மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்ட பிளவு இன்னும் அதிகமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று புதுக் குடியிருப்பிலிருந்து இனியொருவுடன் பேசிய லலித் குமார், பிளவுகள் தத்துவார்த்த அடிப்படையைக் கொண்டதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை பிரதான இடம் வகிப்பதாககவும் கடந்த சில வருடங்களாக இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் உட்கசிப் போராட்டமாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை ஆதரித்தமை, மகிந்த ராஜபக்சவை ஆதரித்தமை ஆகியன கட்சியின் சந்தர்ப்பவாதப் போக்கு எனப் பிளவுற்றவர்கள் நீண்டகாலமாகவே போராடியதாகவும் தெரிவித்தார். இதே வேளை ரோகண விஜவீரவினையே இன்னமும் தலைவராகத் தாம் கருதுவதாகவும் அவரின் வழியில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.இந்திய பிராந்திய விஸ்தரிப்பு வாதத்தைத் தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த தெளிவான கருத்துக்கள் எதனையும் முன்வைக்காத லலித் மேலதிகமான உரையாடலை நாளை தொடர்வதாகத் தெரிவித்தார்.
ஜே.வி.பி என்ற கட்சி தனது ஆரம்பம் முதலே இனவாதக் கட்சியாக உருவாக்கப்பட்டிருந்தமையையும், மலையகத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை கட்சியின் கொள்கைகளில் கொண்டிருத்தமையையும் அவதானிக்கத் தக்கது. இவை குறித்த தெளிவான வேறுபாடுகளை பிரிவுற்ற பகுதியினர் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
உண் மையில் யே வி பி (மக்கள் விடுதலை முன்னணி ) யாரின் பிரதி நிதிகள் சிங்கள மக்கள் எல்லோரும் தமிழரை வெறுக்கிறார்களா? இல்லையே வெளியாக தமிழர் உரி மையை அங்கீகரிப்பதில் இத்தனை குழப்பம் தேவையா? அது ஒரு மார்க்சிஸ்ட் கட்சி அல்ல. மார்க்சிஸ்ட் கட்சியாக வளர முடியுமோ தெரியவில்லை.