள்) முன்வைக்கும் “பேண்தகு உற்பத்தி” “அபிவிருத்தி” “மாற்று உற்பத்தி” “அரசியல்நீக்கச்  செயற்பாடு” போன்ற நவகொலனித்துவ பிடிகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். கடற்றொழிலாளர்களிது பிரச்சினைகளும் பிரத்தியேகமாக ஆராயப்பட்டு பெரிய பெரு முதலாளிகளதும் பன்னாட்டு கம்பெனிகளதும் பிடியிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட, அவர்கள் வெகுஜனப் போராட்டங்களின் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும்.

9. தற்போது தீண்டாமை அடங்கு நிலையில் இருந்தாலும் சாதியத்தை வெறும் அடையாளம் தொடர்பான பிரச்சினையாகக் காணவன்றிச்  சாதிய ஆதிக்கத்திற்கும் குறுகிய சாதிவாதத்திற்கும் எதிரான போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சாதியம் மக்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் நிலப்பிரபுத்துவக் கருத்தியலாகும். இலங்கையில் 1960களில் மாக்சிச லெனினிசப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட்டுகளால் முன்னெடுக்கப்பட்ட சாதியத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டம் இந்தியாவில் போன்று அடக்கப்படும் சாதியினருக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை கோரும் சாதி அடையாளத்தை நிலைநிறுத்தும் போராட்டமாகவன்றி வர்க்கப் போராட்டத்தின் ஊடாகச் சாதியத்தையும் தீண்டாமையையும் தகர்க்கும் இலக்கைக் கொண்டதாகவே இருந்தது.
சாதியத்திற்கு எதிரான போராட்டம் தலித்தியப் பார்வையில் சாதியத்தை இல்லாமல் செய்துவிடும் என்ற குறுகிய சாதியவாத நிலைப்பாட்டை நிராகரிக்கிறது. அதேவேளை வர்க்கப் போராட்டத்திற்கும் சாதியத்திற்குமிடையிலான நெருங்கிய இணைப்பையும் ஒத்துழைப்பையும் பேண வேண்டும்.

10. தனிச் சொத்துடமைக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பெண் விடுதலைக்கான போராட்டமே. ஏனெனில் ஆரம்பகாலத்தில் பெண்கள் தனிச் சொத்தாக கொள்ளப்பட்டனர் என்ற வரலாற்று உண்மையை மாக்சியமே விளக்கியது. அதனால் பெண் விடுதலைக்கான போராட்டத்தை வெறும் அடையாளப் பிரச்சினையாகவன்றி வர்க்கப் போராட்டத்தின் பகுதியாகவும் அதேவேளை குறிப்பாகவும் இரண்டு தளங்களிலும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும்.

11. இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்ய முன்நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவிற்கு எதிராகவும் இலங்கை மக்கள் ஐக்கியப்படா விட்டால் இலங்கையின் சுதந்திரம், இறைமை, சுயாதிபத்தியம், ஐக்கியம் என்பன பறிபோகும் அபாய நிலையே இருந்து வருகிறது. இலங்கை மீது அமெரிக்க மேற்கு உலக ஏகாதிபத்தியங்களும் ஐப்பானிய ஏகாதிபத்தியமும் பூகோளமயமாதலின் முன்னெடுப்பாளாகளாவர். அத்தகைய பூகோளமயமாதலின் பங்காளிகளாக இருக்கும் இந்தியா, சீனா போன்றவையும் இலங்கை மீது தமது கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றன. எனவே ஏகாதிபத்தியத்திற்கும் பூகோளமயமாதலுக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக வலுவான ஐக்கியப்பட்ட பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும் எனவும் மாநாடு அறைகூவல் விடுத்தது.

 பொதுச் செயலாளர்.
சி.கா.செந்திவேல்.

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இன்று:நூல் அறிமுகமும்-கலந்துரையாடலும்.

