வட மாகாண சபை என்ற இலங்கை அரசின் கண்துடைப்புத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலை அரசின் துணைக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ர 13 வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கவும், வட மாகாண சபைக்கு அங்கீகாரம் கோரும் விக்னேஸ்வரன் என்ற கொழும்பு வாழ் தமிழரும் மறுபுறத்தில் பிரித்தானியா வாழ் தவராஜாவும் தேர்தல் நாடகத்தில் பங்குபற்றுகின்றனர். தவராஜா நேரடியாக இலங்கை அரசின் அடியாளாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதே வேளை வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்தும், இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்புகுறித்தும் பேசத் திரணியற்ற மறைமுக அடியாளாக விக்னேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.
அதே வேளை, ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக வடக்கு பிரதேசத்தைக் கருத முடியும் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான “கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தாமாகவே முன்வந்து போராடும் ஒவ்வொரு கணத்திலும் அதனை ஒடுக்குவதற்கு தவராஜாவின் துணைக்குழுக்கட்சி துணை போயிருக்கிறது. அதே வேளை அதுகுறித்து எந்தச் சிந்தனையுமற்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்தியவர் விக்னேஸ்வரன்.
இந்த இரண்டு தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுக்கும் எதிராக தேர்தலை நிராகரிக்க வேண்டிய முடிவை வலியுறுத்தி மக்கள் சார்ந்து போராடும் எந்த அரசியல் தலைமையும் இலங்கையில் இல்லை. அதன் உருவாக்கத்தை அழிதவர்கள் தவராஜா சார்ந்த கட்சி அதனைத் தடுத்தவர்கள் விக்னேஸ்வரன் சார்ந்த கட்சி.
தவராஜா தீபம் தொலைக்காட்சியில் பங்கேற்ற உரையாடலைக் கீழே காணலாம்:
தவராஜா வகையறாக்கள் தேர்தலில் வென்று வடக்கில் ஜனநாயக தேர்தல் நடைபெற்றுவிட்டது ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்றது என்ற மாயையை உருவாக்காமல் தடுக்கவேண்டியது உடனடித் தேவை.
அதற்காக சிங்கள இனவாதியுடன் கூட்டுவைக்காத பசாசையும் ஆதரிப்பதாகவே நான் இருந்தேன்,விக்கினேஸ்வரன் வருகை மன்னார் ஆயர் சொன்னது போல் கடவுள் தந்த பாக்கியமாய் வந்துள்ளது .
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இந்த ஆபத்தை உணராமல் செயல்படுவது கவலை அளிக்கின்றது . இது பற்றி தனியான கட்டுரை எழுத உள்ளேன் அரசியலில் சில வேளைகளில் பிரதான எதிரியை தோற்கடிக்க , இன்னொரு உடன்பாடில்லாத சக்தியுடன் கை கோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்யாமல் வீர வசனம் பேசி காலத்தை உணரா தலைவன் தேசிய பாதுகாப்பை உணராதவன்.
இதற்கு பல உதாரணங்கள் உண்டு ஒரு உதாரணமாக
இந்திய ஆக்கிரமிப்புக் படைகளைத் துரத்த பிரேமதாசாவிடம் நாம் உதவி பெற்றதைக் குறிப்பிடலாம் . அது செய்யப்படாதிருந்தால் எப்பவோ 13 ஆம் திருத்த சட்டமும் மாகாண சபையும் எம் மீது திணிக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு நிலமை தான் இப்பொழுது என்பதை கஜெந்திரகுமாஅர் உண்ர வேண்டியது அவசியம் மட்டுமல்ல காலத்தின் கட்டாயம் .
