முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்…இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [ 99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த ‘புத்திமத்’ களுக்கு [ சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை.
கடந்த 17 வருட காலமாக , வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை ? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவரும் கூற வேண்டும்.
யாழில் இருக்கும் அரச உத்தியோகத்தர்கள் தடுக்கின்றார்கள் என்று கூறுவது , ஏதோ அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போலவும், அங்கு மக்களாட்சி நடப்பது போலவும், சந்திரசிறியும், சத்துருசிங்காவும் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்யாமல் படை முகாமிலும், அரச விருந்தினர் மாளிகையிலும் முடங்கிக் கிடப்பது போலவும் இருக்கிறது இந்தப் புனைவுக் கதை.
ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசானது, அவர் என்ன சாதி, எந்தப் பிரதேசம், எந்த சிறுபான்மை தேசிய இனம் என்று பார்த்து ஒடுக்குவதில்லை. எதிர்வரும் தேர்தலில், குடாநாட்டு முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து , அரச தரப்பினரால் [ எந்தக் குழு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்] இந்த விவகாரம் கிளப்பப்படுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது









ஐயா
சாதியால் இன்றும் கேவலமாக ஒடுக்கப்படுபவனும் தமிழன் தான், யாழ் நூல்நிலையத்தை திறந்து வைக்க ஒருவர் ( அதிகாரம் இருந்தும் )பட்டபாடும் ,வவுனியா மாநகர சபையில் தொழிலாளர்களை “அரச அதிகாரியே ” சாதி சொல்லி திட்டியதும் நீர் அறியவில்லையா ?
சாதீயத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போதும் இப்படித்தான் ” தமிழர்களின் ஒற்றுமையை ” சண்முகதாசன் குலைக்கிறான் என்று குரைத்தார்கள்.
இந்த உத்தியைத்தான் புலிகளும் சொன்னார்கள். இந்த ஒப்பாரியைத்தான் நீங்களும் இப்போ வைக்கிறீர்கள்.
மற்றவர்களை அவர்கள் அதை ” குறிவைத்து ” என்று எச்சரிக்கும் நீங்கள் எதை ” குறிவைத்துயாரை ” காப்பாற்ற” நினைக்கிரீர்கள் ? மார்ச் மாசம் ஐ.நா சபை என்ன ராஜ பக்சேயை யுத்த குற்றவாளி என்று அறிவிக்கவா போகிறார்கள்? உங்கள் நிலையை கண்டு பரிதாப படுவதை தவிர வேறு வழி இல்லை.
தமிழ் மக்கள் மத்தியில் சாதிய, பிரதேச வேறுபாடுகள் இருப்பது உண்மை. அதை யாரும் இங்கு மறுக்கவில்லையே. வவுனியாவில் மட்டுமல்ல,
புலம் பெயர் நாடுகளிலும் இப்பிரச்சனை இருக்கிறது. இதற்கு எதிராகப் போராட வேண்டியது எமது கடமை. சண்முகதாசனின் இடதுசாரி
இயக்கம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்ததாக நான் சொல்லவில்லை கணேஷ். ‘மக்கள் தடுக்கின்றார்கள்’ என்று சொல்வதைத்தான் நான் எதிர்க்கின்றேன். இங்கு யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவை எனக்கு இல்லை. இராஜபக்ஷவை ஐ.நா.தண்டிக்கும் என்ற கனவில்
நான் வாழவில்லை. எனது எழுத்தைப் பார்த்து பரிதாபப்பட்டதிற்கு நன்றி.
தீபத்தைப் பொறுத்தவரை இதெல்லாம் நேரத்தை கடத்தும் ஒரு உபாயம்.அவர்களுக்கு ஒரு மணித்தியாலத்தை கடத்துவர்தர்க்கு இது போன்ற ஓரளவுக்கேனும் தீர்வுகளை எட்ட முடியாத ,சில நேரம் கருத்துக்களை சொல்ல முனையும் பொது நிழ்ச்சி முடிந்து விடும்.ஏனென்றால் இதை விட மிக “முக்கியமான் நிகழ்ச்சிகளை ” நடாத்துகிறார்கள் அல்லவா ?
கேள்வி நேரம் நிகழ்ச்சியின் உள்ளடி விளையாடுகளை ஒரு பேப்பர் அம்பலப்படுத்தியுள்ளது.