தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார். ‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது. அரசியலை பொருளாதார வாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும் புது ஒழுக்காறை அவரது விமர்சனம் கொண்டிருக்கிறது. அது அரசியல் விமர்சன மரபில் ஒரு புதுச் சிந்தனைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது. வானதிக்கு பயன்படுத்திய congenital liar என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு வழமையான அரசியல் விமர்சனச் சொல் அல்ல. Congenital என்பது ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் ஒரு உரிச்சொல். Congenital என்பது Congenital நோய், Congenital குறைபாடு, Congenital ஊனம் போன்ற பயன்பாட்டில் தான் அதிகம் வருகிறது. அதை நேரடியாக பயன்படுத்தினால் உடல் குறைபாட்டை குத்திக் காட்டும் அநாகரிக சொல்லாக மாறி விடும். உரிச்சொல்லான congenital-ஐ பெயச்சொல்லான liar – உடன் இணைத்து ஒரு புது அரசியல் விமர்சனச் சொல்லை உருவாக்குகிறார். அதே போன்று தான் charlatan என்ற சொல் ஜக்கியின் மோசடியையும், பாசாங்கையும் ஒருங்கே கூர்மையாக ஊடுருவி சென்று தாக்கியது. ஜக்கியை நிலைதடுமாறச் செய்து ஈனக்குரலில் முனக செய்தது.பி.டி.ஆரின் இந்த விமர்சன முறையை ஆதரிக்கத்தக்கதா?பி.டி.ஆருக்கு சில திடீர் நலவிரும்பிகள் உருவாகியிருக்கிறார்கள். ‘உங்கள் திறனை செயலில் காட்டுங்கள்; கண்ணியமாக விமர்சியுங்கள்’ என்பன போன்ற சொற்களால் அவரை மட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள். மொன்னையான அரசியல் விமர்சனங்களை கேட்டுப் பழகிய காதுகள் அவர்களுடையது. தனது விமர்சனக் கணைகளை பி.டி.ஆர் யார் மீது வீசுகிறார் என்பது முக்கியமானது. பொருளாதாரம் பற்றி தெரியாத மக்களையோ, அரசியல்வாதிகளையோ அவர் சிறுமைப்படுத்தியதில்லை. சங்கிக் கூழைகளை தான் முதன்மையாக தாக்குகிறார். கூடுதலாக சுமந்த் சி. ராமன், மாஃபா பாண்டியராஜன் போன்ற சொற்புரட்டர்களை தெரிவு செய்து தனது விமர்சனத்தில் விசைத் துகள்களை நிரப்பிக் கொள்கிறார். ஒரு தேசியக் கட்சியின் ஆற்றல் பி.டி.ஆரால் ஒரு மாநிலக் கட்சியான திமுகவுக்கு திடீரென வாய்த்தது பற்றி வட இந்திய ஊடகங்கள் வாய் பிளக்கிறார்கள். ஏற்கனவே மனநோயாளிகளான தமிழக பாஜக தலைவர்களுக்கு தங்கள் நோயை முற்ற செய்துள்ளது. அது குறித்து நாம் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு வேளை அவர்களின் உருக்குலைவை நேர் செய்யவும் கூடும். நவீன அரசியலின் தர்க்க சாஸ்திரி பி.டி.ஆர்.