நேற்று 23.07.2010 பிரித்தானியாவில் இரண்டு வேறுபட்ட ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. கிளாஸ்கோவில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்துவைப்பதற்காக வருகைதரவிருந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒரு ஆர்பாட்டம் நடைபெற்றது. லண்டனில் ஜூலை படுகொலைகளை நினைவு கூரும் முகமாக மற்றொரு ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாவது ஆர்ப்பாட்டத்தை பெரும் பணச் செலவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் (TCC) இரண்டாவது நிகழ்வை பிரித்தானிய தமிழர் பேரவையும் (BTF)ஒழுங்கு செய்திருந்தன.
புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக லண்டனில் இந்த இரண்டு அமைப்புக்களும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை 2009 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் ஒழுங்கு செய்து நடத்தி வந்துள்ளன. இலங்கை இனக்கொலை அரசுக்கு எதிரான உணர்வைக் கொண்டுள்ள மக்கள் ஆயிரமாயிரமாய் திரண்டு இப் போராட்டங்களில் பங்காற்றி வந்தனர். சிக்கலான பல்வேறு துயரங்களும், வாழ்வின் அவலங்களும் நிறைந்த புலம்பெயர் வாழ்க்கைச் சூழலிலும் மக்கள் தமது உணர்வை வெளிக்காட்டும் நோக்கோடு இப் போராட்டங்களில் பங்கெடுத்து வந்துள்ளனர்.
போராட்டங்களை ஒழுங்கமைத்துத் தலைமை தாங்கும் இக் குழுக்களிடம் தெளிவான எந்த அரசியல் வேலைத்திட்டமும் இல்லை. புலம் பெயர் நாட்டிலேயே தமிழர்கள் எதிர்கொள்ளும் நாளாந்த வாழ்வின் அவலங்கள், கலாச்சார ஆக்கிரமிப்பு, அகதிகள் பிரச்சனை உட்பட எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளும் குறிப்பான வேலைத்திட்டங்கள் இவர்களிடம் இல்லை.
இலங்கையில் நடைபெற்ற ஜூலை இனப்படுகொலை ஈறாக வன்னி இனப்படுகொலை வரை இலங்கை அரசின் பின்புலத்தில் செயற்பட்ட பிரித்தானிய அரசிற்கு எதிராக துரும்பைக்கூட இந்த அமைப்புக்கள் நகர்த்த முன்வந்ததில்லை. தவிர, வெற்றுக் கடதாசி அமைப்பான நாடுகடந்த தமிழீழம் அறிக்கை அமைப்பாக மாறிவிட்டது.
பிழைப்புவாதத்தை மட்டுமே தமது நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்புக்கள் மக்களின் உணர்வை மதித்ததில்லை மாறாக அவர்களை விரக்திக்கு உள்ளாக்கி போராட்டங்களிலிருந்து அன்னியப்படுத்தினர்.
அவ்வாறு அன்னியப்படுத்தப்பட்ட மக்கள் லைக்கா, லிபாரா போன்ற பல்தேசிய வியாபாரக் கம்பனிகள் கட்டவிழ்த்துவிடும் கலாச்சாரத் சிதைப்பில் நயவஞ்சகத்தனமாக முழ்கடிகடிக்கபட்டனர். தென்னிந்திய சினிமாவினதும் தொலைக்காட்சிகளதும் முகவர்களான பணவெறியர்கள் முழு புலம்பெயர் சமூகத்தின் போராட்ட உணர்வைச் சிதைத்துச் சீர்குலைத்து மாய உலகத்திற்கு இழுத்துச் சென்றனர்.
பிழைப்பு வாதப் புலம்பெயர் அமைப்புக்கள் இவை குறித்துத் துயர் கொண்டதில்லை. போட்டி வியாபாரக் குழுக்களோடு தம்மை அடையாளப்படுத்தி தமது பங்கிற்குப் பணம் திரட்டிக்கொண்டனர்.
