பிள்ளையான் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு!

14.09.2008.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன். தமது சிரேஷ்ட ஆலோசகரின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சந்திரகாந்தனின் சிரேஷ்ட ஆலோசகராக  கலாநிதி கே விக்னேஸ்வரன் செயற்பட்டு வந்தார். இவர் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.இவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிர்வாகப்பொறுப்புகளைச் சிறப்பாக செய்து வந்தார் என்ற அடிப்படையிலேயே அவரின் பதவியை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசாங்கம் இதனை நிராகரித்துள்ள போதும் சந்திரகாந்தன் இந்த பதவியை நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவர் இந்தியாவிற்கு பக்கச் சார்பானவர் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு வந்தது.

இதேவேளை விக்னேஸ்வரன் வடக்குகிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் செயலாளராக பணியாற்றியமை காரணமாகவே அவரை இந்தியச் சார்பானவராகப் பலரும் கருதுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார்.