பிரித்தானியாவில் மூன்று வருடங்களின் பின்னர் தமிழர்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாள 4 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை அரசியல் சாசனம், 13 வது திருத்தச் சட்டம், மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மை ஆகியன எரியூட்டப்பட்டன. மகிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வு ஆர்ப்பாட்டங்களால் ரத்துச்செய்யப்பட்ட நிலையில் அவர் உரையாற்றவிருந்த மன்ஷன் கவுசிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந் போதிலும் பிரித்தானிய மாகாராணியின் விருந்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் மனைவி மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.
பல நூற்றுக்கணக்கான இனப்படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட பிரித்தானிய அரச பரமபரைக்கு மகிந்த ராஜ்சப்க்ச பயங்கரவாதத்தை அழித்த ஜாமபவானகவே தெரிந்திருக்கும்.
பெரும்பாலும் மக்கள் தன்னெழுச்சியாகவே இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட போதும், வழமைபோல புலம்பெயர் மேடுக்குடி அரசியல் தலைமைகள் தமது பிரச்சார நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டதைக் காணக்கூடியதாக் இருந்தது.
மகிந்த ராஜபக்சவின் உரை ரத்தானது மக்களின் எழுச்சிக்குக் கிடைத்த தற்காலிக வெற்றி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எது எவ்வாறாயினும் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் நிலையிலுள்ள ஐரோப்பிய அதிகார வர்க்கத்துடன் சமரச நோக்கிலேயே புலம்பெயர் நாடுகளின் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இரண்டு லட்சம் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடியும் அது பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இனப்படுகொலை நிறுத்தப்படவில்லை. ஆக, இந்தப் போராட்டங்கள் அதிகாரவர்க்கம் சார் அரசியலிலிரிந்து விடுவிக்கப்பட்டு புதிய மக்கள் அரசியலை நோக்கி நகர்த்தப்பட வேண்டும். பிரித்தானியாவில் மட்டுமல்ல ஏனைய மேற்கு நாடுகளிலும் மக்கள் பல இழப்புக்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிப்பவர்களுள் புலம்பெயர்ந்தோரும் அடங்குவர். இன்று மீண்டும் அவர்கள் போராடுகிறார்கள். தாம் போராடிப்பெற்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் இப்போது போராடுகிறார்கள்.
ஆனால், அந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் எதிரான அவற்றை ஒடுக்கும் அதிகார வர்க்கத்தோடு கைகோர்க்கும் புலம்பெயர் மேட்டுக்குடி தமிழ அரசியல் தலைமைகள் போராட்டங்களை அடுத்த நிலைக்கு நகரவிடாமல் தடுக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் போராடுகின்ற உழைக்கும் மக்களோடு இணைந்து அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவான அரசியலை முன்வைத்திருந்தால் இன்று அவர்கள் தமிழர்களோடு தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
போர்க்குறற விசாரணைகளுக்கு உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகளை நம்பியிருக்க வேண்டிய தேவை இல்லை. உலக மக்களோடு இணைந்து புதிய பொறிமுறையைக் கூட நாம் முன்வைத்திருக்க முடியும்.
புலம்பெயர் மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் அவர்களை தமது கட்டுப்பாட்டு எல்லைக்குள் பேணிக் கொள்வதற்கு அடிப்படைவாத அடையாளங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மக்களை உணர்வுபூர்வமாகப் போராட்டங்களில் பங்கெடுக்க அழைப்பதற்குப் பதிலாக உணர்ச்சியூட்டும் தந்திரோபாயத்தை முன்வைக்கிறார்கள்.
நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆட்சேர்ப்பதற்காக சிங்கள மக்கள் சிலர் தமிழர்களைத் தாக்கிவிட்டார்கள் என்ற இனவாதப் பிரச்சாரம் இணையங்களில் மேற்கொள்ளப்பட.ன.
