“விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார் என்றும், அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தின் போராட்ட அரசியலை தனது அரசியல் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் வை.கோபாலசாமி போன்றவர்கள் பிரபாகரனுக்கு மரண அஞ்சலிகூட நடத்தாமல் அனாதையாக்கியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து வைகோ பேசுகையில், நான் எந்த கூட்டணியில் இருந்தாலும் நானும் ம.தி.மு.க.வும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். நான் பள்ளி பருவத்தில் நடந்த கடமை நாடகத்தில் கதாநாயகனாகவும், வீரமுழக்கம் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், சாம்ராட் அசோகாவில் அசோகராகவும் நடித்தேன்.
இப்போது அரசியல் நாடகத்தில் கண்ணீர் வியாபாரியாக நடிக்கும் வை.கோ வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது மக்களையும் புலிகளையும் அங்கிருந்து வெளியேறவேண்டம் என்றும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து காப்பாற்றுவார் என்றும் கூறியவர். இன்று கொல்லப்படும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து புதிய அரசியல் தலைமை தோன்றவிடாமல் பிரபாகரன் வருவார் என இனப்படுகொலை நடந்து ஐந்து வருடங்களின் பின்னும் கூறுகிறார்.
மேலும் பேசுகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைபுலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் 8 ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதே போல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றார். வை.கோ இன் பிழைப்பு ஈழத் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கிறது. ராஜபக்சவிற்கு துணை போகிறது.
தொடர்புடைய பதிவு:
முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வைகோவின் வேட்டிக்குள்ளேயா… மீசைக்குள்ளேயா… பாதுகாப்பாக… மறைந்து உள்ளார்…?
If Vai Ko had really said, this shows about his assessment of Tamil people.
We, the Tamils are fools and will never learn from our mistakes and will never teach a lesson to men like VaiKo.
We don’t have to teach these ‘survival… political… stunt… comedians’
Have to ignore them…!
thiru vaiko is a dramatist/ he uses elam issue for his existence/ now he joins BJP for a few mp seats and../ BJP did not come forward to support even diluted resolution and refused to give consent to call for aa party metting/ VAIKO had disowned sethu samuthra thiittam just to please his new master BJP / IT IS A DISGRACE NOT FOR BUT FOR PERIYAR – a periyarist