எரிக் சொல்ஹெயிம் பிரித்தானியாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு புலிகளே பிரதான காரணம் என்று தனது கருத்துக்களை முன்வைக்கிறார். சொல்ஹெயிம் என்ற உயர் தர ஏகாதிபத்திய முகவரிடம் ஈழம் பெற்றுக்கொள்ள முயன்ற ஐந்தாம் படைகள் ஏமாற்றடைந்தன. நோர்வே அரசு அமரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக உலகம் முழுவதும் மனித இரத்தத்தை உறிஞ்சிய வரலாறுப் புள்ளிவிபரங்கள் நீண்டுகிடக்கின்றன. சொல்ஹெயிமின் தமிழ் பேசும் மக்கள் மீதான தொடர்ச்சியான அக்கறை இயல்பானதல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இலங்கையின் பிரதான பேரினவாதக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவோடு சிங்கக்கொடியோடு மேடையேறியது புறக்கணிக்கப்படத்தக்க நிகழ்வல்ல.
தமிழ் இனவாதத்தின் உச்சத்தைத் தொட்டிருந்த புலம் பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானியப் பிரமுகர் சுரேன் சுரேந்தர் இனிமேல் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாத்தியமற்றது என்று பிரச்சாரம் மேற்கொள்வது அவரின் பட்டறிவிலிருந்து உருவானதல்ல.
80 களின் இறுதியில் ஆரம்பித்து யூகோஸ்லாவியா எங்கும் முளைவிட்ட தனார்வ நிறுவனங்கள் இன்று வரை தேசியவாதத்திற்கு எதிராகப் போராடுவதாக பால்கன் நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது இயல்பானதல்ல.
ஜே.வி.பி இலிருந்து பிரிந்து முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களுள் பிரதானமானவர் பிரேமகுமர் குணரத்தினம். அவுஸ்திரேலியாவைத் தளமகாகக் கொண்டியங்கும் இவர் பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். 07.10.2012 பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டத்திலும், இந்திய அரசு சார்பு வானொலியான ரி.பி.சி இலும் அவர் வழங்கிய நேர்காணலின் போதும் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரித்து மாற்று அரசியல் திட்டம் ஒன்றை முன்வைப்பதாகக் கூறுகிறார்.
பிரேம்குமார் குணரத்னம் கூறுவது என்ன?
1. இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடக் கூடாது.
2. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப்படுவதால் தேசியவாத்திற்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமிழ் இனவாத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து தேசிய இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்.
4. இதனூடான ஐகியத்தல் இலங்கைத் தொழிலாளி வர்க்கம் பலமடையும்; ஆக. வர்க்க்கப்போராட்டம் பலமடையும்.
ரோகண விஜயவீரவின் தலைமையிலான ஜே.வி.பி முன்வைத்த அதே முழக்கங்கள் இன்னமும் ரோகணவை எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் முன்னிலை சோசலிசக் கட்சி இன்னும் அழகுபடுத்தி முன்வைத்திருக்கிறது.
தமிழ் தொழிலாள வர்க்கத்தின் கடமை என்ன?
அவர்கள் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் முழுமையான சுய நிர்ணய உரிமைக்காக, அதனை ஆதரித்து நிபந்தனையின்றிப் போராடவேண்டும். இன்றுள்ள ஏகாதிபத்திய சூழலில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அவர்கள் தலமைதாங்க வேண்டும். சில இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் அதனோடு முரண்படுவதாகவும் குணரத்னம் கூறுகிறார்.
சந்தர்ப்ப வாதிகளும், தமது சொத்துக்களையும் வியாபார நலன்களையும் பாதுகாக்க முனையும் வியாபாரக் கும்பல்களும், ஏகாதிபத்திய- தன்னார்வ அரசியலுக்குள் அகப்பட்டுப்போனவர்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரிக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் அறிந்திராத ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் அதனை நிராகரிக்கவில்லை.
இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு நான்காவது ஆண்டு அண்மிக்கும் நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கின்றது.
சிங்கள தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்ன?