அப்படி எந்தச் சம்பவமும் நடக்காத நிலையில் அவமானகரமான இந்தச் செய்தி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. தமிழ்ப் பேசும் மக்கள் இனவாதிகள் அல்ல. அவர்கள் ஒடுக்கப்படுவதால் உரிமைக்காகப் போராடுகிறார்கள். இன்று உலகில் பெரும்பான்மை மக்கள் இதே உரிமைக்காககத் தான் போராடுகிறார்கள்.
அவர்களோடு இணைந்து கொள்ளும் இன்னொரு அரசியல் முன்வைக்கப்பட வேண்டும். அது பரந்துபட்ட மக்களை இணைக்கும், உழைக்கும் மக்களால் தலைமை தாங்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக அமைய வேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்க பிரித்தானியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் அழிப்பிற்குப் பெயர்போன ஸ்கொட்லாண்ட் யார்ட் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் திட்டமிட்டுச் செய்திகள் பரப்பப்பட்டன.
இவ்வறான கொச்சைப்படுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் உணர்வுபூர்வமாகப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
எது எவ்வாறாயினும் மக்கள் சார்ந்த மாற்று அரசியல் முன்வைக்கப்படும்வரை ராஜப்கச மட்டுமல்ல ஆயிரம் இனக் கொலையாளிகள் முளைவிடுவார்கள், அவர்கள் மக்கள அழித்துவிட்டு அரசாட்சி நடத்துவார்கள்.
அந்த அழிப்பிலிருந்து அரசியல் வியாபாரிகள் உதித்தெளிவார்கள். இன்னொரு இனப்படுகொலையும், இன்னொரு அழிவும் தடுக்கப்பட வேண்டுமானால் புதிய போராட்ட அரசியலை முன்வைக்க இது பொருத்தமான ஆரம்பமாக அமையும்.
I think he is personally a good man. He was born in 1945 and in 1970 he came to the parliament as the youngest member. They gave him the honour of reading the vote of thanks. In 1952 his late father D. A. Rajapakse walked out with the late Leader of the House S. W. R. D. Bandaranaike. He studied law and in 1983 he married the beauty queen Shiranthi Wickremasinghe and is blessed with three sons. He lost the momentum at the right time to become a statesman. That is all.
All the Tamils should thank the dedication with which the protest march was organised. This will keep not only our issue live but also to bring the perpetrators accountable
jega
/வழமைபோல புலம்பெயர் மேடுக்குடி அரசியல் தலைமைகள் தமது பிரச்சார நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டதைக் காணக்கூடியதாக் இருந்தது./ யாழ்பாணத்தான்; மேட்டுக்குடி; என்பது தங்களை பிரத்தியேகமாகக் காட்டிக்கொள்வதற்கு பயன்படுத்தும் வார்த்தைகளாக மாறிவிட்டன தம்மைத்தலித்துகள் என்று அடையாளம் காட்ட முயல்வதினூடாக தம்மை முற்போக்குவாதிகளாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். தலித்துகளை யார் முற்போக்குவாதிகள் என்றார்கள்? திருமாவளவன்போல் அப்பாவித்தலித்துக்களை வைத்து சுயநல அரசியல் செய்யும் படுகேவலமான புலத்து தலித்து அரசியல் தெட்டத் தெழிவாகப் தெரிகிறது. தலித்துகளே தலித்துக்களை அடிக்கி ஆழும் நிலையை ஏன் எவராலும் கண்டிக்க முடியவில்லை. இலங்கை அரசில்போல் தமிழர்களையும் புலிகளையும் காட்டி அரசில்நடத்துவதுபோல் மேட்டுக்குடியைக் காட்டி தலித்துக்களிடையே காணப்படும் அடக்குமுறைகளையும் வகுப்பு வாதங்களையும் மறைக்க முயல்கிறீர்கள். போராட்டம் என்பது என்றும் அடிமட்டங்களில் இருந்துதான் தொடங்கப்படவேண்டம் அப்படித் தொடங்காத போராட்டங்கள் முள்ளிவாய்காலில் கவிண்டது போல் கவிழ்ந்து போகும்.
Well said, Veeran.
People have not learnt the lesson yet.
