பிள்ளையான் – விமல் வீரவன்ச: புதிய கூட்டு

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை வெற்றியிளத்துள்ளதாக விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் ரி.எம்.வி.பியுடன் தேசிய சுதந்திர முன்னணி பேச்சுகளை நடத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நந்தன குணதிலக்க, அஞ்சான் உம்மா, முஸாமில், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் விமல் வீரவன்ஸ பிள்ளையானுக்கு பேனா ஒன்றை பரிசளித்துள்ளார்.  அரசாங்கத்திற்கு பலன் தரக்கூடிய ஒத்துழைப்பை வழங்குவது குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.