Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனைத் தேடிக் கைது செய்ய இலங்கை அரசிற்கு உதவ விரும்பிய அமரிக்கா : விக்கிலீக்ஸ்

இனியொரு... by இனியொரு...
10/28/2011
in இன்றைய செய்திகள்
0 0
32
Home இன்றைய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கோடு அமரிக்காவில் முகாமிட்டுள்ளது. அமரிக்கா எங்கும் அமரிக்க அரசிற்கு எதிரன போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நேற்று பலர் அமரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஏகாதிபத்திய சார்புப் போராட்டமாகவே அது முன்னெடுக்கபட்டு வருகின்றது.
ஒசாமா பின்லடன் கொலை செய்யப்பட்ட வேளையில் இலங்கையிலிருந்த அமரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபெர்ட் ஓ பிளேக் பிரபாகரனும் ஒசாமாவும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருத்து வெளியிட்டார்.
கொழும்பு ரெலிகிராப் இணையம் விக்கிலீக்ஸ் ஆவணங்களிலிருந்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. இலங்கை அமரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியும் அதில் வெளியிடப்பட்டுள்ளது. பிரபாகரனை தேடிக் கைது செய்வதற்கு அமரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுடனும் மனித குலத்தின் எதிரிகளுடனும் கைகோர்த்த மக்கள் விரோத அரசியல் இன்னும் தொடர்கிறது. அவ்வரசியலின் ஊதுகுழல்கள் மக்களை இன்னும் மாயைக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மூவரின் தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் : மத்திய அரசு

Comments 32

  1. நிர்மலன் says:
    14 years ago

    புரட்சி புலுடாக்களே! உங்கள் குற்றச்சாட்டு சரிதான் என வைப்போம்! எங்கே ஒரு தடவை வடகிழக்கு தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சினையை முன்வைத்து ஒரு போராட்டத்தை முடிந்தால் சிங்களபேரினவாதத்திற்கு எதிராக முன்னெடுங்கள் பார்க்கலாம்!

    அடுத்தவன் முயற்சியை நொட்டை சொட்டை சொல்ல மட்டும்தான் உங்களால் முடியும். அதைவிட உருப்படியாக உங்களால் எதுவுமே செய்ய முடியாது.

  2. kokil says:
    14 years ago

    Nirmalan Read this:
    //தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுடனும் மனித குலத்தின் எதிரிகளுடனும் கைகோர்த்த மக்கள் விரோத அரசியல் இன்னும் தொடர்கிறது. அவ்வரசியலின் ஊதுகுழல்கள் மக்களை இன்னும் மாயைக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.// and again read it

    • நிர்மலன் says:
      14 years ago

      அமெரிக்கவாலும் அதன் கூட்டாளிகளிலாலும் ஈராக் லிபியா அழிக்கப்பட்டது என்பது எவ்வளவு உண்மையோ அவர்களால் கொசவா வடசூடான் பொஸ்னியா கிழக்குதீமோர் விடுதலை பெற்றதும் உண்மை. மறுவளமாக கியூபா வியட்நாம் வெனிசூலா மற்றும் இஸ்லாமிய நாடுகளிலாலும் சிறிலங்கா போன்ற இனப்படுகொலை நாடுகள் காக்கப்பட்டதை தவிர வேறு என்ன நடந்தது????
      அரசியலில் நிரந்தர நண்பணுமல்ல நிரந்தர எதிரியுமல்ல என்ற அடிப்படை விளங்காத வரட்டுச்சிந்தாந்த வாதிகளால். புலுடா புரட்சிக்கதைகளும் நொட்டை சொட்டை சொல்ல மட்டும்தான் முடியும்.
      அடுத்தவருக்கு போதிப்பதை குறைத்து செயலில் காட்டுங்களேன் உங்கள் புரட்சி திறமையை. உங்களின் ஒரே நோக்கு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை காப்பது மட்டும்தான். மக்கள் புரட்சி என்பது அடுத்தவரை ஏமாற்றும் ஒரு தந்திரம் மட்டும்தான்.

  3. ethayam says:
    14 years ago

    அடுத்தவன் முயற்சியை நொட்டை சொட்டை சொல்ல மட்டும்தான் உங்களால் முடியும். அதைவிட உருப்படியாக உங்களால் எதுவுமே செய்ய முடியாது.”

    முயற்சி எடுத்த மகத்தான மனிதர்கள் ஏராளம் பேர் என்னவானார்கள் ? அண்ணாமலை விசுவானந்தன் விஜிதரன் விமலேஸ்வரன் போன்ற எண்ணுக் கணக்கற்றவர்களை என்ன செய்தீர்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு மற்றவர்களை குற்றம்சாட்ட முயலுங்கள்.

