பிள்ளையான் குழுவின் புதிய ஆலோசகரும் ஈ.பி.டீ.பி இன் கொலையும்.

ஈ.பி.டி.பி இன் முன்னை நாள் ஆலோசகரும் ஆதரவாளாருமான கலாநிதி விக்னேஸ்வரன் ரி.எம்.வீ.பி யின் ஆலோசகராக மகிந்த அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட சுரேஸ்குமார் என்ற பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிள்ளையான் குழுவினரால் நேற்றைய தினம் இரண்டு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். குறித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் மூன்று மணியளவில் ஈ.பி.டி.பி. காரியாலத்தின் பின்புறத்தில் குறித்த சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.