இவ்வாறு பிழைப்புவாதிகளதும் வியாபாரிகளதும் கைகளில் சிதைக்கப்படும் சமூகங்கள் கலந்துகொண்ட இரண்டு போராட்டங்களிலும் எதிர்பார்த்த மக்கள் தொகையினர் கலந்து கொள்ளவில்லை. இலட்சம் இலட்சமாகக் கலந்து கொண்ட மக்கள் ஆயிரமாயிரம் ஆயினர். இன்று நூறுகளில் வந்து நிற்கின்றது.
மக்களிடம் இன்னும் போராட்ட உணர்வு முற்றாக அழிக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகளான தமிழர்கள் மத்தியில் மக்கள் சார்ந்த வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்காமல் மக்கள் பற்றோடு விவாதங்கள் ஊடாக அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டு அதனை நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட்டால் எழுச்சிகளும் மாற்றங்களும் சாத்தியமே!
1. இவன் இலங்கை அரசுக்கு ஆயுதம் அள்ளிக் கொடுக்கிறான்
ஆனால் ” ஆர்பாட்டம் செய்ய எங்களுக்கு சரியான இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார்கள்” என்று வெட்கம் இன்றி உரைக்கினும் எங்கட வாய்ச் சொல் வீரர்கள்.
2. புலிகளையும் மக்களையும் இலங்கை அரசோடு கூட்டாய் நின்று இவனும் தான் அழிச்சான் “புலிக் கொடி கொண்டு போக இப்பவெல்லாம் பிரச்சனையே இல்லை” என்று நம்ம ராஜ தந்திரிகள் வாய் கிழிய பேசினும்.
3. “மஹிந்த வரவில்லை வெற்றி” என்றுருரைகிறீர் வெட்கம் இல்லாமல், கமரூனும் ஐயா சார்லசும் அங்க போய் விருந்துண்ட சேதியை என்னென்று சொல்வீர் எம் மெத்த படித்த மேதவிகாள்?
BTF,TCC ஆகியவற்ரின் கடந்த கால தமிழீழவிடுதலைப்போராட்டங்களால்
1) தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தார்கள்
2) தமிழ்மக்களை பலிகொடுத்தார்கள்
3) இலங்கைத்தமிழரின் உருமைக்கான போராட்டத்திற்கு சமாதி கட்டினார்கள்
தற்போது
1) ராஜபக்சவிற்கும்,இலங்கை அரசிற்கும் எதிராக ஊர்வலம் செய்கின்றார்கள்
2) இவர்களின் செயல்களினால் தமிழீழம் என்பது கனவாகப்போனதுமன்றி
தமிழரின் சொந்த வீடுகள் காணிகழும் பறிபோகின்றன.
3) சர்வதேச தமிழ் வர்த்தக்ர்கழும் தனிநபர்கழும் சிங்கள அரசியல்வாதிகழுடனும் சேர்ந்து இலங்கையின் நிலங்களை தனிநபர்களிற்கு சொந்தமாக்குகின்றார்கள்.
இவையொன்றுமே இவர்களிற்கு தெரிவதில்லை காரணம் பூனைகளே
பாலிற்கு காவலிருப்ப்து போலவே இவர்களை நம்பி புலம்பெயர் தமிழர்
உள்ளனர். இதற்கு காரணம் இந்த அமைப்புகளின் கட்டுபாட்டினிலேயே
புலம்பெயர் தமிழரின் அபிமான ஊடகங்கள் பல செயற்படுகின்றன.
உண்மைகளை ஆராய்ந்து அறிந்து தமது சுய புத்தியில் தமிழினம்
வாழப்பழகாதவரையில் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர்நாடுகளிலும் அடிமைதழையில் சிக்கியே வாழ்வார்கள்.
You have raised an important point about dwindling struggle of LTTE / nationalists. But What happened to those enlightened organisations even TNA including you?
Before all blame others ask yourselves, is it about changing the political stance of Tamils for a realisable goals or stick to arm struggle for Eelam. Our politics is all about art of possibilities of the oppressed.