    • நிர்மலன் says:
      14 years ago

      சிறிலங்கா அரசபயங்கரவாத செயற்பாட்டாளர்கள் உங்களிற்கு மகத்தனவர்கள்! இதைத்தான் முதலிலேயே சொன்னேன் தாங்கள் சிறிலங்கா அரச பயங்கரவாத பக்தர்கள் என்று அதைத்தான் நிரூபித்துள்ளீர்கள்.ஆனால் தமிழ் சமூகத்திற்கு இவர்கள் ஆபத்தான வேண்டப்படாத விசக்கிருமிகள். அதுதான் இவர்களது மரணம் பற்றிமக்கள் கவலைப்படவில்லை.
      மரணத்திற்கும் இழப்பிற்கும் அஞ்சும் தாங்களா புரட்சி செய்யப் போகிறீர்கள்.ஆம் நிஜ புரட்சிக்குத்தானே அர்ப்பணிப்பும் துணிவும் தேவை. புரட்சி புலுடாவிற்கு வெத்துவேட்டு வசனங்கள் போதும்தான். புரிந்து கொள்கிறேன்.

  4. குப்பு says:
    14 years ago

    -நிர்மலன்,  இன்னும் ரத்தப்பசி  தீரேலேயே? குடியுங்கோ தொப்புள் கொடிகள்  தானே. அப்பு,  உங்கட பொஸ்னியா,  தீமோர், எல்லாத்தையும்  தன்னகாக உடைச்ச  உங்கட  அமரிக்க எஜமான்  அடுத்த  -நாளே  ரத்தம் குடிச்ச  கதை தெரியாதோ? இங்க  யாரும்  கியூபாவ  னாயப்படித்தேல்லக் காணும்.   இன்னும் எத்தினநாளைக்கு  மக்கள் ரத்தம் குடிக்கப்போரியள்?

  5. குப்பு says:
    14 years ago

    -நிர்மலன்,  சிறிலங்கா  அரச பயங்கரவாதிகள்  துண்டிவிட்ட  ஆள் தான்  னிங்கள்  என்டு  எனக்கு  கனகாலம்  சந்தேகம்.  இப்ப  மக்கள் போராட வேணும்  அமரிக்காவையும் இந்தியாவையும்  னம்பாதேங்கோ  என்றா  உங்களுக்கு பொதுக்கொண்டு வருது. இப்ப  என்  சந்தேகம்  னிருபிக்கப்பட்டுள்ளது.

    • நிர்மலன் says:
      14 years ago

      “மக்கள் போராட்டம்” என வருகிற சொல்லிலுள்ள “மக்கள்” இல் தாங்கள் சேர்த்தியில்லையா! உங்கள் போராட்டத்தை தொடர யார் தடுத்தது? தாரளமாய் போரடச்சொல்லித்தானே கேட்கிறேன். வாலாட்டிற கும்பலிற்கு ஒரு மக்கள் போராட்ட கதை வேறை.

  6. Mahendra says:
    14 years ago

    பாம்பு தெரிந்து கடித்தாலும், தெரியாது கடித்தாலும் மரணம் மனிதனுக்கே. கடித்த பாம்பைக் கொண்டே நஞ்சை திரும்ப உறிஞ்சவைத்து மனிதன் காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் நிறையவே உண்டு. சோர்ந்துவிடாது, ஒரு நகர்வை மேற்கொண்டு முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையே இந்த சம்பவங்களின் நம்பகத்தன்மைக்கு அப்பால் ஊட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்கா தமிழின அழிவிற்கு துணைபோனதாக அறிந்தாலும், அமெரிக்காவைக் கொண்டே தமிழின இருப்பிற்கு வழிதேட முயல்வதில் தவறில்லை. சிறிய வழி கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்தி வெற்றிபெற தமிழர்கள்தான் போராட வேண்டுமே தவிர அமெரிக்காவையோ பிறநாடுகளையோ நம்பியிருந்தால் தோல்விதான் நிரந்தரமாகும். இன்றைய பொருளாதார உலகம் சுரண்டல் என்ற விஷத்தை உடல் முழுவதுமே கொண்டுள்ளது.

  7. தல says:
    14 years ago

    சிங்கள இனவாதம் எப்படியோ அப்படியே தான் தமிழ் இனவாதமும்.இன்னமும் பழைய கிணற்று தவளை மன்ப்பான்மையிதான் தாங்கள் இருப்போம் என்றால் இன்னும் 100 வருடம்
    போராட்டம் நடத்தினாலும் இந்த தோல்வி தான் கிடைக்கும்.

    கியூபா தலைமையிலா தமிழ் தேசிய வாதிகள் போராட்டத்தை தொடங்கினார்கள்?.இந்தியாவை நம்பி அல்லவா தொடங்கினார்கள். கியூபாவையும் சோஷலிச நாடுகளையும் குறை சொல்வர்தர்க்கு எந்தவிதமான அருகதையும் அற்றவர்கள் தமிழ்தேசிய வாதிகள்.
    இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஓடி போய் குண்டி கழுவும் இந்த நாய்களால் தான் இன்று தமிழ் மக்கள் சீரழிகிறார்கள்.
    இனிமேலும் திருந்த மாடோம் என அடம் பிடித்தால் ,தமிழீழ கிழடன் செல்வா சொன்னது போல் “கடவுளாலும் திருத்தமுடியாது ”

    “அண்ணனுக்கு ” ஆலவட்டம் தூக்கி திரிந்த சீமான் ” அம்மாவின் ” பாவாடைக்குள் ஒளித்துவிட்டார்.அம்மா தேர்தலில் வென்ற பெருமைக்காக சீமானின் சாதியினருக்காக பரமக்குடியில் கொஞ்ச “தமிழர்களை ???!!” சுட்டு தள்ளி விட்டா .
    தமிழ் தேசியம் கேலிக்கிடமானது.

