Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பிரித்தானிய அதிகாரவர்க்கத்தை அசைத்துப்பார்த்த ஸ்கொட்லாந்து மக்களும் தமிழ்க் கட்சிகளும்

இனியொரு... by இனியொரு...
09/20/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

scottlandமூன்றைரை மில்லியன் மக்கள் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார்கள். மொத்த சனத்தொகையில் 85 வீதமானவர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள். இன்று வரைக்கும் உலகின் எல்லா மூலைகளிலும் ஆணவத்தோடு அழிவு ஆயுதங்களோடு அலையும் பிரித்தானிய அதிகாரவர்க்கத்தை ஸ்கொட்லாந்து மக்கள் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள். ஸ்கொட்லாந்து தேர்தல் முடிவுகளும் அது நடைபெற்ற முறைமையும் பிரித்தானியாவிம் அரசியல் காட்சியை புதிய வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறது.

பிரித்தானிய அதிகாரவர்க்கத்தாலும், பல்தேசிய வியாபார நிறுவனங்களாலும், வங்கிகளாலும் மிரட்டப்பட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். இந்த மிரட்டல்களின் மத்தியிலும் 45 வீதமான மக்கள் தமது வாழ்வின் பெறுமானத்தைப் பாதுகாப்பதற்காக பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
ஸ்கொட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோ பிரிவினைக்கு ஆதரவாக அதிகப்படியான வாக்குகளை வழங்கியுள்ளது.

தாம் விரும்பியவாறெல்லாம் மக்களின் அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் பிரித்தானிய அதிகாரவர்க்கம், இப்போது நின்று நிதானமாகச் சிந்திக்கவேண்டிய சூழலை ஸ்கொட்லாந்து மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

முதலாளித்துவப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். ,மக்களைச் சுரண்டி ஊதிப்பெருத்த நிதி நிறுவனங்களும் வங்கிகளும் போதுமான இலாபம் கிடைக்கவில்லை என்று முனகிக்கொண்டாலே போதும், அவைகளுக்கு பிரித்தானிய அதிகாரவர்க்கம் பில்லியன்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கும். மகளுக்குக் கிடைக்கும் உதவித்தொகைகளை சிக்கனம் என்ற பெயரில் வெட்டுக்களை ஏற்படுத்தி அவர்களை மேலும் வறியவர்களாக்கும்.

ஊதிய உயரவை பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் நிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.

ஸ்கொட்லாந்து மக்கள் மாற்றங்களை எதிர்பார்த்த வேளையில்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆரம்பத்தில் பிரித்தானிய அதிகாரவர்க்கம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பிலிருந்தது.

கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் பிரிவினைக்காகவே அதிகப்படியான ஆதரவு காணப்பட்டது. அதன் பின்னர் பதற்றமடைந்த பிரித்தானிய அதிகாரவர்க்கம் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் ஊடாகவும் வங்கிகள் ஊடாகவும் மக்களை மிரட்டியது. ஸ்கொட்லாந்து வங்கியான ரோயல் பாங் ஒப் ஸ்கொட்லாண்ட் தனது தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றுவதாக மிரட்டியது. மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் போன்ற நிறுவனங்கள் விலைகள் அதிகரிக்கும் எனப் பிரச்சாரம் மேற்கொண்டது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் பணப்பெறுமானம் குறைவடையும் என மிரட்டினார்.

இந்த மிரட்டல்களின் மத்தியில் ஸ்கொட்லாந்து மக்களின் அச்சம் அதிகரித்தது. பிரிவினைக்கு எதிரான வாக்குகளில் பெரும்பகுதி மக்களை மிரட்டியே பெறப்பட்டது.
இன்று முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி உச்சமடைய ஆரம்பித்துள்ளது. மக்களின் வாழ்வாதரங்களை அரசு அழித்துவருகிறது. பல்தேசிய நிறுவனங்களுக்காக பிரித்தானியப் அரசு தனது சட்டங்களை மாற்றியமைக்கிறது.

இந்த நிலை தொடருமானால் ஸ்கொட்லாந்து உட்பட ஐக்கிய ராஜியத்திலுள்ள ஏனைய நாடுகளும் பிரிந்து போகக் கோரலாம். ஸ்கொட்லாந்தில் பிரிவினைக்கான ஆதரவு அதிகரிக்கும்.
ஆக, பிரித்தானிய அதிகாரவர்க்கம் இன்று மிகப்பெரும் நெருக்கடிக்க்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்கொட்லாந்தில் பிரிவினை கோரியவர்கள் இங்கிலாந்தின் உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டலை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.

ஈ.பி.டி.பி யும். நாடு கடந்த தமிழீழமும் ஏனையோரும் பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் அடியாட்கள் போன்றே இப்பிரச்சனையை அணுக முற்படுகின்றனர். வாக்கெடுப்பு நடத்திய பிரித்தானிய அதிகார வர்க்கத்தைப் பாராட்டும் ஈ.பி.டி.பி இதெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை என்கிறது. இதே போன்று பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் அரவணைப்பின் சூட்ட்ல் வாழும் நாடுகடந்த தமிழீழம் குழு வாக்கெடுப்பு நடத்தியதற்காக பிரித்தானியாவைப் பாராட்டுகிறது.

தமக்கு எதிரான நெருக்கடிகள் தோன்றும் போது, முரண்பாடுகளை மறந்து பிரித்தானியக் கட்சிகள் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொண்டன. இவ்வாறே இனக்கொலைக் கட்சி ஈ.பி.டிபி உம் நாடுகடந்த தமிழீழமும் தாம் சார்ந்த அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுகின்றன.

ஆக, இவர்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற்போகுவாதக் கட்சிகளே. இவர்கள் வேறு அரசியல் மொழிகளைப் பேசுவது போன்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தினாலும் அதிகார வர்க்கம் சார்ந்து ஒரு மொழியை மட்டுமே புரிந்துகொள்வார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அறிகுறிகள் : சந்திரிக்கா

இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அறிகுறிகள் : சந்திரிக்கா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...