Comments 17

  1. ethayam says:
    16 years ago

    இவர்களிடம் ஆயுதம் இருக்கிறதா? ஆயுதங்கள் பற்றி என்ன நினைக்கிறார்கள். எமக்கு வெற்று சவடால்கள் தேவையில்லை. மாக்சிச லெனினிசம் பேசுவோருக்கு தத்துவம் ஒரு கண் என்றால் ஆயுதம் மறு கண். அல்லாதவிடத்து அதுவும் மோசடி அரசியலே.

    • xxx says:
      16 years ago

      அடடா! அடடா!! என்ன அருமையான அளவு கோல்களை வைத்திருக்கிறிர்கள்!!!

      மக்கள் தான் எல்லாம் மற்றவை அதற்குப் பின்னால் தான் என்பது மார்க்சியப் பார்வை.
      புலிகள் ஆயுதங்களை முதன்மைப் படுத்தி என்ன நடந்தது? மக்களை அரசியல்மயப் படுத்திய பின்பு தான் ஆயுதம் ஏந்துவது பற்றிப் பேச முடியும். மக்கள் தமக்காகப் போரடுவது தான் புரட்சி. வெறும் ஆயுதபாணிகள் வாங்கிக் கொடுப்பது அழிவு.
      அதைத் தான் அண்மையிற் கண்டோமே!

      • அ.ந. மலைமோகன் says:
        16 years ago

        இன்று இலங்கையில் நேர்மையுடன் செயற்படுகின்ற இடதுசாரி கட்சி என்று ஒன்றில்லை. பலம்கால பெருமையுடன் வாழ்கின்ற இவர்கள் குறைந்தபட்ச நேர்மைக் கூட இல்லாதவர்கள். சில இளைர்கள் இவர்களின் புரட்சி கோசங்களில் கவருவதும் பின் இவர்களின் சுயரூபம் தெரிந்த பின்னர் கட்சியிலிசுந்து விலகிவிடுவது மட்டுமல்ல சிலர் சமுதாய செயற்பாடுகளிலிருந்தே ஓய்வெடுத்து விடுகின்றனர். இவர்கள் பற்றிய சரியான விமர்சனம் இல்லாவிடின் பலமான இடதுசாரி இயக்கமொன்றை கட்டியெழுப்ப முடியாது.

      • அ.ந. மலைமோகன் says:
        16 years ago

        இன்று இலங்கையில் நேர்மையுடன் செயற்படுகின்ற இடதுசாரி கட்சி என்று ஒன்றில்லை. பலம்கால பெருமையுடன் வாழ்கின்ற இவர்கள் குறைந்தபட்ச நேர்மைக் கூட இல்லாதவர்கள். சில இளைர்கள் இவர்களின் புரட்சி கோசங்களில் கவருவதும் பின் இவர்களின் சுயரூபம் தெரிந்த பின்னர் கட்சியிலிசுந்து விலகிவிடுவது மட்டுமல்ல சிலர் சமுதாய செயற்பாடுகளிலிருந்தே ஓய்வெடுத்து விடுகின்றனர். இவர்கள் பற்றிய சரியான விமர்சனம் இல்லாவிடின் பலமான இடதுசாரி இயக்கமொன்றை கட்டியெழுப்ப முடியாது.
        அவ்வவ் காலங்களில் தங்களது சுயநலத்திற்காக சிலரை தாக்குவதற்காக இளைஞர்களை ஊக்குவிப்பதும்தேவை முடிந்த உடன் அவர்களை கழற்றி விட்டு முதலாளித்துவ பட்டம் சூட்டுவதும் தாக்குவதும் இவர்களின் வேளை. தேர்தலுக்காக மட்டும் எங்கள் வீட்டிற்கு வரும் புரட்சி தோழா நீ தோழர் என்று உன் சுயநலன்களுக்காக பாவித்த தோழனொருவன் நோயினால் வீழ்ந்த பின் அவனால் பிரயோசனம் இல்லையென்று சென்று விட்டாயாமே. குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாத இவர்கள் எப்படி இடதுசாரிகள்.