    • நிர்மலன் says:
      14 years ago

      உங்களிற்கு சாதரணதமிழ் புரியாது என்பது தெளிவு. இனி உங்கள் புரிந்த மொழியிலேயே சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.
      அமெரிக்கனுக்கு கழுவும் பழக்கமில்லை ருசுபேப்பருடன் அலுவலை முடித்துக்கொள்ளுவான். இந்நிலையில் யாரும் அவனுக்கு கழுவத்தேவையில்லை.
      தாங்கள்சிங்கள எசமனராதை கழுவினால் கூட பராவாயில்லை நக்கியெல்லோ விடுகிறீர்கள்.
      அப்ப கொம்முனிசம் பேசிக் கொண்டு “ஈழம்” காண போன கும்பல் கியூபாவிடம் போகவில்லையோ? சர்வாதிகார தேசமாம் கியூபாவிலா தாங்கள் வாழ்கிறீர்கள்! எனது கருத்துச்சுதந்திரத்தை மறுக்க தாங்கள் யார்!

    • Kumar says:
      14 years ago

      இலங்கையில் வாழும் தமிழா்கள் தங்கள் அடையாளத்தை,கலாச்சாரத்தை,சுதந்திரத்தை காப்பாற்றிக்கொள்ள எந்தப்பேயோடும் கூட்டுச்சேரலாம் அந்தப்பேய் கம்யூனிஸ பேயா சோஸலிச பேயா முதலாளித்துவ பேயா என்பதை இட்டு எமக்கு எந்த கவலையும் கிடையாது.
      சிலவேளை டக்ளசை,கருணாவை,பிள்ளையானையும் சோ்த்து அமேரிக்கா அழைக்காததால் அவா்களின் அடிவருடிகள் மனமுடைந்துள்ளார்களோ???.

      • Chithra Cheran says:
        14 years ago

        ஆஹா! நிர்மலன் தன்னந்தனியே இந்த நரிக்கூட்டத்திலகப்பட்டுக்கொண்டாரோ? என்று நினைத்தேன். கை கொடுத்த குமார் வாழ்க!
        நானும் , இதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.இவர்களெல்லாம் பேடிகள்! ‘ சூய்’ என்றால் ஓட்டமெடுக்கும் கூட்டம்! இவர்களுக்காக ஏன் நேரத்தை விரயம் செய்யவேண்டும் என்றுதான் வாளாவிருந்தேன். பெண்புலிகளுக்கே இவர்களால் பதில் சொல்லமுடியாது.
        குமார் சொன்னதுதான் சரி! மனமுடைந்துவிட்டார்கள்! கருணாவை, பிள்ளையானையும் அழைத்திருந்தால், தாங்களும் போய் ஏதாவது எலும்புத்துண்டைக் கடித்திருக்கலாமே என்ற ஆதங்கம். வேறொன்றுமில்லை.

        • ragu says:
          14 years ago

          தேசியத்தை வைத்து பெரும் வியாபாரமே நடக்கிறது. கோயில்கள், பள்ளிக்கூடங்கள், சினிமாக்கள், ஊர்வலங்கள், கொடிகள், மாவீரர்தின வருமானம், தமிழ் பொருளாதாரம் கதைக்கும் வியாபார யாவாரிகள், இவை எல்லாவற்றுக்கும் எண்ணை வார்க்கும் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லம் பணத்தைச் சுற்றி அலைகின்றன. எவ்வளவு கேவலங்கள் எல்லாம் நடக்கின்றன? பேஸ் புக்கில் போனால் ஒவ்வொரு பெண்களின் போட்டோ போட்டு தேசியம் பேசும் இணையங்கள் பிரச்சாரம் செய்கின்றன. ஈழ நமீதா, செக்சி சியாமிளா இப்படி.. பெயர்களில் இணையத் தளங்களை விளம்பரம் செய்கிறார்கள். உள்ளே நுளைந்தால் ஈழத்தில் கலாச்சாரம் சீரழிகிறது. தமிழ்ப் பெண்கள் தெய்வங்கள் என்றெல்லாம் கதை கதையாக எழுதுவார்கள்… இவைகளெல்லாம் போராடும் சமூகத்தில் இருந்தா வந்தவை? அவலத்தில் இருந்து எழுந்தவையா?? பயங்கரவாத இலங்கை அரசாங்கம் ஒரு பக்கத்தில் மக்களை மனித மாமிசம் தின்கிறது எச்சங்களை இந்த வியாபாரிகள் தின்கிறார்கள். இவை எல்லத்தினதும் இன்னொரு குறியீடு தான் நிர்மலன் கூட.
          Chithra Cheranகூட

  8. ethayam says:
    14 years ago

    ஆனால் தமிழ் சமூகத்திற்கு இவர்கள் ஆபத்தான வேண்டப்படாத விசக்கிருமிகள். அதுதான் இவர்களது மரணம் பற்றிமக்கள் கவலைப்படவில்லை.”

