பிரான்ஸ் அணுஉலையில் கசிவு ?

பாரீஸ், ஜூலை 19 –

பிரான்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள டிரிக்காஸ் டின் எனும் இடத்தில் அமைந்துள்ள அணுஉலையில் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, நாடு முழுவதும் உள்ள 58 அணு உலைகளையும் முழுமையாக ஆய்வு செய்யுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக லீ பாரீஷியன் பத்திரிகைக்கு பேட்டி யளித்த அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜீன் லூயிஸ், அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தருமாறு சுயேட்சையான விஞ்ஞானிகள் குழு ஒன்றை நியமித்திருப்பதாக தெரிவித்தார்.

எனினும் அணு உலையில் கசிவு ஏற்பட்டது தொடர் பான முழு விபரத்தை அரசு மறைக்க முயற்சிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரான்ஸ் உள்ளிட்ட 45 நாடுகள் கொண்ட அணு வர்த்தக குழுமத்துடன்தான் அணுசக்தி உடன்பாடு தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.