இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. ‘அமைதியை’ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. அவலத்தின் மத்தியில் வாழப்பழகிக்கொண்ட மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. எங்கும் இருள் சூழ்ந்த நம்பிக்கையிழந்த தமிழ்ப் பேசும் மக்கள் இழந்தவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ராஜபக்ச பாசிசத்தை முறியடிக்க குறைந்தபட்ச வழிகளைக்கூட அடைத்து அருவருப்பாக அழகுபார்க்கிறது ஒரு கூட்டம். பயப்படாதிர்கள் பிரபாகரன் வருவார் என்று ஈழப் பிரச்சனையை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் இன்னும் வாழ்கிறார்கள். வை.கோ ஈழப்த் தமிழர்களின் போராட்டத்தைச் சீர்குலைத்து மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் பிழைப்புவாதிகளின் பிரதானமானவர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சத்தியம் தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ,
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது நம்பிக்கையை கொடுப்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகளா என கேட்கையில்,
என் நெஞ்சால் நேசிக்கின்ற என் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். அவர் இருக்கின்றார். அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார் என்று பதிலளித்தார்.
புலம் பெயர் மக்களை மந்தைகளாக எண்ணும் வை.கோ போன்றவர்கள் ஆரம்பித்த ‘பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் நடத்த மீண்டுவருவார்’ என்று கூறிய பொய், வன்னிப்படுகொலைகளின் பின்னர் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தியது. நாடுகளின் உளவுப்படைகள் கழுகுகள் போன்று இலங்கையைச் சுற்றி வட்டமிடும் நிலையில் வை.கோ வின் பொய் புலம் பெயர் குறும் தேசிய இனவாதிகளுக்கும், ஐந்தாம் படைகளுக்கும் தீனி போடுகின்றது.
மறுபுறத்தில் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை நோக்கி, சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒற்றுமையாக வாழமையே தேசிய இனப்பிரச்சனைக்குக் அடிப்படைக் காரணம் என்று கூக்குரல் போடுகின்றனர் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்கள். இத் தன்னார்வ நிறுவனங்களின் முகவர்களுக்கும், அரச எடுபிடிகளுக்கும் தீனி போடுகின்ற வைகோ போன்ற பிழைப்புவாதிகள் சுய நிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்று கருத்து வலுவடைவதற்குத் துணை போகின்றனர்.
தமிழர்களை முட்டாள்கள் ஆக்குவதில் வைகோவை விட்டால் வேறு ஆளே கிடையாது…… இவ்வளவு நடந்தும் வாய் கூசாது பொய்யையே பேசுகின்றானே ..
President Mahinda Rajapakse once said that he was prepared to talk to somebody. Who is that?