ஆரம்ப காலங்களில் இருந்தே மக்களுக்கு இராணுவம் தொல்லை கொடுத்தால் தான் இயக்கத்திற்கு ஆட்கள் வருவார்கள் என புலிகள் பொது மக்களுக்குள் பல தாக்குதல்களை நடத்தினார்கள். முள்ளி வாய்க்காலிலும் மக்கள் அழிய அழியத்தான் போராட்டம் சர்வ தேசியமாகும் என மக்களை கொல்லக் கொடுத்தார்கள். இப்போதும் சிங்களவர் தமிழனுக்கு அடித்து விட்டான் 3 லட்சம் பேர் பிரித்தானியாவில் பார்த்துக் கொண்டு இருப்பதா மகிநத தங்கியிருக்கும் விடுதிக்கு ஓடி வா என உசுப்பேற்றியுள்ளார்கள். இதில் இருந்தே இவர்களின் நோக்கம் பொது மக்களுக்கு விளங்க வேண்டும். வியாபாரிகள் ஒரே பாதையிலதான் பயணிக்கிறார்கள். மக்கள் தமது பாதையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மீண்டும் முள்ளிவாய்க்கால் தான் முடிவாகும்.
பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு நேற்று புதன் கிழமை (06 .06 .2012 ) லண்டன் பார்க் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இகலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது.
இதில் ஜனாதிபதிஇ ‘முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு’ அண்மைக் காலமாக தாய் நாட்டுக்கு செய்து வருகின்ற முக்கிய பங்களிப்புகளுக்காக தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டதுடன் தொடர்ந்தும் இவ்வமைப்பின் உதவியும் ஒத்தாசையும் நமது தாய் நாட்டை சுவீட்சப் பாதையில் கட்டியெழுப்ப அவசியம் தேவை என்றார்.
இறுதியில்இ இந்தப் புலம் பெயர்ந்த அமைப்பின் உறுப்பினர்கள்இ தமது எதிர்கால திட்டங்கள் பற்றியும் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறினர்.
தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு பற்றியும், தெகிவள மசூதி இடம் மாற்றம் பற்றியும் பேசினார்களா?
ஐயா,எல்லா சமூகத்திலும் வெவ்வேறு குழுமங்கள் இருக்கத்தான் செய்யும், அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். அதற்காக அவர் பிழை இவர் பிழை கூறுவதை தவிர்த்துவிட்டு நீங்கள் (முற்போக்காளர்கள்)ஒருகுடையின்கீழ் ஒன்றுபட்டு வாருங்கள், நீங்கள் ஐக்கியமாகுங்கள்,சர்வதேச முற்போக்காளர்களை நீங்கள் சேர்த்துவந்து போராடுங்கள் அப்போராடத்தின் வீச்சில் எல்லோரும் உங்களை தேடி வரச்செய்யுங்கள்.உங்கள் அர்த்தமான போராட்டத்தை உலகிற்கு அறைந்து சொல்லுங்கள் ஐக்கியத்தின் முக்கியத்துவம் உங்களிடமிருந்து இன்றே ஆரம்பிக்கட்டும்.
உங்கள் அறிவுரைகளை இவர்கள் ஒருபோதும் கேட்கமாட்டார்கள் இவர்கள் அப்படிதான் அப்படியேதான் இருப்பார்கள் நீங்கள்தான் எதாவது செய்தாக வேண்டும் வாருங்கள் தோழர்களே புரச்சிசெய்வோம்….வருவீர்களா? ??
You are right, Jega. It is indeed a partial victory in England. The exodus started in 1956. There was a radio program titled, London Kandiah.
மக்கள் போராட்டம் நடாத்த யாரோ உரிமை கோருவதாக அறிகின்றோம். சென்.கந்தையா, சுரேன் சுரேந்திரன் போன்றோர் இதை நடாத்தியதாக ஒரு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுப் பொய்.
