Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனின் பெயரால்………: சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
02/14/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
19
Home பிரதான பதிவுகள் | Principle posts

அமரிக்கா இலங்கைக்கு வழங்கிய அழுத்ததில் ராஜபக்ச அரச அதிகாரம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது போன்ற அப்பட்டமான அரசியல் முட்டாள்தனம் முள்ளிவாய்க்காலின் அழிவுகளுக்கே காரணமாகியிருந்தது. உலகில் அதிகாரத்தை கையகப்படுத்தியிருக்கும் ஒரு சிறுபான்மையினர் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மறுபடி மறுபடி மக்களுக்குக் கற்பிக்கும் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஒவ்வொரு முனையிலிருந்தும் மக்கள் விரோத அரசியலுக்குள் தம்மைப் புதைத்துக்கொண்டுள்ளனர்.

அழிக்கப்படுகின்ற ஒவ்வொரு மனிதனின் மரணத்தின் பின்னாலும் ஏறக்குறைய ஒரே அரசியல் அதிகாரமே செயற்படுகிறது என்பதை இவர்கள் சொல்லத் தயாரில்லை.

வன்னிப் படுகொலைகளின் பின்னால் இந்திய அரச அதிகாரமும், மேற்கும் அதன் ஒடுக்குமுறைக் கூறுகளான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் மனித உரிமை அமைப்புக்களும் செயற்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிந்தும் அயோக்கியத் தனமாக மக்களை ஏமாற்றும் “புலிகளின் – பின்னான” பச்சோந்தி ஊடகங்களும் அதன் அடியாட்களும் தொடரும் இனச்சுதிகரிப்பிற்கும் ராஜபக்ச பாசிசத்திற்கும் துணைபோகின்றவர்களே.
ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களின் ஒவ்வொரு திரும்பல் புள்ளியிலும் இந்திய அரசின் அழிப்பு அரசியலைக் கண்டுகொள்லலாம். தனது பிராந்திய நலனுக்காகவும் இன்று பல்தேசிய முதலாளிகளின் தனிப்பட்ட நலனுக்காகவும் இலங்கையில் திட்டமிட்ட அழிப்பை நடத்திக்கொண்டிருப்பது ராஜபக்ச பாசிசம் மட்டுமல்ல. அதனை இயக்கும் சக்தியான இந்திய பார்பானீய அரச அதிகாரமும் கூடத்தான்.

அமரிக்காவும் அதன் நேச அணிகளான ஐரோப்பிய ஏகபோகங்களும் மீள முடியாத பொருளாதரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கின்றன. தாம் பிரதிநிதித்துவ செய்யும் பல் தேசியப் பண முதலைகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காகன அரசியலிலிருந்தே பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாத அழிவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றது. உலகின் பிச்சைக்கார நாடுகளைக் கூட ஒட்டாண்டி ஆக்கும் நோக்கோடு போரைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கின்றன. சாரி சாரியாக மக்களைக் கொன்று குவித்துவிட்டு ஜனநாயகத்தை நிலை நாட்டுகிறோம் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள்.
உலகம் முழுவது போர் மேகங்களைக் கடவிழ்த்து விட்டிருக்கும் மனித விரோதிகளான இந்த அரசுகளை ஐரோப்பிய மக்கள் இனம் காண ஆரம்பித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஜனநாயக விழுமியங்களைக் கூட கொண்டிராத இந்திய அரசும் அதன் அடியாட்களும் தமது பல்தேசிய வியாபாரிகளின் நலனுக்காக அமரிக்காவினதும் ஐரோப்பிவினதும் அடிமையாக சேவகம் செய்யத் தயார் நிலையில் உள்ளனர். அடிமைத் தனதிலிருந்து அவ்வப்போது தமது வியாபார நலன்களுக்காக சீனா போன்ற மாபியா அரசுகளோடும் இந்திய பல்தேசிய அரசு உடன்பட்டுக்கொள்கிறது.

மேற்கிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஊசலாடும் நிலையை உருவாக்கிக்கொள்வதனூடான இடைவெளியில் தனது மூலதனத்தின் சுயாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முற்படுகின்றது.

இலங்கையில் மேற்குடனான புதிய போட்டியை இந்திய சீன அரசுகள் உருவாக்கியுள்ளன. இந்தப் போட்டியாளர்களின் அனைவருமே பேரினவாதத்திற்கு ஆதரவானவர்கள் தான். இந்தியாவிற்கு எதிராக சீனாவையும், சீனாவிற்கு எதிராக இந்தியாவையும், மேற்கையும் கையாள்கிறோம் என்று தமிழ் ராஜதந்திர ஜாம்பவான்கள் காட்டும் படத்தை வெளியிலிருந்து அவதானிக்கும் யாரும் 30 வருடப் போராட்டம் இவ்வளவு முட்டாள்களை உருவாக்கியுள்ளதா என்று வியந்து போவார்கள்.

இவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல, அருவருக்கத்தக்க கோழைத்தனமானவர்களும் கூட. அதற்கு எல்லை கிடையாது. ராஜபக்சவின் பாசிச இராணுவ சாம்ராஜ்யத்திற்குள் இருந்து மக்கள் போராடும் போது கூட இவர்கள் அன்னியர்கள் நம்பச் சொல்லி அழைப்புவிடுக்கிறார்கள். இரவல் படையில் புரட்சிசெய்யலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். “படித்துக்கிழித்த” யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் பள்ளிக்கூடத்தையே அறிந்திராத இந்தியப் பழங்குடி மக்கள் இந்திய இராணுவத்தை நெருங்க விடாமல் நடத்தும் போராட்டத்தை புத்தகங்களில் அறிந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மை தான்.

“தேசியத் தலைவர் பிரபாகரனின்” பெயராலும், தம்ழ்த் தேசியத்தின் பெயராலும் இந்தியாவினதும் மேற்கினதும் அடிமைகளாகி மக்களை அழிக்கிறோம் என்பதே இவர்கள் கற்பிக்கும் தேசியம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விக்கிலீக்சும் அதன் குறிப்புக்களும் : விஜி

Comments 19

  1. மகேந்திரன் says:
    14 years ago

    போதுமடா சாமி! இந்த வரலாறு எழுதும் விளையாட்டு. வரலாறு எழுதியவர்களும் எழுதிக் கொண்டிருப்பவர்களும் ஏதோ ஒருவகையில் தம்மை நியாயப்படுத்தவே இதனை எழுதுகின்றனர். எமது மக்களிடம் முள்ளிவாய்க்காலில் அனுபவத்தீனூடு கற்ற போராட்ட வரலாறு நிறையவே உண்டு. வரலாறு எமுஇப் காதில்; பூச் சுற்றுவதனை விட்டு விட்டு ஏதாவது பண்ணி எமது மக்களை கொன்றவர்களை சர்வதேசத்தின் துன்னால் கூண்டில் நிறுத்தும் அலுவலைப் பாருங்கள்.

  2. Maheswaran says:
    14 years ago

    கூண்டில் நிறுத்தினால் விடுதலை வந்து விடுமா மகேந்திரன்?. மனிதகுலத்திற்கு எதிரானவன் நீ என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரலைக் காட்டியும் இன்னமும் அதிகாரத்தில் இருக்கிறான் சூடானின் அதிபர் அல் பஷீர்.
    மகிந்த ராஜபக்ஷ போனால், ஷிராந்தி ராஜபக்ஷ வருவார். சரத் பொன்சேகா சென்றால் அனோமா பொன்சேகா வருவார்.
    இராணுவ முகாம்கள் அப்படியே இருக்கும். 13 வது சட்டம், அரசியலமைப்பில் இருக்கும், நடைமுறைக்கு வராது.
    படுகொலைக்கு உதவியவர்கள், பார்த்துக் கொண்டிருந்தவர்கள், எப்படி சார் எமக்கு உதவ முடியும்?. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட வேண்டுமென்ற அனைத்துலக நெருக்கடிக்குழுவினரே, சுயாதீன விசாரணை வேண்டுமென புதுக்கதை பறைகிறார்கள். நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி அமெரிக்காவும் பேசுவதில்லை. தென்கொரிய பாண் கீ மூனும் வாய் திறப்பதில்லை. நீதிமன்றில் நிறுத்தினால் சுதந்திரம் வந்துவிடுமென சொல்லி மக்களை பார்வையாளர் ஆக்காமல், e -petition இல் கிளிக் பண்ணினால் பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஊடாக சுதந்திரக் காற்று வீசுமென்று ஏமாற்றாமல், மக்களை போராட்டத்திற்கு அணிதிரட்டும் வேலையைப் பாருங்கள். முடியாவிட்டால் காலச்சுவட்டினை வாசியுங்கள். பொழுது போகும்.

