இங்கிலந்து வங்கியின் கவர்னரான சேர். மேர்வின் கிங் பிரித்தானியா இன்னொரு பொருளாதார நெருக்கடியை இன்னும் சில மாதங்களில் சந்திக்கப் போகின்றது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமரிக்காவில் லேமன் பிரதேர்ஸ் சிதைந்துபோன 2008 இலிருந்து வங்கிகளுக்குப் பண வருவாய் அற்றுப் போய் வருகிறது. வங்கிகளில் பணம் இன்மையால், வியாபாரக் கடன்களும், வீட்டுக் கடன்களும் வழங்க முடியாத நிலைக்கு வங்கிகள் வந்தடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை பொருளியலாளர் அலன் வூட்ஸ் தெரிவிக்கையில், இப்போது தீர்க்க முடியாத உச்சத்திற்கு வந்துள்ள முதலாளித்துவ நெருக்கடி யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்.
பிரித்தானியா இன்னும் சில வருடங்களில் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வீட்டு விலைகள் பல மடங்காக வீழ்ழ்சிய்டையும் எனவும், சிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் எனவும் பொருளியலாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.