உங்களது அரசியல் சிக்கலே இங்குதான் ஆரம்பமாகிறது. தவராஜா வென்றாலாவது ஒட்டுக்குழு கள்ள வாக்குப்போட்டு வென்றுவிட்டத் எனப் பிரச்சாரம் செய்யலாம். விக்கி வென்றால் இலங்கையில் ஜனநாயகம் இருப்பதால் தான் வெற்றிகிடைத்தது என்றல்லவா சொல்லுவார்கள். அதுதான் இந்தியாவின் நோக்கமும் கூட, தமிழ் நாட்டுத் தேர்தலில் காங்கிரசிற்கு வாக்குக் கேட்க ஈழம் ஒரு தடையாக இருக்காது. அரசிற்கு எதிரானவர் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் விக்கு ஏற்கனவே சொன்னது போல, நாங்கள் எமது பிரச்சனைகளைப் பார்த்துக்கொள்வோம் எல்லாம் இல்ங்கை அரசுடன் பேசுகிறோம் என்று தமிழ் நாட்டை அடக்கிவிட காங்கிரஸ் வெற்றி பெறும். அத்தோடு கூட நேர்மையாக தமிழ்ப்பேசும் மக்களுக்காகப் போராடுகின்றவர்களும் அழிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் தவராஜாவை நிராகரிக்கும் நிலையில் விக்கியை ஆதரிப்பது ஏன். நீங்கள் சொன்ன காரணம் உண்மையானது, ஆனால் செயற்பாடு பொய்யானது. இதனால் தான் விக்கியும் வேண்டாம் தவராஜாவும் வேண்டாம், இலங்கையில் ஜனநாயகம் இல்லாத பாசிச ஆட்சியில் தான் வாழ்கின்றோம் என்ற உண்மையை தேர்தலை நிராகரித்துச் சொல்லலாமே.
//////தலைமை என்பது மக்கள் மத்தியிலிருந்து உருவாக வேண்டும். அதற்கு ஜனநாயக மத்தியத்துவப் பண்பு வேண்டும் —-Yaroo -Posted on 08/03/2013 at 22:25 .//////// என்கின்றீர்கள் ,
நீங்கள் சொன்ன இரண்டு விடயங்களை இங்கு நாம் தொடலாம் , ஒன்று மேல்தட்டு விவகாரம் , இரண்டாவதாக தலைவன் யார் என்பது ,
முதலாவதாக , //////தலைமை என்பது மக்கள் மத்தியிலிருந்து உருவாக வேண்டும்.//// பற்றிப் பார்ப்போம் ,
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்த மார்டின் லூதர் கிங் ஒரு மேல்தட்டு பாதிரியாரின் மகன் மட்டுமல்ல பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர் தான் ,
தென்னாபிரிக்க ம்க்களின் சுதந்திரத்துக்கு குரல்கொடுத்த நெல்சன் மண்டேலா மேல்தட்டு குடும்பதைச் சார்ந்தவர் தான் , கறுப்பின மக்கள் ஒடுக்கப்படும் நாட்டில் பல்கலைக் கழகம் வரை சென்று சட்டப் பட்டதாரியாக வந்தவர் தான் ,
இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்ததாக நம்பப்படும் மகாத்த்மா காந்தி மேல்தட்டு குடிமகன் மட்டுமல்ல இலண்டனிலும் தென்னாபிரிக்காவிலும் பாரிஸ்டராக பணி புரிந்தவர் தான் .
ஏன் கார்ல் மார்க்ஸ் கூட யூத இனத்தின் மேல்தட்டு குடும்பதைச் சேர்ந்தவர் தான் . அவர் ஒரு யூத மதகுருவின் மகன் மட்டுமல்ல நாஜி ஜேர்மனியில் உயர் கல்வி கற்க வாய்ப்பு பெற்ற யூதர்களில் ஒருவர் தான்.
லெனின் சட்டத் துறையில் உயர் கல்வி கற்று பிரகாசித்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் ,
பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்த புத்த பெருமான் மன்னர் குடும்பத்தில் வந்தவர் தான் ,
சேகுவேரா பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் ,
தலைவர் பிரபாகரன் மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர குட்ம்பத்தில் பிறந்த பல்கலைக்கழகம் செல்லாத அதிசய மேதை அவர் . அவர் மட்டும் தான் பல்கலைக் கழகம் செல்லாத ஒருவர் தேசத்தின் தலைவராக வளர்ந்தவர் என்றால் அவர் மட்டும் தான் . அந்த அவதார புருசன் இழித்தவர்களில் பெரும் பகுதியினர் தான் இன்று நீதி தேவனை இழிக்க முற்படுகின்றார்கள் . பிரபாகரனை தலைவராக ஏற்ற சிலரும் ஏமாறுவது கவலைக்கு உரியது .
