புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் புலம்பெயர் பாலியல் ஊடகங்கள்

tears_fakeபுங்குடுதீவில் மாணவி ஒரு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இலங்கை மக்களையும் வாசகர்களாகக் குறிவைத்து நடத்தப்படும் இணைய ஊடகங்கள் கண்ணீர் வடிக்கின்றன. கலாச்சாரம் சீர்குலைகிறது என கூச்சலிடுகின்றன. கொலையைத் தொடர்ந்து பெண்கள் அதிக சுதந்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் நடந்துகொள்கிறர்கள் என ஒப்பாரிவைக்கிறது ஒரு ஊடகம். அந்த ஊடகத்தைக் கீழ் நோக்கி வருடிப்பார்த்தால் முழுவதும் பாலியல் வக்கிரம் கலந்த செய்திகள்.

உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடக்கும் பாலியல் வக்கிரம்கலந்த செய்திகள் திரட்டப்படு வெளியிடப்பட்டுள்ளன.

சமூகப் பற்றும் போர்க்குணமும் கொண்ட புதிய சந்ததியின் சிந்தனையைத் திசைதிருப்பி வக்கிர மனம் கொண்டவர்களாக மாற்றும் இந்த உக்தி அதிகாரவர்க்கங்களால் கையாளப்படுவது. தமது இணையங்களில் விளம்பரங்களைச் சம்பாதித்துக்கொள்ளும் நோக்கில் ஒரு சமூகத்தையே சிதைக்க்கும் இந்த இணையங்களே பாலியல் வன்முறையையும், கலாச்சாரப் பிறழ்வையும் தூண்டும் முகவர்கள்.

கலாச்சரச் சீரழிவை ஏற்படுத்துவதற்குத் துணை செல்லும் ஊடகங்களே அதற்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் வக்கிரம் இங்கு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

One thought on “புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் புலம்பெயர் பாலியல் ஊடகங்கள்”

  1. Make a bank account on that mothers name and ask these people to deposit all the money they took from the advertising.

Comments are closed.