ஐரோப்பா முழுவதும் அந்த மக்கள் போராடிப் பெற்றுக்கொண்ட வாழ்வுரிமைக்களைப் பறித்தெடுக்கும் அரச அதிகாரங்களின் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரம்டைந்துள்ளன. டொமினிக் லெவி போன்ற பொருளியல் வல்லுனர்கள் ஐரோப்பா இன்னும் சில வருடங்களில் மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை எட்டும் நிலைக்கு உருவாகிவிடும் என்கின்றனர். உலக மயமாதலின் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதற்குத் தீர்வாக இந்த நாடுகள் முன்வைகின்ற திட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்தெடுப்பதே என்பதை மேற்கின் அரசுகள் வெளிப்டையாகக் கூறுகின்றன. தவிர, வறிய நாடுகளின் உழைப்பு வளங்களை மேலும் சுரண்டும் திட்டங்களாக அந்த நாடுகளின் மீது அவர்கள் போர் தொடுப்பார்கள் என்பதையும் பல சமூகவியலாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.
பிரஞ்சு அரசின் ஓய்வூதியப் பறிப்புத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.
பிரித்தானிய அரசு பல சமூக நலத் திட்டங்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வீட்டு மானியத் திட்டத்தை நிறுத்தும் திட்டம் 82 ஆயிரம் குடும்பங்களை லண்டனில் மட்டும் வீடற்றவர்களாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர 2 லட்சம் லண்டன் வாசிகள் லண்டனிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
பிரித்தானிய அரசிற்கு எதிராக நேற்று (23.10.2010) ஸ்கொட்லாந்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஆயிரம் ஆர்ப்பாட்டக் காரர்கள் அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய வண்ணம் சென்றனர்.
பிரித்தானிய நிதி அமைச்சுச் செயலர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் அந்நாட்டின் எதிர்காலம் குறித்த முன்னறிவைப்பை சூக்குமமாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உலக மூலதனச் சந்தையில் பிரித்தானியா தனது நம்பகத் தன்மையை இழக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார்.
லண்டன் ஸ்கூல் ஒfப் எகொனமிக்ஸ் என்ற பல்கலக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் பிசாரிடெஸ் கூறுகையில் அரை அரசின் பொருளாதாரத் திட்டங்கள் ஏறத்தாழ அரை மில்லியன் உழைப்பாளர்களை வேலை நீக்கத்திற்கு உள்ளாக்கும் எனவும், இதனால் அரசு பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் அங்கு வாழும் வேற்று நாட்டு தொழிலாளர்கள் நிலை மேலும் கவலைக்கிடமானதாக அமையும் என்ற அச்சம் பலரால் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி போன்ற அனைத்து நாடுகளிலும் தொடர்ச்சியாக நடைபெறும் போராடங்களில் தமிழர்கள் உட்பட அனைத்து வேற்று நாட்டவரும் தம்மை இணைத்துக் கொள்வதன் வழியாகவே தனது இருப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
தொடர்புடைய பதிவுகள் :