    மக்கள் கவலைப்படும் உரிமையை எங்கே விட்டு வைத்தீர்கள்? எடுத்ததெற்கெல்லாம் சூடு வெட்டு கொத்து கெலை கடத்தல் என தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து முடித்தும் உங்களுக்கெல்லாம் புத்தியில் உறைக்காது என்பது எமக்கு தெரியும்.

  9. ethayam says:
    14 years ago

    நிர்மலன், அண்ணாமலை விஜிதரன் விமலேஸ்வரன் போன்றோர் பற்றி உமக்கு என்ன இழவு தெரியும் என சொல்லும். எப்படி அவர்கள் விசக்கிரிமிகள் என்பதை இங்கு நிறுவிக் காட்டவும். தலைவருக்கு ஜே என கோசம் போடுவது போல இது லேசான விடயமல்ல.

  10. ragu says:
    14 years ago

    தமிழர்களைத் திருத்த முடியுமா என்பது சந்தேகம் பல ஆண்டுகளாக பலிக்கடாக்களாக தான் வளர்க்கப்பட்டவர்கள். புலம் பெயர் நாடுகளில் தேசியத்தை வைத்து பெரும் வியாபாரமே நடக்கிறது. கோயில்கள், பள்ளிக்கூடங்கள், சினிமாக்கள், ஊர்வலங்கள், கொடிகள், மாவீரர்தின வருமானம், தமிழ் பொருளாதாரம் கதைக்கும் வியாபார யாவாரிகள், இவை எல்லாவற்றுக்கும் எண்ணை வார்க்கும் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லம் பணத்தைச் சுற்றி அலைகின்றன. எவ்வளவு கேவலங்கள் எல்லாம் நடக்கின்றன? பேஸ் புக்கில் போனால் ஒவ்வொரு பெண்களின் போட்டோ போட்டு தேசியம் பேசும் இணையங்கள் பிரச்சாரம் செய்கின்றன. ஈழ நமீதா, செக்சி சியாமிளா இப்படி.. பெயர்களில் இணையத் தளங்களை விளம்பரம் செய்கிறார்கள். உள்ளே நுளைந்தால் ஈழத்தில் கலாச்சாரம் சீரழிகிறது. தமிழ்ப் பெண்கள் தெய்வங்கள் என்றெல்லாம் கதை கதையாக எழுதுவார்கள்… இவைகளெல்லாம் போராடும் சமூகத்தில் இருந்தா வந்தவை? அவலத்தில் இருந்து எழுந்தவையா?? பயங்கரவாத இலங்கை அரசாங்கம் ஒரு பக்கத்தில் மக்களை மனித மாமிசம் தின்கிறது எச்சங்களை இந்த வியாபாரிகள் தின்கிறார்கள். இவை எல்லத்தினதும் இன்னொரு குறியீடு தான் நிர்மலன் கூட.
    இவர்கள் தெரிந்துகொண்டுதான் எல்லாம் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் திருத்தலாம் என்று இனியொரு நினைத்தால் அது மகா தவறு..

  11. varathan says:
    14 years ago

    நிர்மலன் உங்களிற்கு இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன48 மணிநேர அவகாசம் முஸ்லிம்களும் வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி விடுக்கப்பட்டது. புலிகளுக்கு பிரேமதாசா நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கினார்

  12. தல says:
    14 years ago

    எனது கருத்துச்சுதந்திரத்தை மறுக்க தாங்கள் யார்!?
    இதைத்தான் உங்கள் தேசிக்காய் தலைவனிடம் மற்றவர்கள் கேட்டார்கள்.

    மற்றவர்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கிருமிகள் முல்லிவைக்காளில் நசுக்கப்பட்டன ,இதை தான் முன்னாள் கிருமியான கருணா சென்று பார்த்து விட்டு ” ஆமாம் ,சரியாகத்தான் நசுக்கியுல்லீர்க்ள ” என்றான்.
    மக்களை பகடைகாய்களாக வைத்திருந்து விளையாட்டு காட்டியவர்களால் அநியாயமாக மக்கள் தான் அழிந்தார்கள்.அதை வைத்து தான் கல்லா கட்டி வருகிறார்கள்.

    முந்திரிக்கொட்டை போல் ஜனநாயகத்தை / உரிமையை பீத்தும் புலி கோமாளிகள் தங்கள் வெப்சைட் களில் வேறு கருத்துக்களை வெளியிடும் ஆண்மை / நாணயம் எப்போதாவது இருந்திருக்கிறதா ? விமர்சனங்களை எதிர் கொள்ளும் துணிவு புலிகளுக்கு என்றும் இருந்ததில்லை.
    மற்றவர்களுக்கு ஜனநாயகத்தை / கருத்துச்சுதந்திரத்தை/ உரிமையை மறுத்தவர்கள் ,இங்கே கருத்து சுதந்திரம் பற்றி பேச வந்து விட்டார்கள்.
    மானக்கேடு.