  3. Nakkeeran says:
    14 years ago

    இப்படி சகட்டு மேனிக்கு எல்ரோரையும் திட்டித் தீர்த்தால் எப்படி? மேற்குலக நாடுகளும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் என்றால் பின் யார்தான் வேண்டும்? மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்கிறார்கள். அடுத்த நேர கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கும் எமது மக்களை போராட அழைப்பது நியாயமா? எமது சிக்கல் தீர யாரிடமும் மந்திரக் கோல் இல்லை. அனைத்துலக சமூகத்தின் உதவியின்றி எதையும் நாம் சாதித்து விடமுடியாது. முந்திய வரலாறு அதைத்தான் இடித்துரைக்கிறது. இதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் கொசோவோ மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. இதே அமெரிக்காதான் லிபியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது. இன்றைய உலக ஒழுங்கில் எந்த நாடும் தனித்து நிற்க முடியாது. இது தமிழ்த் தேசத்திற்கும் பொருந்தும். முள்ளிவாய்க்கால் அழிவை காரணம் காட்டி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டுப் போராடவேண்டும். ஒடுக்குமுறை அதிகரிக்க மக்கள் தாமாகவே தெருவில் இறங்கிப் போராடுவார்கள். இடையில் சாம பேத தான தண்டம் என்ற நால்வகை உத்திகளையும் பயன்படுத்துவோம்.

    • yazhavan says:
      14 years ago

      நக்கீரன். கொசோவோவை அமரிக்கா ஏற்றுக்கொண்டதற்கு காரணம் உண்டு. அந்த நாட்டின் நிலத்திற்கடியால் அமரிக்காவிற்கு எண்ணை சப்பிளை பண்ணுகிறார்கள். வெள்ளைத்தோல்காரன் தந்திரசாலியாக இருப்பதற்கு உங்களபை;போல் முட்டாள்கள் தான் காரணம். சும்மாவா சொன்னார்கள் பேயன்கள் இருக்கும்வரை பேக்காட்டுபவன் இருப்பான் என்று!!!!!!!

  4. pidungi says:
    14 years ago

    (உலகம் முழுவது போர் மேகங்களைக் கடவிழ்த்து விட்டிருக்கும் மனித விரோதிகளான இந்த அரசுகளை ஐரோப்பிய மக்கள் இனம் காண ஆரம்பித்துள்ளனர்.)
    ஏனைய்யா,ஐரோப்பிய சமூகம் ஞானக்கண் பெற்றதெப்போ?????இப்படித்தான் இலங்கையதிபரை அசட்டையீனம் செய்துவிட்டார் கனேடிய அதிபர் என்று எழுதிய மை காயுமுன்னர் கனேடிய அதிபர் சீனாவில் கால்பதிக்கின்றார்.கொலையாளியைக் கூண்டிலேற்றுவதாக சொல்கின்ற மாநாடுகளில் மனித விரோதிகளே பேச்சாளப் பீரங்கிகளாகப் பரிணமிக்கின்றார்கள். அணி சேர்தல் என்பதன் அர்த்தம் தான் என்ன????

  5. Maheswaran says:
    14 years ago

    அமெரிக்க ஏகாதிபத்தியம் கொசோவோவிற்கு சுதந்திரம் [?] வாங்கிக் [?] கொடுத்தது என்றால், ஏன் தமிழ் மக்களுக்கு சுதந்.. திரம் வாங்கிக் கொடுக்கவில்லை? எமக்காக அமேரிக்கா போராடும்.இந்தியா போராடும் என்று கனவு காண வேண்டாம். இந்தியாவின் போரை நாமே நடத்தினோமென ராஜபக்ச விளக்கமாகக் கூறிவிட்டார். பிறகென்ன…..

  6. அருள் says:
    14 years ago

    நாவலன் மிகத்தெளிவாக ஒரு அரசியல் பார்வையை முன்வைத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை நம்பி நாம் முன்பு அடைந்த அனுபவபாடத்தை நக்கீரன் போன்றோர் இன்னும் உணர்ந்து கொள்ளாதது ஒரு பிழையான அரசியலே மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் தொடக்கமாக இருப்பதைக் காட்டுகிறது. ஆழ்ந்த அரசியல் ஞானமுள்ள நாவலன் போன்றவர்கள் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்வைக்கும் தெளிவான அரசியல் கருத்துகள் ஒரு பலமான சக்தியாக மாறும் நாள் வெகு தொலைவிலில்லை.

  7. http://koothadiveddai.blogspot.com/ says:
    14 years ago

    சபாநாவலனின் கொள்கைகளில் மாறுபாடு எனக்கு இருக்கிறது, இருந்தும் சபாநாவலனின் சிலகருதுக்களுக்கு நான் மனதளவில் உடன்பட்டிருக்கிறேன். நான் மட்டும்தான் தொலைநோக்கு பார்வையுடன் அரசியலை புரிந்து வைத்திருப்பதாக நானும் நினைக்கக்கூடும், கட்டுரை வெளியிடலாம்.

