பிள்ளையான் – மன்மோகன் சந்திப்பா? விடவே கூடாது என்கின்றது ஜே.வி.பி!

29 – July – 2008
சார்க்’ மாநாட்டில் கலந்துகொள்வதற் காக கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கிழக்கு மாகாண முதல மைச்சர் பிள்ளையானையும் சந்திக்கவுள் ளார் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலா ளரும், எம்.பியுமான விஜித ஹேரத் நேற் றுக் கூறினார்.
இச்சந்திப்பை ஜே.வி.பி. கடுமையாக எதிர்ப்பதாகவும், இச்சந்திப்பு இலங்கைக் குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத் தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் ஜே.வி.பி. நேற்று நடத் திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விஜித ஹேரத் மேற்படி தகவலை வெளியிட்டார்.
மன்மோகன் சிங் பிள்ளையானைச் சந்திப் பதன் மூலம், கிழக்கு மாகாண சபைத் தேர் தல் இந்தியாவின் உத்தரவுப்படியே நடத் தப்பட்டது என்பதும், இந்தியாவின் உத்தர வுப்படியே பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதும் உண்மையா கின்றன என்றும் விஜித ஹேரத் மேலும் கூறினார்.
கிழக்கில் இந்தியாவின் கை ஓங்கப்போகின்றது என்பதை இச்சந்திப்பு மிகத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.