  13. நிர்மலன் says:
    14 years ago

    //1990ஆம் ஆண்டு புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன48 மணிநேர அவகாசம் முஸ்லிம்களும் வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி விடுக்கப்பட்டது. புலிகளுக்கு பிரேமதாசா நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கினார்// varathan
    வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறிலங்கா முஸ்லீம்களின் முரண்பட்ட வாக்கு மூலங்கள்.உதாரணத்திற்கு சில.
    1)23.10.1990 ம் நாள் காலையிலேயே ஒலி பெருக்கி அறிவித்தல் ஊரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. ‘இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் புலிகளின் தலைமையகத்திற்கு வந்து வழிப் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் 3 தினங்களுக்குள் ஊரைவிட்டுச் செல்ல வேண்டும்.
    2)குறிப்பாக யாழ் முஸ்லிம்கள் 2 மணித்தியால அவகாசத்தில் 200 ரூபாயுடன் கையில் ஒரு சொப்பிங் பேக் அளவு உடுப்புகளுடன் மாத்திரம் புலிகளினால் ஆயுத முனையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.
    3)இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

    ஆக நடந்த சம்பவத்தை அவர் அவர் தமது கற்பனைக்கேற்ப மிகைப்படுத்துகிறார்கள். அதில்தாங்களும் அடக்கம்.
    1990ல் இந்திய இராணுவதுணைக்குழு உறுப்பினர்கள் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார்களோ அதே அடிப்படையிலேயே சிறிலங்கா முஸ்லீம்களின் மிகக்கண்ணியமாக தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.

    ஆனால் மறுபுற உண்மை கிழக்கு தமிழருக்கு சிறிலங்கா முஸ்லீம்களின் அரசில் வாதிகள் மதத்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இனவழிப்பை வசதியாய் மறைத்துவிடுங்கள். பாலகிகளையே பாலியல் வல்லுறவு புரிந்து கிராமம் கிராமாக தமிழர்களை கொலை செய்து புதைத்தும் கொள்ளையிட்டும் நில ஆக்கிரமிப்பு செய்த படுபாதகத்தை என்ன சிறிலங்கா முஸ்லீம்களின் மார்க்க கடமை என மகுடம் சூட்டப்போகிறீர்களா! வீரமுனை தொடங்கி மூதூர்வரை பறிக்கப்பட்ட தமிழரின் உயிரும் உடமையும் பூர்வீக நிலமும் எவ்வளவு?
    மலையக மக்களின் குடியுரிமை பறிப்புக்கு சிங்கள பேரின வாதத்திற்கு துணைபோனது தொடக்கம் இன்றுவரை தமிழின அழிப்பில் சிறிலங்கா முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு பதிலென்ன சொல்லப்போகிறீர்கள்?????

    //மற்றவர்களுக்கு ஜனநாயகத்தை / கருத்துச்சுதந்திரத்தை/ உரிமையை மறுத்தவர்கள் இஇங்கே கருத்து சுதந்திரம் பற்றி பேச வந்து விட்டார்கள்.//தல

    பன்னியோடு சேரும் பசுவும் ஏதோ தின்னுமாம் என்ற மாதிரி உங்களோடு சேர்ந்த கருணாவும் நக்குகிறார். நாபா ஆரம்பித்ததை டக்ளசுடன் சேர்ந்து கருணா தொடர்கிறார்.சிங்களவரதை நக்கி பிழைக்கும் துணைக்குழு அரசியலை(???) ஆரம்பித்து வைத்ததே சிறிலங்கா முஸ்லீம்கள்தானே!

    ஒரு ஐனநாயக நாட்டு இராணு அமைப்பே தேசத்துரோகிகளிற்கு எங்காவது ஐனநாயக உரிமை கொடுத்திருக்கா? இந்நிலையில் ஒரு இராணுவ அமைப்பிடம் தேசத்துரோகிகளான தாங்கள் ஐனநாயக உரிமையை எதிர்பார்ப்பது நகைப்பிற்கிடமானது.
    //அண்ணாமலை விஜிதரன் விமலேஸ்வரன் போன்றோர் பற்றி உமக்கு என்ன இழவு தெரியும் என சொல்லும். எப்படி அவர்கள் விசக்கிரிமிகள் என்பதை இங்கு நிறுவிக் காட்டவும்.//ethayam
    புலிகளை எதிர்த்து காரைநகர் மக்கள் தமதூரில் இருந்த ரெலோவினரை காப்பாற்றிய போது அதற்கு புலிகள் இடமளித்தார்களே அதெப்படி?
    விமலேஸ்வரனும் விஜிதரனும் இராணுதுணைக்குழுவான புளொட்டின் உறுப்பினர்கள். அண்ணாமலை கொம்முனிச வேடம் போட்ட சிங்கள அரச உளவாளி. இதைவிட வேறு “இழவு” ஈழத்தமிழனுக்கு தேவையில்லை இவர்களை பற்றி அறிய.
    // நிர்மலன் கூட.இவர்கள் தெரிந்துகொண்டுதான் எல்லாம் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் திருத்தலாம் என்று இனியொரு நினைத்தால் அது மகா தவறு..// ragu
    என்ன நிர்மலனை தடைசெய்யச்சொல்லி பரிந்துரைக்கிறீர்களா! யுத்த சூழலில் இராணுவ அமைப்பான புலிகளிடம் ஐனநாயக சுதந்திரத்தை எதிர்பார்த்த உத்தமர்கள்(???) நிர்மலனின் கருத்துச்சுதந்திரத்தை மறுப்பது மிகமிகப்பரிதாபம்.