இவையெல்லாம் காட்டுவது என்னவென்றால் தலைவன் மேல்தட்டிலும் இருந்தும் வரலாம் கீழ்தட்டிலும் இருந்தும் வரலாம் என்பதைத் தான் . எந்த சாதியில் பிறந்தாலும் மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்
சாதி பார்த்துப் பழகிப் போனதாலோ என்னவோ மேல்தட்டில் பிறந்ததாலோ போதும் ஒரு சாதியாக பார்க்க முனைகின்றீர்கள். அது தவறு நல்ல மனிதன் எந்த சாதியில் இருந்தும் வரலாம் சுவாமி .
இரண்டாவதாக தலைவன் யார் என்பது பற்றி பார்ப்போம், ஒரு தலை வனுக்கு தான் சார் சமூக பிரச்சனைகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற உங்கள் கூற்று பற்றியது . அது சரியான கூற்று 100 % உண்மையானது .
அடக்கு முறை அரசு உரிமை கோரும் அப்பாவி மக்களை நிறுத்தும் இடம் நீதிமன்றம் , சித்திரவதை வாக்குமூலம் , சட்டமீறல் தடுத்து வைப்பு , மனித உரிமை மீறல்கள் அத்தனையையும் கேட்குமிடம் நீதி மன்றம் தான் , அதில் சுபிறீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் அத்தனை விடயங்களையும் அரச இரகசியம் உட்பட தன் கண்கூடாக பார்த்தவராக இருப்பார் . ஐயா விக்கினேஸ்வரன் தனது ஒரு பதிவில் தான் பார்த்த சித்திர வதை ஒப்புதல் வாக்கு மூலங்கள் பற்றியும் அதில் உள்ள மனித உரிமை மீறல் பற்றியும் சொல்லுகின்றார். ஆக அரச அடக்குமுறையின் மூலம் வரை எங்களை விட அவருக்கு நன்றாகவே தெரியும் ,
சமூக பிரச்சனைகளான கொலைகள் , கொள்ளைகள் , கற்பழிப்புக்கள் என எல்லாவற்றையும் விசாரித்து சமூக பின்னணிகளை பிரச்சனைகளின் காரணங்களை அவர் நன்கு அறியும் அரிய வாய்ப்பு பெற்றவர் .
ஆக இரண்டு விடயங்களை இங்கு நான் சொல்லி இருக்கின்றேன் ஒன்று , மேல் தட்டில் இருந்து தலைவன் வரமுடியாது என்ற உங்கள் போக்கு தவறானது மட்டுமல்ல சாதீய பார்வையின் எச்சம் தான் . .
இரண்டாவது , தலைவனுக்கு சமூக பிரச்சனைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூறுவீதம் உண்மை. சமுகப் பிரச்சனைகள் விவாதிக்கப்படும் இடத்தின் தலைவனாக , நடுனநிலையாளனாக இருந்த மனிதனுக்கு, இன்று வரை எந்த தரப்பும் குற்றம் சாட்ட முடியாத விட்டுக் கொடுப்பற்ற நடுனநிலையான தீர்ப்புக்களை வழங்கி இராணுவதைக் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரை விடுவித்த மனிதனுக்கு சமூகப் பிரச்சனை தெரியாது என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் அவரை நீங்கள் அறியாதவராக இருக்கின்றீர்கள்.
சிலருக்கு கடந்த 30 நாட்களாக தான் நீதிபதி விக்கினேஸ்வரன் என்ற பெயரே அறிமுகம் . அந்த தரத்தில் இருந்து நான் பேசவில்லை நீதிபதி விக்கினே ஸ்வரன் என்ற பெயர் முதல் தளபதி சார்ளஸ் அன்ரனி சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சட்டில் பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டு ஐயா விக்கினேஸ்வரன் முன் நிறுத்தப்பட்ட ஒரு தாயும் , ஒரு இளம் பெண்ணும் , அவளின் மூத்த சகோதரனுக்கும் நீதி வழங்கும்பொழுது நீதிதேவன் எப்படி நடந்துகொண்டார் , என்ன நடந்தது என்ற நாளில் இருந்து தெரியும். பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுத்தோரை தெரியும் , அவர்களுக்கு தப்பிச் செல்ல உதவியமை என்பன அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு .
