சினிமா தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட சத்தியராஜ் பிரபாகரனை ஏன்காட்டவில்லை என்றார்.
“உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்… நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே!” என்றார்
இதனைக் கேட்டுப்பூரித்துப் போன புலம் பெயர் தமிழ் வியாபார இணையங்கள் செய்தியை முக்கியத்துப்படுத்திப் பிரசுரித்தன. சத்தியராஜ் என்ற சினிமாவில் கூத்தாடும் நபருர் தனது பிழைப்பை ஓட்டுவதற்கு ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். அதிலும் அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்கள் கிரிமினல்கள் போல சிறைவைக்கப்பட்டிருக்கும் மண்ணின் இதயத்தில் நின்று இந்தக் கூத்தாடிகள் ஈழத்தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை ஓட்டுகிறார்கள். அருவருக்கத்தக்க அரசியல்வாதிகள், வியாபாரிகள், சினிமாக் கூத்தாடிகள், எழுத்து உலகத்தவர் போன்றோர் இதுவரைக்கும் ஒரு சென்ரி மீட்டர் கூட போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப் பயன்படவில்லை.









அருவருக்கத்தக்க அரசியல்வாதிகள் வியாபாரிகள் சினிமாக் கூத்தாடிகள் எழுத்து உலகத்தவர் போன்றோர் இதுவரைக்கும் தாங்கள் பேரும் புகளும் சம்பாதிக்கத்தான் அனைத்தும் செய்தார்களே அன்றி மக்களுக்காக இம்மி அளவு கூட எதுவும் செய்ததில்லை. இவர்கள் வாயளவில்க் கூறும் மக்கள் நலம்கூட வியாபாரம்தான். அங்கே எந்தப் பொதுநலமும் இல்லை.
இவன் எல்லாம் ஒரு ஆலு இவனுகெல்லாம் ஒரு news … சுயனலம் பிடியத்தவர்கல்….
எதைகூறினாலும் அதற்கான எதிர்கருத்தையும் ஆதரவையும் வழங்கினால் மட்டும் போதாது உண்மைகளை ஏற்க்கும் பக்குவம் அற்ற தமிழினம் என்பதனையே நிரூபிக்கும் எமது நிலையை நாம் சிந்திக்க வேண்டும்.
கேவலம் இத்தனை உயிர்தியாகங்களையும் அர்பணித்த பிறகும் ஒரு வரலாற்றினை அடையாளப்படுத்தி உலக சமூகத்திடம் ஈழவிடுதலை கையளிகப்பட்டு இருக்கின்றதென்றால் அதற்கான அடையாளம் தலைவர்பிரபாகரன் என்பதனை உண்மையான தமிழன் ஏற்றாக வேண்டும்
காரணம் என்ன என்பதனை இந்த உலகம் புரியாது விட்டாலும் அதுவே உண்மை. விடுதலைப்புலிகள் அமைப்பில் நாலுபேர் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒரு உண்மை வரலாற்றை எதிர்த்து நிற்கும் தமிழினம் உண்மைகளை உணர எதிர்காலம் சமூகத்தால் தான் முடியும் என்பதல்ல . தமிழர்களாக யார்வாழ்ந்தாலும் அதுபுரியும் காரணம் நாம் இதனை எழுதுகின்றோம் என்றால் அதற்கான துணிவு எங்கே இருந்து வந்தது என்றால் அது கடந்தகால போராட்டத்தின் ஊடாகத்தான் என்பதனை தமிழினம் உணர வேண்டும: நாம் இந்தக் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமைக்குரிய விடயம் என்பதனை உணராமல் இனியும் அடுத்தவர்களால் புரிய முடிந்ததைக்கூட ஏற்காமல் மாற்றுக்கருத்து தேடும் மகான்மார் இதுவரை காலமும் எதை செய்தார்கள் என்பதனை ஆவது சிந்திக்க வேண்டும்..
இந்தியாவை குறைகாணவோ சர்வதேசத்தை குறைகாணவோ எமக்கு தகுதி இல்லை எத்தனையோ உயிர்தியாகத்தினது அடையாளம் எமது புலம் பெயர்சமூகம் அதனை இழிவு படுத்திவாழும் நாம் எதனை எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்பதனையே உணரவேண்டும் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பினை அடையாளப்படுத்தாமல் ஈழத்தின் விடுதலையை அடையாளம் காண முடியாது சிங்கள தேசத்தை வளர்த்து தமிழினத்தை அடிமைகள் ஆக்க வே நாம் இதனை செய்கின்றோம் என்பதனை இப்படி விமர்சிப்பவர்கள் ஏற்கப்பட வேண்டும்.
முதலமைச்சர் கனவில் மிதக்கும் பிரவுன் தமிழன் சீமானாகட்டும், சத்தியராஜ் ஆகட்டும் தமிழகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்காமல் அல்லது அதற்காக போராடாமல் ஈழம் பெற்றுத் தருகிறோம் என்ற மூச்சுக்கூட விடக்கூடாது. அகதிகளை விடுதலை செய்வது சிம்பிள் மேட்டர். அதை முடிங்க, அதப்பத்தி மொதல்ல பேசுங்க…..
சத்தியராஜ் சொன்னதில் பிழையில்லை. உண்மைதான். இதில் விமர்சிப்பவர்கள் கூறுவதும் உண்மைதான். தமிழர்க்கான இயக்கங்கள் செல்ல வேண்டிய பாதை இன்னும் தூரத்தில் உள்ளது