தெற்காசிய அரசியலில் வல்லரசுகளினதும் உலக அதிகார மையங்களதும் போட்டிகான களமாக மாறியுள்ள இலங்கையின் தலை நகரில் இலங்கக்கான முன்னாள் அமரிக்கத் தூதுவரும் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர்உமான ரொபட் ஓ பிளேக், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று நண்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மர்ம மனிதன் ஊடாக தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள் மீது கலாச்சார அழிப்பு யுத்ததை நடத்திக்கொண்டிருக்கும் இலங்கை அரசை பிளேக் சந்தித பின்னர் அச் சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாத நடு பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் என உறுதியளித்த ஜனாதிபதி, குறித்த அறிக்கைகிணங்க அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்ததுடன், இரு தரப்பிற்கும் இடையில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் நடைபெறும் எனவும் நாம் தெரிவித்தோம் என அவர் கூறினார்.