    • kovilkaaran says:
      14 years ago

      இது எஙகளின் காலம். அதாவது கோயில்காரர்களின் காலம். நாம் பேசுவது மட்டும்தான் நிர்மலசத்தியம். தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் பின்நிற்கும் மாரி தவளைகளை விட்டுத்தள்ளுங்கள். தேசிய தலைவர் ஊரிலுள்ள தலைச்சன்பிள்ளகளையெல்லாம் பீரங்கிகுண்டுக்கு காவுகொடுத்து ,மிஞ்சிய சனங்களை மனிதகேடயமாக்கி, இறுதியில் தனக்குதானே(?) தலையில் கோடாலியால் கொத்திக்கொண்டு கோவண ஆண்டியாய் தற்கொடை செய்துகொண்ட அர்ப்பணிப்புக்கு முன்னால் நிகர் ஏது?(நியாயமற்ற உலகில் நியாயத்தை தேடிய தலைவரின் பட்டறிவுதான் இந்தமுடிவுக்கு காரணம் என சாதிப்போரும் உண்டு) அதெல்லாம் சரி. தலைவருக்கு பாலை ஊத்தி மாவீரர்தினம் கொண்டாடி மெதுமெதுவாய் மகிந்தவின் கச்சைக்குள் சங்கமிக்கமின்ற புலிகளின் குழுவும், தல மீண்டும் வந்து போராட்டத்தை விட்டுச்சென்ற சிறந்தபுள்ளியிலிருந்து மீண்டும் தொடர்வார் என் அறைகூவல் விடுத்தபடி வியாபாரத்தை தொடருகின்ற ( இலுப்பைபழுத்துவிட்டது வெளவால் போல அமெரிக்கா வந்து நாடுபிடித்து தரும். நாம் இஸ்ரேலை போல வாழலாம் என்ற கிளைவியாபாரம் வேறு) இன்னொரு குழுவும் முட்டி மோதுகின்றதாமே. நீங்கள் எதிலை சேர்த்தி?…

    • veeran says:
      14 years ago

      1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி
      வடக்கில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு., 78,000 முஸ்லிம்கள் 72 மணித்தியாலங்களுக்குள் விரட்டப்பட்டனர்!
      இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
      1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
      ‘யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்’இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.
      ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
      தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களைப் போலன்றி வடக்கே வாழ்ந்த முஸ்லிம் மக்களின் பேச்சுமொழி தமிழ்தான். அதுவும் பிரதேசப் பேச்சுவழக்கிலேயே இருந்தது. தமிழ்மக்களின் விடிவுக்காக ஆயுதமேந்துகிறோமென்று கூறிக்கொண்ட புலிகள், தமிழையே பேச்சுவழக்காகக் கொண்ட முஸ்லிம் மக்களை ஆயுத முனையில் விரட்டினார்கள். இது அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை.
      வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்ட காலப் பகுதியை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்ட இந்தியப் படையினர் 1990ஆம் ஆண்டு மார்ச் முடிவுக்கு முன்னராகவே வெளியேறிச் சென்றுவிட்டனர். இந்தியப் படையை வெளியேற்றக் கோரியும் அரச அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடனும் தென்னிலங்கையில் ஜே.வி.பி.ஆயுதத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருந்த காலமது.
      வடக்கிலும் கிழக்கிலும் நிலை கொண்டிருந்த இந்தியப் படைக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப் படை நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் காட்டுப் பகுதிக்குள் விரட்டப்பட்டிருந்த புலிகள், இந்தியப் படை வெளியேறிய பின்னர் வடக்கு, கிழக்கில் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
      1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடெங்கும் இடம்பெற்ற வன்செயல்களுக்கு மத்தியில் ஜனவரி 2ஆம் திகதி ரணசிங்க பிரேமதாச இலங்கை அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். செயலாற்று அதிகாரமிகு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுமே சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜே.வி.பி.க்கும் புலிகள் இயக்கத்துக்கும் பிரேமதாசா அழைப்பு விடுத்தார். உத்தியோகபூர்வமக இந்த அறிவிப்பு 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி விடுக்கப்பட்டது. புலிகளுக்கு பிரேமதாசா நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கினார்.
      ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா, புலிகள், ஜே.வி.பி. ஆகிய முத்தரப்பினருக்குமே இந்தியப் படையின் வெளியேற்றம் பொது இலக்காக இருந்தது. இந்தியப் படையின் இறுதி அணி 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது. இந்தியப் படை வெளியேறிக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தின் மீது புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்தனர். சுமார் 14 மாதங்களாகப் பிரேமதாசா அரசாங்கத் தரப்பினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவந்த சமாதானப் பேச்சுவார்த்தையும் இடைநடுவில் முறிந்தது. 1990ஆம் ஆண்டு ஜூன் பத்தாம் திகதி புலிகள் இரண்டாவது ஈழப்போரை ஆரம்பித்தபோது வடக்கு கிழக்கில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
      1980களின் நடுப்பகுதியில் புலிகள் இயக்கத்துடனும் ஏனைய தமிழ் விடுதலை அமைப்புகளுடனும் இணைந்து சில முஸ்லிம் வாலிபர்களும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனமென்ற கோரிக்கை இதன் பின்னர் வலுவடையத் தொடங்கியது. அத்துடன் புலிகளின் தனித் தமிழீழக் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் வலுவாக எதிர்த்தது. முஸ்லிம்களுக்கான சுயாட்சிப் பிரதேசக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. காலப் போக்கில் இலங்கை அரசின் ஊர்க்காவல் படைகளில் முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குப் பின்னால் முஸ்லிம்கள் அணிதிரளத் தொடங்கியதும் புலிகளுக்குப் பிரச்சினையாகியது. காலவோட்டத்தில் முஸ்லிம் மக்களைப் புலிகள் துரோகிகளாகப் பார்க்கத் தொடங்கினர்.
      வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.
      இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.
      1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அவரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
      வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
      வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது. கிழக்கிலங்கையில் அன்றைய யுத்தச் சூழ்நிலையில் ‘ஜிகாத்’ நடத்த முயன்ற சில வெறியர்கள் அப்பாவித் தமிழர்கள் சிலரை வேட்டையாடினார்கள் என்ற உண்மையையும் மறுதலிக்க முடியாது. இன, மத ரீதியான கோர முகத்துடன் ஜிகாத்துகளைத் தலையெடுக்காமல் தடுத்த நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம் தலைவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
      கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற இந்த மோதலில் படையினரிலும் புலிகளிலும் பார்க்க அப்பாவி மக்களின் உயிர்களே பெருமளவுக்குப் பலியெடுக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம் மக்களை மட்டுமல்ல, எல்லைக் கிராமங்களிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களை வகை தொகையின்றிக் கொன்றிருக்கிறார்கள். அதேபோன்று கொக்கட்டிச்சோலை, மைலந்தன்னை, வவுனியா உட்படப் பல்வேறு தமிழ்ப் பிரதேசங்களிலும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள்.  
      யுத்தம் பெருமளவில் காவு கொண்டது அப்பாவிகளைத்தான்.
      சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி இனவெறியர்கள் சிலரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் அப்பாவி மக்களுக்குள் பாய்ச்சிய இனவாதம் இன்றுவரை அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசங்களால் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  இன்றுவரை தீர்க்கப்படாத இனப்பிரச்சினையால் இலங்கை தேசம் கண்ணீரில் மிதக்கிறது. 
      எஸ்.அருளானந்தம், முன்னாள் பிரதம ஆசிரியர்-தினகரன
      நன்றி: தமிழ்க்குரல்