        போலி இடதுசாரிகளால் பாதிக்கப்பட்ட உண்மைத் தோழன்

      • sivanandam says:
        16 years ago

        மலைமோகன்
        அரட்டைகளை விட்டுவிட்டு ஆதாரங்களை முன்வையுங்கள்.
        அதற்குக் கட்சிக்காரர்கள் பதில் சொல்லலாம்.
        இந்த மாதிரிப் பொய்களைப் போன ஆண்டு “100 பூக்கள்” என்று ஒரு கூட்டம் முன்வைத்துப் பதில் கூறப் பட்டதும் வாயடைத்து விட்டது.

        YYY
        ஆதாரங்களை முன்வையுங்கள்.
        இன்று வரை புலிகளையும் அரசையும் ஒருசேர விமர்சித்து வந்தவர்கள் யார் என்று முதலில் விசாரியுங்கள்.

        • ஐீவன் says:
          16 years ago

          புலிகள் சகல கம்யுனிட்டுகளையும் வேட்டையாடிய போது இவர்கள் மட்டும் அவர்களின் ஒத்தாசை இல்லாமல் எப்படி இயங்கினார்கள். அவர்களையும் அவர்களுக்கு துதிப்பாடுகின்றவர்களையும் கூர்ந்து கவனித்தால் யார் புலிகளின் வால் பிடிப்பாளர்கள் என்பது புரியும். அசை்சர் டக்லஸ சந்தித்து விட்டு நாங்கள் வந்தது வெளியெ தெரியாமல் இருக்கட்டும் என்ற வந்த உத்மர்கள் அல்லவா.

  2. ethayam says:
    16 years ago

    செந்தில் வேல் போன்றவர்கள் மக்களை அணிதிரட்ட நாற்பது வருடம் தேவையோ?

    • yyy says:
      16 years ago

      இவர்கள் தீரமான புலி ஆதரவாளர்கள் அல்லவா? ஆனால் மக்களிடமும் அமைச்சர் டக்லஸ் இடம் செல்கின்ற பொது மட்டும் தான் இவர்கள் கொம்யூனிட்டுக்கள்.

  3. a voter says:
    16 years ago

    போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறிக்கொண்டு வெளிநாட்டு சக்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. அதே போன்று உள்நாட்டு விவகாரங்களில் வெளியார் தலையிடக் கூடாது என்று கூறிக்கொண்டு தனது சொந்த நாட்டு மக்கள் மீதான போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கம் முடி மறைக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைகவோ முடியாது என்பதையும் மாநாடு வலியுத்தியது.

    என்ன அருமையான பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாடு.
    நாடு என்பதே முதலாளி வர்க்கம் எம்மைச் சுரண்டுவதற்குப் போடுகின்ற வேலி தானே. பாட்டாளிக்கு நாடு இல்லை என்று லெனின் எழுதியதாக ஞாபகம்.
    பிறகு என்ன உள்நாடு – வெளிநாடு.

  4. அம்பேதன் says:
    16 years ago

    //மேலும் அவ் அறிக்கையில், 2009 ஆண்டின் இராணுவ நடவடிக்கைகளின் போது இடம் பெற்றுள்ளது எனப் பரவலாக முன்வைக்கப்படும் போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் நேர்மையாக விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிடின் இலங்கையின் சுதந்திரம் இறைமை சுயாதிபத்தியத்தில் ஏகாதித்திய மேலாதிக்க நவகொலனித்துவ சக்திகளும் ஐ.நா. சபை போன்ற நிறுவனங்களும் மேன்மேலும் தலையிடுவதற்கே வாய்ப்பு ஏற்படும். போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறிக்கொண்டு வெளிநாட்டு சக்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. அதே போன்று உள்நாட்டு விவகாரங்களில் வெளியார் தலையிடக் கூடாது என்று கூறிக்கொண்டு தனது சொந்த நாட்டு மக்கள் மீதான போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கம் முடி மறைக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைகவோ முடியாது என்பதையும் மாநாடு வலியுத்தியது.//

    அரசுக்கும், காலனித்துவ ஏகாதிபத்தியமும் உலகமெங்கும் வெளிப்படையாகக் கைகோர்த்தன் பிண்ணணிதான் உலகமயமாதல் என்னும் சீரழிவு. இதில் எந்த அரசை நீங்கள் எப்படிக் காப்பாற்றப்போகிறீர்கள் ? ஏகாதிபத்தியத்தின் வடிவமாக இருக்கும் அரசை நீங்கள் காப்பாற்றக் கிளம்பினால் நீங்கள் உண்மையில் யார் ?