சிங்கள பௌத்த மதகுருக்களால் வளர்க்கப்படும் சிங்களப் பேரினவாதம் சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான போரை நியாயப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. தொடர்ச்சியான இன ஒடுக்குமுறையாலும், திட்டமிட்ட இன அழிப்பாலும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பலவீனமடைந்துள்ள நிலையில், பெருந்தேசியவாதம் பலமடைந்துள்ள நிலையில், தமிழ்ப் பேசும் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க மறுப்பது மிகவும் அபாயகரமானது.
சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் மீள் சூத்திரங்களைக் கவனமாகக் கையாள அழைப்பதனூடாக போலி இடதுசாரிகளும், பேரினவாத அரசும் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுகளைச் சிதைக்கப் பெரும்பாலான தமது நேரத்தைச் செலவிட்டுள்ளன. சிறுபான்மை இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை குறித்த பயங்கரமான விம்பத்தைக் கட்டமைபதனூடாகவும் சுதந்திரம் என்பது சிங்கள பௌத்த அதிகார வர்க்கத்தின் இணக்கத்தன்மை என அவர்களை நோக்கிக் கூறுவதாலும் சிங்காள தொழிலாளர் வர்க்கத்தின் சிந்தனை சிதைக்கப்பட்டுள்ளது.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும், இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகவும், தேசிய இனங்களின் சம உரிமைக்காகவும் (இதனைப் போலி இடதுசாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்) போராடத் தயங்கினால் அவர்கள் மார்க்சிய லெனினியத்திற்குத் துரோகமிழைத்தவர்களாவர்.
சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நிராகரித்து தமிழ் சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தக் கோரும் பிரேம்குமார் குணரத்னம் இதனை மார்க்சிய லெனினியத்தின் பெயரால் அரங்கேற்றுவதுதான் அருவருப்பானது.
இப்போது 1905 ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்துசென்று தனியரசு அமைத்த வேளையின் நடபெற்ற விவாதம் ஒன்றில் லெனின் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.
நோர்வேஜியப் தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்ன?
நோர்வே பிரிந்து சென்ற பின்னர் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் இயல்பாகவே நோர்வே குடியரசுக்காக வாக்களித்தார்கள். யாராவது சோசலிஸ்டுக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருப்பார்களானால், ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில் பிலிஸ்ரைன் சந்தர்ப்பவாதம் எவ்வளவு அடர்த்தியாகப் படர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
சுவீடிஷ் தொழிலாள வர்க்கத்தின் கடமை என்ன?
மதகுருக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நில உடமையாளர்கள் நோர்வே நாட்டிற்கு எதிரான போரை நியாயப்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சுவீடனின் ஆக்கிரமிப்பால் நோர்வே மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், சுவீடிஷ் பிரபுத்துவம் பலமடைந்துள்ள நிலையில், நோர்வேக்கு எதிரான போரை நியாயப்படுத்துவது அபாயகரமானதாகும்.
சுயநிர்ணய உரிமை குறித்த அரசியல் மீள் சூத்திரங்களைக் கவனமாகக் கையாள அழைப்பதனூடாக கொகொசின்கள் சுவீடிஷ் பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுகளைச் சிதைக்கப் பெரும்பாலான தமது நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.
சுய நிர்ணய உரிமைக்காகவும், நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்காகவும், தேசங்களின் சம உரிமைக்காகவும் (இதனை கொகொசின்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்) போராடத் தயங்கினால் அவர்கள் சமூக ஜனநாயகத்திற்குத் துரோகமிழைத்தவர்களாவர்..
நோர்வே சுவீடன் குறித்த பிரச்சனையில் மட்டுமல்ல மேலும் பல சந்தர்ப்பங்கள் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை முதலாளி வர்க்கத்திற்கான உரிமை என்றாலும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவது மார்க்சிஸ்டுக்களதும் தொழிலாளர்களதும் கடமை என்று மேலும் பல விவாதங்களில் லெனின் முன்வைத்துள்ளார்.
பிரேமகுமார் குணரத்தினத்தின் முகத்தில் அறைந்து கூறுவது போன்று லெனின் முன்வைக்கும் பதில்கள் ஒரு நூற்றாண்டுகாலத்திற்கு பின்னரும் இலங்கைப் பிரச்சனையோடு பொருந்துகிறது.