  14. கொடுமுடி says:
    14 years ago

    கவனம் கண்டியளோ…. இந்தப் புலி விசிலுகள் அமரிக்காவையோ இந்தியாவையோ கூட்டிக்கொண்ந்து அடிச்சுப் போடுவாங்கள் கண்டியளோ.. நானும் பேசாமத் தான் இருந்தனான் .. அவங்கட யாவாரத்தில நீங்கள் கைவைக்கேக்க விடுவினையே? பாவியள் சனத்த மண்மூட்டையா பாவிச்சு கொண்டுபோட்டு ஒரு வெக்கம் ரோசன் இல்லாமலுகு இன்னும்… எல்லாம் யாவாரம் தான் .. இப்புடியே போனா மகிந்தனுக்கு அடிக்க வெண்டிய சனம் உவங்களத் தான் அடிக்கும் …..

  15. veeran says:
    14 years ago

    மலையக மக்களின் குடியுரிமை பறிப்புக்கு சிங்கள பேரின வாதத்திற்கு துணைபோனது தொடக்கம் இன்றுவரை தமிழின அழிப்பில் சிறிலங்கா முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு பதிலென்ன சொல்லப்போகிறீர்கள் இது பச்சை பொய், தமிழ்தலைவர் பொன்னம் பலம் தான் பேரின வாதத்திற்கு துணைபோனது, மலையக தமிழர்கலளில் இந்திய முஸ்லிம்களூம் அடக்கம்,

  16. நிர்மலன் says:
    14 years ago

    அமெரிக்கா உபயத்தில் ஈரானிய கியூபமக்களிற்கும் விரைவில் சுதந்திரம் கிடைக்கும் போலுள்ளது.
    1)இரான் இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது: கிளிண்டன்
    கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 அக்டோபர், 2011 – 15:26 ஜிஎம்டி
    Facebook Twitter பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .இரானை நிஜமாக யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுவது இரானிய அரசாங்கத்துடன் உறவாட அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கின்றன என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹில்லரி கிளிண்டன் பிபிசி பெர்ஷியன் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    “அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்த உடனேயே தான் இரானிய ஆட்சியாளர்களுடன் பேசுவதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் முயற்சி எடுக்கத் தயார் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் அந்த நாட்டில் யார் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. ஆதலால் அதிபர் ஒபாமா முயன்றிருந்தும் பலன் ஏற்படவில்லை” என்று கிளிண்டன் குறிப்பிட்டார்.

    இரான் ஒரு இராணுவ சர்வாதிகாரக் கட்டமைப்பாக உருமாறிவருகிறது என்று தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.

    இரானிய அரசாங்கத்துடன் உறவாட முயன்று பலன் தராத நிலையில், இரானிய மக்களுடன் வேறு வழிகளில் உறவாட அமெரிக்கா முயற்சிகள் எடுத்துவருவதாக கிளிண்டன் தெரிவித்தார்.

