விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் 95 சதவீதம் முடிந்துவிட்டது. புலிகளின் பிரதான கோட்டையாக கருதப்படும் முல்லைத்தீவு நகரையும் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிவிட்டனர். பிரபாகரனின் மறைவிடத்தையும் ராணுவம் கைப்பற்றிவிட்டது. எனவே பிரபாகரன் அங்கிருந்து தப்பியிருக்கலாம் அல்லது வேறு மறைவிடத்தில் பதுங்கியிருக்கலாம்.
அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க உறுதி பூண்டுள்ளோம். அவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பதைக் கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளோம். வடகிழக்குப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அவர் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்பகுதியை இலங்கை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
பிரபாகரனுடன் உள்ள இதர விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களையும் பிடிக்க ராணுவத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தானே தனக்கு மேதகு பட்டத்தை சூட்டிய எமது தேசியத்தலைவர் இந்த அழவுக்கு இறங்கிப்போகமாட்டேர் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
ஆக மொத்தத்தில்,இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா அவர்கள்,தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை வைத்து காமடி பண்ணிக்கொண்டிருக்கிறார்.
என்னத்தை சொல்லுவது, எப்படி எல்லாம் இருந்த தேசியத்தலைவர் இப்படி ஆகிப்போய்ற்றார்.
என்றாலும் பொன்னருக்கு குசும்பு, புலி வால் என்றூ எலிவாலைப்பிடிக்கப்போறார் நிச்சயம் பலனடைவார் புளூகர்ப்பொன்னர்.