    //இலங்கையின் சுதந்திரம் இறைமை ஐக்கியத்தை உறுதிசெய்யும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் தேசிய இனங்களின் சமத்துவம், சுயாட்சி;, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும்.//
    இத்தனைப் படுகொலைகள் இனப்படுகொலைகள் திட்டமிட்ட நயவஞ்சக அரசியல் தந்திரங்கள், ஆயுதப் போராட்டம் செய்தவர்களுடன் நடந்த பேச்சுக்களில் ‘பசப்பல்கள்’ நழுவல்கள் என்று சிங்கள அரசு செய்தது. இன்றும் சிங்களத் தலைமைகள் அது சுயநிர்ணய உரிமை தருதல் போன்ற ஒரு முடிவுக்கு வர வலியுறுத்த எதுவும் வலுவாக சிறுபான்மை இன மக்களுக்கு இல்லை, ஆயுதத்தை தவிர. ஓட்டு அரசியலில் பெரும்பான்மை இல்லை தேர்தல் முறையில் நிர்ப்பந்தம் கொடுக்க. ஆயுதம் எடுத்ததையும் ஏகாதிபத்தியங்கள் சேர்ந்து அழித்துவிட்டன.

    3ஆவது தீர்மானம் தான் உங்களுக்கு சிங்களர்களின் ஆதரவைப் பெற்றுத் தரும். ஐ.நா முதல் பான் கி மூன் வரை எல்லோரும் போலிகள் என்று கூற முடிந்த உங்களால், உள் நாட்டில் இருக்கும் பக்ஸேக்கள், பண்டாரநாயக்காக்கள், என்று 50 வருடங்கள் இருந்த சிங்கள அதிபர்களை போலிகள், இனவாதிகள் என்று சொல்ல முடியாதது ஏன்? அதை மறைப்பது ஏன் ? JVPக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் வந்துவிடும் ?

    //தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் பெரும்பான்மைச் சிங்கள உழைக்கும் மக்களது ஏகாதிபத்திய ஏதிர்ப்பு, பூகோளமயமாதல் எதிர்ப்பு, நவகொலனித்துவ எதிர்ப்பு, பெரும் தரகு முதலாளித்துவ அதிகாரத்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறமுடியாது. அதேபோன்று சிங்கள மக்களது. மேற்படி போராட்டங்களுக்கு ஆதரவளிக்காமலோ அவற்றுடன் இணையாமலோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ― அதாவது பிரதான முரண்பாட்டைத் தீர்ப்பதற்குச் ― சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவோ அவர்களை இணைத்துக் கொள்ளவோ முடியாது.//

    சிங்களர்கள் தங்களது எந்த எதிர்ப்புக்கும் தமிழர்களின் ஆதரவை வேண்டுவது இல்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. இலங்கையின் எந்த வளங்களும், பகுதிகளும், தமிழர் வாழும் பகுதிகள் உட்பட, அவற்றின் வளர்ச்சியும் தமிழருக்கு சொந்தமில்லை; அது சிங்களர்=சிறீலங்காவிற்கு சொந்தம்;அதனால் சிங்களர்கள் தமிழர்களைச் சார்ந்து நிற்கும் அவசியம் எதுவும் இல்லை. தமிழர்களுக்கு உரிமையும் இல்லை. அதை வழங்க எந்தச் சிங்கள கட்சியும் தயாரும் இல்லை. 50 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் அதை காட்டுகின்றன.

