முகமது நபியை இழிவுபடுத்துவது போன்ற அமரிக்கத் திரைப்படம் உலக அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரான்சிலிருந்து வெளியாகும் சார்ளி எப்டோ என்ற வார சஞ்சிகை முகமது நபியின் நிர்வாவாண கார்டூனை வெளியிட்டுள்ளது. இதே வேளை பிரான்சில் குறித்த திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒரு புறத்தில் அமரிக்க ஆதரவு கிறீஸ்தவ அடிப்படைவாதிகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடையேயான வெளிப்படையான போராக இந்த விவகாரம் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள போர் மற்றும் போருக்கு எதிர்க மேலெழும் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் எழுச்சியை இஸ்லாமிய அடிப்படைவாதமாக சித்தரிக்க முயல்வதே அமரிகாவின் நோக்கமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை இஸ்லாமிய அடிப்படைவாதப் போராட்டமாக உலக மக்களுக்கு சித்தரிப்பதும், ஐரோப்பிய மக்களை ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக மாற்றுவதுமே அமரிக்காவின் திட்டமாக இருக்க வாய்ப்புண்டு என கருத்துக்கள் நிலவுகின்றன.
இஸ்லாமியர்கள் இப்போராட்டங்களை மதம் சார்ந்த அடிப்படைவாதப் போராட்டமாக அன்றி, ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான புரட்சிகர இயக்கமாக ஏனைய மக்களுடன் இணைந்து முன்னெடுக்கும் போது மட்டுமே அமரிக்காவின் நோக்கங்களுக்கு எதிராகச் செயற்பட முடியும்.








[youtube http://www.youtube.com/watch?v=v7Sf60Wj7P4&w=560&h=315%5D
Some people purposefully do this at this time in human history just to provoke others. The dimensions of the reactions is different in different parts the world. , It just stinks.
I won’t blame the instigator, as long as these religious fundamentalists are there to fall for it they will keep doing it to bring sufferings to their good Muslims brothers.
ஏகாதிபத்தியம் சூழ்ச்சி எண்டு எண்டெல்லாம் முடிச்சி போட வேணாம், உங்க ஊருலயும் கியுபாவுலயும் கருத்து பேச்சு சுததிரம் இல்லன்னா அதுக்கு மேலை நாட்டானா டேஸ்ட்டு ? போங்கப்பா போயி வேலய பாருங்க. வேணுன்னா உங்க முஸிலீம் நண்பர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்க.
Sevvez, World War Three is on against you know who? Morrocco is also in the ten member Security Council of the United Nations along with Pakistan.