பிரேமகுமார் குணரத்தினம் மார்சியத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டே தனது கருத்துக்களை முன்வைக்கிறார் என்று மட்டும் கூறமுடியாது. லெனின் இதைக் கூறவில்லை வேறு ஒன்றையே பேசுகிறார் என்று திருக்குறளுக்குப் பொழிப்பு எழுதியது போல இவர்கள் புனைவது ஏன்? இவற்றின் பின்புலம் என்ன?
-மிகுதி அடுத்த பதிவில்-








அர்ஜென்டினாவின் செகுவேரா (Ernesto Guevara de la Serna) விற்கே அல்வா கொடுத்த ஜே.வி.பி.யின் செல்லப் பிள்ளையிடம் தாங்கள் இன்னும் எதை எதிர் பார்க்க முடியும். இப்போதைக்கு அவர் தமிழ் பெயரில் உலாவருவதற்கு கூட ஆயிரம் காரணங்கள் உண்டு. எல்லாப்பயல்களும் மிளகாய் அரைத்த தலைதானே தமிழர் தலை இவரும் அரைத்துப் போகட்டும்.
That is what happened in Wanni on May 18, 2009. Double jeopardy. Alfred Thuraiyappah and Rajiv Gandhi combined.
நாவலன் , உங்களுக்கும் ரஜாவுக்கும் இடையில் நடக்கும் ஈகோ போட்டி எப்போ முடியும் ? நீங்கள் தான் சில மாதங்களுக்கு முன் FSP யுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவிதீர்கள். இப்போ
ரஜா கும்பல் தாங்கள் தான் குமாரின் , பாலசிங்கங்கள் என்பது போலா பொழிப்புரை எழுதிறாங்க . போட்டியை விட்டு போட்டு உங்கள் கருத்தின் அடிபடையில் மக்களை அணிதிரடுங்கோ . ஆதரவு எப்போதும் உண்டு !
இவற்றைத் தனி நபர் சார்ந்ததாகக் குறுகலாகப் பார்பது ஆபத்தானது. நேபாளத்தில் பாபுராம் பட்டாராய் போன்றவர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணிவந்த போதிலும் கட்சியின் சந்தர்ப்பவாதப் போக்கிற்கு அடிப்படைக்காரணமாக அவர்கள் வெளித்தெரிந்த போது வெளிப்படையாகவே அவர்களை எதிர்த்து நேபாள இணையத்தில் எழுதியிருக்கிறேன். அந்த ஆங்கிலக் கட்டுரையைப் பின்னதாக நேபாள மொழியிலுன் வங்காள மொழியிலும் அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.
FSP இற்கும் நான் சார்ந்த பிரித்தானிய இடதுசாரி தோழர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே நெருக்கமான உறவு இருந்தது. நான்கு முக்கிய கோட்பாட்டுப் பிரச்சனைகளில் நாம் முரண்பட்டிருந்தோம். சுய நிர்ணய உரிமை, ரோகண விஜயவீரவின் தொடர்ச்சி குறித்து, பாராளுமன்ற அரசியல் பாதை குறித்து, கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்களிடையேயான உறவு குறித்து… சுயநிர்ணயம் குறித்து இன்னும் பொது முடிவிற்கு வரவில்லை என்றார்கள். இதற்கிடையே இனவாத்திற்கு எதிரான அமைப்பு ஒன்றை உருவாக்கிய போது அதனோடான முரண்பாடுகளை FSP உறுப்பினர்களிடம் கூறினேன்.
தாம் முடிவெடுக்கவில்லை என்று கூறிய சுயநிர்ணய உரிமை குறித்த நிலைப்பட்டை ரி.பி.சி வானொலியில் முடிந்த முடிபாகக் கூறியது மட்டுமல்ல நேரடியாகத் தொடர்புகொண்ட போது FSP உறுப்பினர்கள் நான் மார்க்சியத்தை சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்ளவில்லை என்றார்கள். இந்த நிலையில் அவர்களின் நிலைப்பாட்டை கோட்பாட்டு அடிப்படையில் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு தான்.