    //இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்ய முன்நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவிற்கு எதிராகவும் இலங்கை மக்கள் ஐக்கியப்படா விட்டால் இலங்கையின் சுதந்திரம், இறைமை, சுயாதிபத்தியம், ஐக்கியம் என்பன பறிபோகும் அபாய நிலையே இருந்து வருகிறது.//
    இந்தியாவின் தமிழர்கள் என்பவர்கள் ஈழத்தமிழரின் இனம். இந்த இன ஒற்றுமையே விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளி இயக்கங்களை இந்தியாவின் சார்பாகப் போக வைத்தது. இந்தியாவின் நோக்கத்தை அவர்கள் அறிந்தேயிருந்தனர். ஆனால் இந்தியா பிற்காலத்தில் உலகமயமாக்கலின் மூலம் எளிதில் இலங்கைக்குள் புகமுடிந்ததால் விடுதலைப்புலிகள் போன்ற சக்திகளை தமக்கு வசதியாக வளர்த்துவிடவேண்டிய தேவையில்லை என்கிற கட்டம் வந்தபோது மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து அழித்தொழித்தது. போராளி இயக்கங்கள் தக்க காலத்தில் தங்களுக்கும் ஏகாதிப்பத்திய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ. மற்றும் ரா போன்றவற்றுக்கான தொடர்பை துண்டிக்காததாலும், இந்தியச் சார்பு நிலை பேசியதாலும் எளிதில் நிலைகுலைந்து அழிந்தனர். அவர்கள் தமிழகச் சார்பு நிலை எடுத்திருந்தால் இனம் எந்த அளவு தேசிய எல்லைகளை கடந்து நிற்கும் என்பதை அளவு கண்டிருக்கலாம். இந்தியா வேறு தமிழகம் வேறு. இந்த தேசிய இறையாண்மைப் பூச்சாண்டிகள் இனி ஏகாதிபத்தியத்தை ஒன்றும் கட்டுப்படுத்தாது. ஏனெனில் உலகமயமாக்கலுக்கு எதிராக பாட்டாளி மக்கள் திரள அவர்களுக்கு என்று பொதுவான உணர்வுப் பகிர்தல் இல்லை. கூலியை உயர்த்தப் போராடுபவன், தீண்டாமைக்குப் பாடுபடுபவன், இனம் கொல்லப்பட்டால் சும்மாயிருப்பது (எ.கா. இந்திய சி.பி.எம் தோழர்கள்). வங்கி ஊழியன் லாரிக்காரர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது எல்லாம் 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மத்தியதர பாட்டாளி வர்க்க கலாச்சாரம்.

    வாழ்த்துக்கள், சிங்கள அரசுடன் சேர்ந்து ஆமாம் சாமி போடப்போகும் புதிய-சனநாயக மார்க்சிஸ-லெனினிய கட்சித் தோழர்களுக்கு. வேறென்ன சொல்ல ?

    • xxx says:
      16 years ago

      அம்பேதன், உங்கள்
      “போராளி இயக்கங்கள் தக்க காலத்தில் தங்களுக்கும் ஏகாதிப்பத்திய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ. மற்றும் ரா போன்றவற்றுக்கான தொடர்பை துண்டிக்காததாலும், இந்தியச் சார்பு நிலை பேசியதாலும் எளிதில் நிலைகுலைந்து அழிந்தனர். அவர்கள் தமிழகச் சார்பு நிலை எடுத்திருந்தால் இனம் எந்த அளவு தேசிய எல்லைகளை கடந்து நிற்கும் என்பதை அளவு கண்டிருக்கலாம்.”
      என்ற கூற்றே உஙளால் நிலைமைகளை எவ்வளவு “தெளிவாகப்” புரிந்து கொள்ள இயலும் என்று காட்டுகிறது.
      முதலில் மக்களையும் அரசையும் வேறுபடுத்திப் பார்க்கப் பழகுங்கள். பிறகு பேசலாம்.

  5. xxx says:
    16 years ago

    நடந்த நடக்கிற நடக்கவுள்ள எல்லாத் தலையீடுகளும் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து தானே நடக்கின்றன!
    எதையுமே வாய்ப்பாடாக்குவது பற்றி மாஓவின் மேற்கோள்: “வரட்டு மார்லக்சியம் மலத்தை விட இழிவானது”.