வன்னியில் யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்திருந்தபோது அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த இலங்கையில் வெளிவிவகாகர அமைச்சர் புலம்பெயர் வன்னி மக்களை விடுவிப்பதற்கு விடுதலைப் புலிகளைத் தூண்ட வேண்டும் எனக்கேட்டுள்ளார். இதற்கமைய அமெரிக்க உதவிச் செயலாளர் பௌச்சர் அமெரிக்கா வாழ் புகலிடமக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, குடிமக்களை விடுவிக்க புலிகளைத் தூண்டுமாறு தாம் கேட்டுக் கொண்டதை அவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்று வாசிங்டனிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது 2009 ஏப்ரல் 17ம் திகதி இலங்கையின் அமெரிக்க தூதுவர் ‘இரகசியம்’ என்று குறிப்பிட்டு அனுப்பிய கேபில் செய்தி விக்கலீக்ஸுக்குக் கசிந்துள்ளது. இந்த செய்தியில், ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியாரின் இலங்கை வருகை, பொதுமக்களை போர் நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேற்றல் போன்றவை பற்றி வெளிநாட்டமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் நடாத்திய கலந்துரையாடல்களின் பெறுபேறுகள் பற்றி பிளேக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்திலான ராஜதந்திர வாய்ப்புகளுக்கு இடமளிக்காது போரைத் தொடர்வதில் முனைப்புக் காட்டினால், பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் இலங்கை அடையப் போகும் துர்நிலையைப் பற்றி வெளிநாட்டமைச்சரை எச்சரித்து பற்றியும் அதில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தெற்குச் சிங்கள மக்களைக் குஷிப்படுத்தவும் அப்போது நடைபெறவிருந்த மேற்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டும் ஜனாதிபதி ராஜபக்ஷ கடுமையான போக்கை கடைப்பிடித்தாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சியின் ஒரு பகுதி வேலைத் திட்டமாக புலம்பெயர் தேசங்களிலும் உள்நாட்டிலும் செயற்படும் உண்மைகளை வெளிவராது தடுத்து வரும் மக்களின் எழுச்சிகளை திசைதிருப்பும் இணைய தளங்களில் இருந்து
போலி மனிதர்கள் வரை அம்பலப்படுத்தும் போராட்டமே முதல் தேவை.
அம்பலப்படுத்துகிறேன் பேர்வளிகள் எல்லாம் கொலைகாரனும் கொள்ளைக்காரனும் தான். அம்பலப்படுத்தியே அடிபட்டு சாக வேண்டாம். முதலில் வேலைத் திட்டத்தை முன்வையுங்கள் அரசியல் விவாதத்தைநடத்துங்கள். அதனூடாக அம்பலப்படுத்துங்கள். இப்படி கடந்த காலத்தில் துவக்கு எடுத்தவனும் இப்ப இணையத்தளம்நடதுறவனும் அம்பலப்படுத்த வெளிக்கிட்டு நாத்தம் தாங்க முடியேல்லெ
13 வது திருத்தச் சட்டம், மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மை இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம். மக்களின் உன்மையான உனர்வை தப்பான தலையங்கம் 13 வது திருத்தச் சட்டம் …கொடுத்தது புலிகள் என்பதை அம்பலப்படுத்துகிறேன் http://www.tamilwin.com/show-RUmqyGTcOWhxy.html
போராட்டத்திற்கான அனுமதியை பெற்றவர்கள் உரிமை கோருவதில் தவறில்லை/ ஆனால் மீண்டும் பிழையானவர்களிடம் அதிகாரம் சென்று விடுமோ என்ற பயம் எழதான் செய்கிறது. ஒருநாட்டின் தேசிய கொடியை எரிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது அதுவும் புலிக்கொடியை ஏந்தியபடி.
Three years have gone by they have not taken any steps to have the elections for the Northern Provincial Council. International community especially the American seeing the millitary parades know that there was no fighting. He just kept on pulling back the Forward Defence Line up to May 18, 2009. What a genius?
Manithan, lawyer and parliamentarian Sumanthiran is saying the right thing. Wemay be exposing ourselves in the Internet media.
Sutha, this mosque demolishing is a Provincial level problem. Career politician and the current Minister of Higher Education S. B. Dissanayake once said that this is a Sinhala Buddhist country.
Mathi, now that Sarath Fonseka is released without conditions many things should start surfacing about the final battle. December 1950 birthdays. 1970. Peradeniya campus. Sri Lanka Army. American connections.