குறிப்பு பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுவோரை காட்டிக் கொடுக்காமை குற்றம் என சிறீலங்கா பயங்கரவாத சட்டத்தில் . உள்ள சரத்து ஒன்று சொல்கின்றது.
மேல் தட்டோ கீழ் தட்டோ “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு “.
தலைவரைத் தேடி ஒரு விசித்திரப் பயணம் என்ற இந்த இணைப்பு பொருத்தமானது என நம்புகின்றேன் . படித்துப் பாருங்கள் .
முதலில் தலைவர்கள் பற்றிக் குறிப்பிடும் போதே மார்டின் லூதர் கிங், காந்தி, கார்ல் மார்க்ஸ், லெனின், சே குவரா, பிரபாகரன் என்ற ஒரு சாம்பாரையே போட்டு வைத்திருக்கிறீர்கள். இவர்களை வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். குறிப்பிட்ட பலர் தலைவர்களே அல்ல, அதிகாரவர்க்கத்தின் அடிவருடிகள். மார்ட்டின் லூதர் கிங்கில் ஆரம்பிப்போமே, அமரிக்காவில் கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மையானவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மத்தியிலிருந்து தமது உரிமைக்கான பல போராட்டங்கள் எழுந்ததன. அப்போராட்டங்களுக்கு வெள்ளையின தொழிலார்கள் மத்தியிலிருந்தும் ஆதரவு ஏற்பட்டது. இந்த வேளையில் ஒருங்கிணைந்த தொழிலாளர் போராட்டத்தை அடையாளப் போராட்டமாக மாற்ற வேண்டிய தேவை அதிகாரவர்க்கத்திற்கு ஏற்பட்டது.
இந்த வேளையில் கறுப்பின அடையாளம் என்ற ஒன்றை வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் நிலை நாட்ட ஒருவர் அதிகார வர்க்கத்திற்குத் தேவைப்பட்ட போது மார்ட்டின் லூதர்கிக் முன்னைலைக்கு வருகிறார். வர்க்கரீதியான இணைவு தடுக்கப்பட்டு கறுப்பின அடையாளம் முன்னிலைக்கு வருகிறது. வர்க்க ஒருங்கிணைவுடன் கூடிய கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைத் தோற்றுவிக்க ஏகபோக அரசின் சதியே கிங் என்பது குறித்த ஆதரபூர்வமான கட்டுரைகள் நிறைய வெளியாகியுள்ளன. இறுதியில் அவர் அமரிக்க உளவுத்துறையாலேயே கொல்லப்பட்டார் என்பது வேறுவிடையம்.
நெல்சன் மண்டேலாவின் அரசியல் கறுப்பின விடுதலையைப் பெற்றுத்தரவில்லை என்பதை கூற ஒரு கட்டுரை தேவைப்படும்.
பிரித்தானியர்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேறும் போது imperial friendly government ஒன்று தேவைப்பட்டது. அதற்காகத் தெரிவானவரே காந்தி. இன்னும் பிரபாகரனது அரசியலை விமர்சிக்க மறுப்பது என்னைப் பொறுத்தவரை துரோகத்தனம். தனிப்பட்ட அவதூறுகள் செய்யும் புலியெதிர்ப்பு கும்பல்களைப் போல அன்றி, பிரபாகரனதும் புலிகளதும் அரசியல் இன்று மக்களை எப்படி அரசியல் அனாதைகளாக்கியுள்ளது என்பதை மக்கள் பற்றோடு பேசப் பழகிக்கொள்வோம்.
இனிமேல் மார்க்ஸ் இன் கதைக்கு வருவோம். மார்க்ஸ் மத்தியதர வர்க்கததைச் சார்ந்தவரே. ஆனால் அவரது வாழ் நாளின் உழைப்பு முழுவதும் தொழிலாளர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. ஒரு நேர உணவிற்குக் கூட வழியின்றி வாழ்ந்திருக்கிறார். குழந்தைகளுக்கு மருந்து வாங்கப் பணமின்றி மரணித்திருக்கின்றன. இன்று பிரித்தானிய ஆர்க் பிஷப் முதல் முன்னை நாள் பிரஞ்சு ஜனாதிபதி வரை மார்க்ஸ் கூறியது சரி என்று தவிர்க்க முடியாமல் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.
