16.11.2008.
அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நான்கு தினங்களுக்கு முன்னர் நந்தகோபன் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், பிள்ளையானிடம் அவர் இந்தியா செல்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட நந்தகோபன் என்ன காரணத்திற்காக இரகசியமாக மலேசியா சென்றார் அவர் அங்கு யாரை சந்தித்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நந்தகோபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என கருணா தரப்பு குற்றம் சாட்டியிருந்த வேளையில், பிள்ளையான் அவரை தனது செயலாளாராக நியமித்திருந்தார்.
நந்தகோபன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்படவில்லை எனவும், அவர் விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும் கருணா தரப்பு தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.
கருணா லண்டன் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், நந்தகோபன் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய நந்தகோபன் இறக்கும் வரையில் தலைவர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்புலத்திலேயே நந்தகோபன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என பிள்ளையான் வலியுறுத்தி வரும் அதேவேளை, இதனை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என கருணா உறுதிபடக் கூறி வருகின்றார்.
இந்த படுகொலைச் சம்பவம் கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை மேலும் மோசமடையச் செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
globaltamilnews.com
அப்ப இப்படி ஒரு தியரி போட்டுப் பார்க்கலாமா?
பிள்ளையான் புலியின்ர ஆள் – ஆதாவது உண்மைப் புலி.
அவர் தொடர்ந்து கருணாவோட இருந்தார்- புலியின் உளவுக்காக.
அவர் புலியின்ர ஆளை – கருணாவை விட்டு நீக்கிய தனது கட்சிக்கு – தலைவர் ஆக்கினார். அவர் நந்த கோபன்.
இவர் இந்தியாவின் ரோவாக இருக்கலாம் – என்கிறது சிறீலங்கா!
இப்ப பிரச்சினை இவருடை அனுசரையினால்தானோ சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சிறப்பு பொலிசு பயிற்சிக்கு சில துணைப்படையின் – பிள்ளையானி ஆக்கள் கிழக்கிலிருந்து சென்றவை?
இப்ப இவர் -நந்தகோபன்- புலி – ரோ டபுள் கேம் விளையாடினாரா?
அப்ப பிள்ளையானுடன் மகந்தவுக்கான உறவு என்ன?
அப்ப பிள்யைானுடன் டக்கிளசுக்கான உறவு என்ன?
அப்ப டக்கிளசுடன் பிள்ளையானுக்கான உறவு என்ன?
அப்ப கருணா அம்மான் எங்க நிக்கிறார்?
அப்ப பரிசில் இருந்து சென்ற இன்ரெலக்சுவல் பத்திரிகை நடத்தினவர் எங்கை நிக்கிறார்?
அப்ப நந்தகோபனுடைய கொலையில் யார் உண்மையான கேம் குடுக்கினம்?
யாருக்கு இந்த கறிப்பிட்ட தலைமைப் பதவி தங்களிடம் இருக்கவேணும் எண்ட ஆசை?
கருணாவா? டக்கிளசா? டக்கிளசின் ஆக்களா? பிள்ளையானின் ஆக்களா? புலியா? மகிந்தவா? அல்லது வே..ற ஆருமா?
இனியொரு.. இயியொரு.. எனக்கொரு வாய்ப்புக்கொடுத்து தணிக்கை செய்யாமல் இதைப் போடலாம் தானே! தணிக்கை செய்யிறதும் கொலை செய்யிறதும் ஒண்டுதானே?
இப்ப ரோ அல்லது புலி அல்லது ராசபக்ச நந்தகோபனைப் போட்டிருக்கலாம்?
அப்ப பிள்ளையான் மற்றும் கருணா என்ன கைப்புள்ளையா?
கைப்புள்ள கைவிட்டிட்டியே என்றா கடைசியில் கிழக்கு தமிழ் மக்கள் கத்துவது?
இந்த ‘கைப்புள்ள” இன்ரெலக்சுவல் கதை விளங்காவிட்டால் நீங்கள் யாரிடம் கேட்பது எண்டு நான் சொல்ல முடியும்.
நீங்கள் இனியொருவை நடத்தாமல் நாண்டு கொண்டு சாகலாம்.
தேசம் நெற்றிலும் பின்னூட்டம் விட்டால் வெட்டுறாய்ங்கள்!
இனியொருவிலும் பின்னுட்டம் விட்டால் வெட்டுறீய்ங்கள்!
நாங்கள் என்ன தனியாவா வெப் நடத்திறது.
என்னதான் செய்யிறது?