17 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலையற்றோர் தொகை உச்சமடைந்துள்ளது. இத்தொகை கட்டுப்பாடற்று தொடரும் அடுத்த வருடம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிரித்தானிய அரசாங்கம் மக்களை நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. 16 இற்கும் 24 இற்கும் இடைப்பட்ட வயதினரில் 21 வீதமானவர்கள் வேலையற்றோராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பகுதி நேர வேலை செய்வோர், நிரந்தர வேலையற்றோரின் தொகை குறித்து தெளிவான முடிவுகள் வெளியாகவில்லை. 55 வயதிற்கு மேற்பட்டோரும் வேலையில்லாத் திண்டாடத்தினால் அதிகமாகப் பாதிக்கப்படுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை பணத்தைச் சேமிப்பது என்ற தலையங்கத்தில் பொதுச் சேவையிலிருந்து ஆட்குறைப்புச் செய்வதற்கு பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளது. நவ தாராளவாதக் கொள்கை தனது இறுதியை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் முதலாளித்துவப் பொருளாதாரம் போரையும் இராணுவ மயமாக்கலையுமே தனது உயிர்ப்பிற்காக நம்பியுள்ளது.