    • a voter says:
      16 years ago

      “எதையுமே வாய்ப்பாடாக்குவது பற்றி மாஓவின் மேற்கோள்:”

      – சுருக்கமாகச் சொன்னால் வாய்ப்பாடாக்குவது பற்றிய வாய்ப்பாடு.

    • xxx says:
      16 years ago

      முதலாவது பகுதியை ஏற்கிறீர்களே. நன்றி.

      ஆமாம், மாஓவின் மேற்கோள் வாய்ப்பாட்டு மட்டைகட்குச் சீரணினிக்கக் கடினமான ஒரு ‘வாய்ப்பாடு’ தான். — “எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்து” எனும் மார்க்சின் ‘வாய்ப்பாடு’ போல.

      • a voter says:
        16 years ago

        எனது முதலாவது குறிப்பு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் நிலைப்பாடு பாட்டாளி வர்க்க “சர்வதேசியக்” கோட்பாடுகளிற்கு உட்பட்டதா என்பது தான்.
        மாநாடு அதிகார வர்க்கத்தின் உள்நோக்கம் பற்றி எச்சரித்திருந்தால் அதனை நான் முழுமனதாக ஏற்றிருப்பேன். மாறாக “வெளிநாட்டு சக்திகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது” என்று கூறுவது சரியல்ல.

        மாநாட்டுத் தீர்மானம் இன்று இந்திய மக்களின் ஒடுக்குமுறைகளிற்கெதிராக நாம் குரல் கொடுப்பதையும் தடுக்கிறது.

      • Shiva says:
        16 years ago

        நீங்கள் விரும்பியவாறே வாசித்துக் கொள்க.
        வாழ்த்துக்கள்.

  6. Garammasala says:
    16 years ago

    “எழுத்தாளர்களும் பிறர்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்து எழுதுகிறபோது, சொந்தப் பெயரில் அதற்கான ஆதாரங்களுடன் எழுத வேண்டும். அத்தகைய ஆதாரங்களையும் இனியொரு வசம் கையளிக்க வேண்டும்”. (பின்னூட்டங்கள் பற்றிய இனியொருவின் வழிகாட்டலிலிருந்து).

    “சுயநலத்திற்காக சிலரை தாக்குவதற்காக இளைஞர்களை ஊக்குவிப்பதும் தேவை முடிந்த உடன் அவர்களை கழற்றி விட்டு முதலாளித்துவ பட்டம் சூட்டுவதும் தாக்குவதும் இவர்களின் வேளை. தேர்தலுக்காக மட்டும் எங்கள் வீட்டிற்கு வரும் புரட்சி தோழா நீ தோழர் என்று உன் சுயநலன்களுக்காக பாவித்த தோழனொருவன் நோயினால் வீழ்ந்த பின் அவனால் பிரயோசனம் இல்லையென்று சென்று விட்டாயாமே”.

    “குறைந்தபட்ச நேர்மைக் கூட இல்லாதவர்கள்” என்ற கூற்றைக் கூட ஒரு தனிப்பட்ட மதிப்பீடு என்று புறக்கணிக்கலாம். “புலி ஆதரவு” என்று டக்ளஸுக்குப் பின்பாட்டுப் பாடுகிற மாதிரி ஒருவர் எழுதிய எளிதாக யாரும் கண்டுகொள்ளக் கூடிய சில்லரைப் புலுடா அல்ல.

    இது ஒரு பாரதூரமான கூற்றச்சாட்டு. ஒரு கட்சி இணையத்தள விவாதங்களில் ஈடுபட இயலாது.

    இனியொரு தன் கொள்கைக்கிணங்க “ஆதாரங்களைப்” பெற்றிருக்குமானால் அதைச் சேர்பிக்கக் கூடிய கட்சி இணையத்தள முகவரி இல்லாவிடின் சொல்லுங்கள் எடுத்து அனுப்புகிறேன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...