இதற்கு முன்னதாகவே நேபாளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் redstar பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த சிங்கள தோழர் ஒருவரை அறிமுகப்படுத்திய போது அவருடன் FSP உறுப்பினர்கள் முரண்பட்டார்கள். தவிர, குறிப்பாக எந்தத் தமிழ் அமைப்புக்களோடும் FSP அரசியல்ரீதியான உறவுகள் இருப்பதகத் தெரியவில்லை. தத்துவார்த்த விவாதத்தை அவர்கள் எதிர்மறையானதாகக் கருதமாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
அணிதிரட்டுதல் தொடர்பாக,
முன்னணி சக்திகளை அணிதிரட்டுதல், மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குதல் என்ற இரண்டு வேறுபட்ட தளங்கள் மட்டுமே உண்டு. சீன என்ற பெரிய நாட்டில் 23 பேர் தான் புரட்சியைத் தலைமைதாங்கி முன்னெடுத்தார்கள். இலங்கை சிறிய நாடு. ஆனால் முன்னணி சக்திகள் இனிமேல் மக்கள் மத்தியிலிருந்து உருவாக வாய்ப்புண்டு. அதற்கு உந்துசக்தியாக அமைவதற்கு நானும் நீங்களும் முயற்சிக்கலாம். தவிர, பத்து பேரைச் சேர்த்துவைத்துக்கொண்டு ஜால்ரா போட்டு படம்காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.
இலங்கையில் வாழும் மக்களைப் புலம்பெயர் நாடுகளிலிருந்து அணிதிரட்ட முடியாது. வேண்டுமானால் அது குறித்த பருமட்டான வேலைத்திட்டம் ஒன்றை முன்மொழியலாம். ஐரோப்பாவில் பொருளாதாரச் சரிவின்பின்னர் ஏற்பட்ட சூழல் பல இடதுசாரி அமைப்புக்களுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. மக்களை அணிதிரட்டுதல் குறித்த வேலைத்திட்டத்தை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். இலங்கப் பிரச்சனையும் கூட இணைத்துள்ளார்கள். எது எவ்வாறாயினும் கருத்தை உருவாக்கும் வேலைகள் கூட கூட்டு முயற்சியாகத் தான் அமையவேண்டும் என்ற கருத்தோடு உடன்படுகிறேன்,
தனி நபர்கள் குறித்த முக்கியத்துவம் குறைக்கப்படாவிட்டால் கதாநாயகர்கள் தான் உருவாகுவார்கள், புரட்சிக்காரர்கள் அல்ல.
Ego. That is human nature and it is universal.
Not with lord Buddhah
What do you mean? He was a Prince who attained. Someone will one day write a book a book titled, Hindu Siddartha like the Jewish Jesus that is already published.
அன்று லெனின் இருந்தார் அவருக்குப்பின்னால் மாபெரும் மக்கள் சாம்ராஜ்யம் இருந்தது அதனால் சொன்னார் சொன்னவைகளும் சாத்தியப்பட்டன ஆனால் இன்று லெனின் சொன்னதாக சொல்லும் கருத்துகளைதான் சொல்லலாமே தவிர அதன் சாத்தியபாடுகள் எங்காவது ஓர் இடத்தில் நிரூபிக்கப்படதுண்டா?
Lenin did not build the Russian Empire. He just captured the state power. He was prepared to sell Kamchatka like Alaska.
Again the word Self Determination comes up again here. As I said before it came into being in 1948 the year that Sri Lanka (Ceylon) became independant. Then again it is because of Palestine and Kashmir. That is where analogy and homology is lying and nowhere else.
எரிக் சொல்ஹெம் சொல்வது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒன்று அதாவது இந்தியா சென்றிருக்கும் கூட்டமைப்பிடம் இந்திய அரசு சொல்லவிருப்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்போகின்றது ஆதலால் இனி பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்து காலத்தை கடத்துவதால் யாருக்கும் இப்போதைக்கு தலையிடியில்லை.
Just a lot of talk and flak. It will not translate into something on the ground in the North and East of Sri Lanka – Shri Lanka.