ஒருவர் எங்கு பிறந்தார் என்பதில் அவர் எந்த வர்க்க அணியைச் சார்ந்தவர் என்பதை நிறுவ முடியாது அவர் எப்படி வாழ்கிறார் என்பதே அவரது உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.
உங்களது முன்னைய விவாதங்களுக்கான பதில்களில் நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்கள் என்று கருதுகிறேன். இவ்வாறான விடயங்களை பொதுத்தளத்தில் பேசுவதற்கு நீங்கள் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி.
//தலைவனுக்கு சமூக பிரச்சனைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூறுவீதம் உண்மை. சமுகப் பிரச்சனைகள் விவாதிக்கப்படும் இடத்தின் தலைவனாக , நடுனநிலையாளனாக இருந்த மனிதனுக்கு, இன்று வரை எந்த தரப்பும் குற்றம் சாட்ட முடியாத விட்டுக் கொடுப்பற்ற நடுனநிலையான தீர்ப்புக்களை வழங்கி இராணுவதைக் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரை விடுவித்த மனிதனுக்கு சமூகப் பிரச்சனை தெரியாது என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் அவரை நீங்கள் அறியாதவராக இருக்கின்றீர்கள்.//
தலைமைக்கு சமூகப் பிரச்சனை தெரிந்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல சமூகப் பிரச்சனைக்காக மக்களை அணிதிரட்டி மக்களின் பக்கத்திலிருந்து போராடி நீண்ட அனுபவங்களே ஒரு தலைமையை உருவாக்கும். விக்னேஸ்வரன் என்ற தனி மனிதன் அல்ல. வடமாகான சபைக்கு அங்கீகாரம் கோருகிறேன் என்று 60 வருடங்களாக சிறுகச் சிறுகள் அழிக்கப்படும் தேசிய இனத்தின் முன்னால் வாய் கூசாமல் கூறுகின்ற இந்திய அடியாள் அல்ல எமக்குத் தேவை. உலகின் எங்காவது ஒரு மூலையிலிருந்தாவது, நேர்மையாக இந்திய அரசையும், தமிழ்ப் பேசும் மக்களை அழித்த அழித்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், அரச துணைக்குழுக்களையும் அம்பலப்படுத்தி மக்களின் எதிரிகளைத் தடைசெய்யும் தற்பாதுகாப்பிற்கான காலகட்டம் இது. இது நடைபெறுமானால் மக்கள் மத்தியிலிருந்து தலைமை உருவாகும். திடீரென்று வானத்திலிருந்து குதித்த விக்கியின் தற்காலிக சட்ட ஆலோசனைகள் அல்ல.
I disagree with your following statement.
தலைவர் பிரபாகரன் மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர குட்ம்பத்தில் பிறந்த பல்கலைக்கழகம் செல்லாத அதிசய மேதை அவர் . அவர் மட்டும் தான் பல்கலைக் கழகம் செல்லாத ஒருவர் தேசத்தின் தலைவராக வளர்ந்தவர் என்றால் அவர் மட்டும் தான்.
And I agree with the following statement made by an Indian writer.
Prabaharan is a grade 7 drop out cycle thief.
Then how he became a leader. The answer is violence. Tamils feared violence and therefore let him to become a leader. Finally they just kept silence when he died of his own violence.
He was not a அதிசய மேதை but you. Let me tell you this also. Velu Praba was my classmate at Arasady Methodist Mission school at Batticaloa. Do you know that he was born in Batticaloa and not in VVT.
அரசின் மற்றொரு துணைப்படையான சிறிடெலோ வவுனியா மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளது. சிறிடெலோவின் தோற்றத்தில் பிரித்தானிவை சேர்ந்த கீரன் என்ற நபருக்கும்முக்கிய பங்குண்டு.
சிங்கள இனவாத அரசிற்கு வக்காலத்து வாங்கும் இந்த வடக்கில் கண்டால் ***