    அந்த நோக்கத்தில் இரானிய மக்களுக்கென ‘இணையத்தில் அமைந்திருக்கக்கூடிய தூதரகம்’ ஒன்றை இந்த வருஷக் கடைசிக்குள் அமெரிக்கா ஏற்படுத்தவிருப்பதாக ஹில்லரி குறிப்பிட்டார்.

    இரானிய அரசாங்கத்துக்கு எதிராக இனி அந்நாட்டில் சீர்திருத்தப் போராட்டம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே சர்வதேச உதவிகளை நாடுதல் நலம் என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

    2)கஸ்ட்ரோ சகோதரர்களிடம் இருந்து கியூபாவுக்கு விடுதலை தேவை: ஹிலரி வீரகேசரி இணையம் 10/29/2011 3:53:38 PM
    பிடல் கஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து வெளியிட்டுள்ளார்.

    வொஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

    “கியூபா விடயத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ அதையே தற்போதும் கொண்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பிடல் காஸ்ட்ரோவின் பிடியில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்.

  17. ethayam says:
    14 years ago

    உங்கள் தலைவரும் அமெரிக்க கப்பல் வரும் என அண்ணாந்து காத்திருந்தவர்தானே. இப்பவும் அமெரிக்கா பிரித்தானியாவின் கால்களை நக்க எப்போது கூப்பிடுவார்கள் என வாய் பிளந்து காத்திருக்கும் நீங்கள் உங்கள் தலைவனின் கொடுமைகளை எதிர்த்து வீரமுடன் செயற்பட்டவர்களை நச்சு விதைகள் என்றுதான் சொல்ல முடியும். அப்படி கூக்குரல் இட்டபடிதான் உங்கள் கல்லாவை நிரப்ப முடிந்தது. கியுபா விடுதலை பெற வேண்டும் என அமெரிக்கா சொல்வதன் பொருள் புரிந்த உங்களுக்கு பிரபாகரனின் செயற்பாடுகள் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து விடும் என்பது புரியாதது போல் இருந்து விட்டீர்கள்.

    • நிர்மலன் says:
      14 years ago

      ஒருவரின் வழமையான செயற்பாடுதான் அவரது உரையாடலில் சர்வசாதரணமாக வெளிப்படும் என்பது இயல்பானது. “நக்க” என்ற செயல் உங்களின் நீண்டகாலச் செயற்பாடு போலுள்ளது. இந்தியன்ரை நக்க தொடங்கியவர்கள் இப்ப மகிந்தாவில் வந்து நிற்கிறீர்கள் ஆயுளுக்கும் இதுதான் உங்கள் பிழைப்பாய் போச்சு.

      • veeran says:
        14 years ago

        உங்கள் தலைவரும் முள்ளி வாய்க்காலில் இருந்து தப்ப இந்தியாவைநக்க முயற்சித்தாரே, இந்தியர்கள் அவரை மகிந்தாவைநக்க சொல்லி விட்டனர், த்லையில் கோடாலியால் கொத்து 

        • நிர்மலன் says:
          14 years ago

          நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது லங்காபுவத்தின் செய்திகள். தொகுத்து வழங்குபவர் வீரன்.

          • chandran.raja says:
            14 years ago

            நிர்மலன் கேட்பதும் கேட்க அழைப்பதும் புலிபுவத்தின் செய்திகள்!.

            செய்திகளை வழங்குபவர்கள் யாழ்மேட்டுகுடிமக்கள் ஏகாதிபத்திய ஆதரவுடன்.

  18. நிர்மலன் says:
    14 years ago

    தகவல்தருபவர் கோயபல்ஸ் சிறப்புவிருதுபெற்ற நவீன மாதானமுத்தா சந்திரன் ராசா.

  19. ethayam says:
    14 years ago

    2009 மே வரை உங்கள் அமெரிக்க ஐரோப்பிய அரசுகளை நோக்கி தலை கீழாக நின்று (இப்போதும்)ஏ ன் தவம் செய்தீர்கள். உங்கள் மீட்பர்கள் ஐரோப்பிய அமெரிக்க என்றபடியால்தானே. உங்கள் பிரமுகத்தனம் அந்தஸ்து செல்வாக்கு பணம் என்பவை வளர வேண்டும் என்பதற்காக மட்டுமே சொந்த லாபங்களுக்காக மட்டுமே அப்பாவி மக்களின் உணர்வுகளை பாவித்து கொண்டீர்கள். எந்த பாவத்தையும் நீங்கள் ஆதரிக்க தயங்கியதில்லை. அண்ணாமலை விமலேஸ்வரன் போன்றவர்களின் பெயரைக் கூட உச்சரிக்க தகுதி கிடையாது. ஒருவரின் அரசியல் சமூக விரோதமானது எனின் அதை மக்களிடம் தான் கொண்டு செல்ல வேண்டும். பிரபாரனின் அடியாட்களிடம் அல்ல. நீங்களும் என்னதான் செய்வீர்கள் அரசியலை காசு உழைக்கும் தொழிலாக வரித்து கொண்டு விட்டீர்கள். உங்களுக்கா மக்களைப் பற்றி கவலை இருக்கப் போகிறது?.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...