இதுவரை முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்கு உட்படவில்லை என மார்தட்டிய பிரன்ஸ் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்வதாக இன்றைய INSEE புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பிரான்சின் உள்நாட்டு உற்பத்தி வீதம் இரண்டாவது காலாண்டில் 0 வீதத்திலேயே காணப்படுவதாக அந்தப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. எது எவ்வாறாயினும் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல இன்னும் பொருளாதாரச் சரிவை எட்டவில்லை என்று அந்த நாட்டின் நிதி அமைச்சர் பியர் மொஸ்கோவிச் சமாதானம் தெரிவித்தர். பிரான்சில் கிரேக்கம் மற்றும் இத்தாலியைப் போன்று நாசிக் கட்சிகளின் வளர்ச்சி அச்சம் தருவதாக உள்ளது.