    சார்பு, தலைமை, ஆளாளுக்கு அவரவர் சிந்தனையின் பிரகாரம் வேறுபடும். ஒருவர் கொண்டுள்ள நோக்கம் அரசியல் அனைத்தும் சரியென்றாகிவிடவில்லை. வல்லரசு நாடுகள் தன்னலனில்லாமல் எதையும் கையாண்டுவிடுவதில்லை. அமெரிக்கா ஒன்றை செய்தால் அதை சரியென துதிபாடும் வல்லாதிக்கம் தமிழன் ஒன்றை செய்துவிட்டால் பொறுக்கமுடியாமல் பொங்கியெழுகிறது. ஒரு செய்தியை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்குகூட விடுதலைப்புலிகளின் போராட்டத்தை துணைகொள்ளவேண்டியிருக்கிறது. இந்தியனையும், சிங்களவனையும் தோலுரிக்க பலவழிகளை தமிழினம் கையில் எடுத்திருக்கிறது பிரச்சாரம் செய்கிறது அனைத்துக்கும் இலக்கணப்பிழை பர்க்காமல் கொலையாளிகளை தண்டனைக்குட்படுத்த முயற்சிப்பதே வரும் சந்ததிக்காவது உதவும்.

  8. S.G.Ragavan says:
    14 years ago

    நாடு கடந்த அரசையும், சிங்களத்தின் இனப் படுகொலைத் தளபதி சவெந்திர டி சில்வாவையும் ஒரே நாட்டில் வைத்து கையாள்கின்ற சித்து
    விளையாட்டை அமெரிக்கா செய்கின்றபோது நாம் உரிமைகள் , நீதி என்பன பற்றி அமெரிக்கா மேற்குலகு என்பவற்றிடம் இருந்து எவ்வாறு பெறமுடியும்? இருப்பினும் இவர்கள் எல்லோரையும் தமது அரசியல் மதி நுட்பத்தின் மூலம் இலங்கை கையாள்கிறது. இம்மதி நுட்பம்
    எம்மிடம் இல்லை. இலங்கையில் காட்சி மாறலாம் அல்லது மகிந்த மாறி அமெரிக்க விசுவாசிகள் ஆட்சிக்கு வரலாம் அல்லது மகிந்தவே
    அமெரிக்காவுக்கு வைப்பாட்டி ஆகலாம், அப்போ தமிழர்களின் உரிமை எல்லாம் அம்போதான்!. தமிழர்களுக்கு உரிமை சென்றடையக் கூடாது
    என்ற சிங்கள ராஜ தந்திர சமுகத்தின் நகர்வுகளானது வரலாற்று காலம் தொடக்கம் தோல்வியை கண்டதில்லை. இது இலங்கையின் வரலாறும் தமிழர்களின் அனுபவ பாடமும் ஆகும். ஆனால் தமிழர்கள் தாம் பட்ட அனுபவங்களில் இருந்து மீள் எழும்பும் தகுதி அற்றவர்கள்
    என்றுமே தவறுகளை பற்றி சிந்திப்பவர்கள் அல்ல எதுவுமே தவறுகள் அல்ல என்பதை சாதிப்பதிலும் அகராதி பேசுவதிலும் காலத்தை கழிப்பதில்
    விண்ணர்கள். இங்கே சபா நாவலனின் ஆதங்கம் என்னிலும் ஆழமாக வேரூன்றி பல கேள்விகளை எழுப்புகிறது ஆனால் அவன் உரிமையை
    பெற்றுத் தருவான் இவன் உரிமையை பெற்றுத் தருவான் என்ற மாயக் கனவுலகை தாண்டி புதிய நகர்வுகளை புதிய உத்திகளை கையாள்கிற
    அரசியல் எத்தனம் எங்களில் வீச்சாக எழாத வரை கிடைப்பதை காண்பதை நோக்கிய நகர்வுகள் மக்களிடம் இருக்கும். தவறான பாதையில் ஒரு
    இனம் தொடர்ந்து செல்லும் போது அதனை சரியான பாதையில் நகர்த்திச் செல்லும் தலைமை தானாகவே உருவாகும் என்பது ஒரு இனத்தின்
    புரட்ச்சிகர தன்மையாகும்.

    • Selvan says:
      14 years ago

      US is a country like any other Western country. You cannot arbitrarily handle people like what we do in our countries in the East. There are diplomats in the US who commit crimes here and get away with it using their diplomatic immunity. You will find the Iranian leader going to the US and lecturing the US president and even ridicule him. Where we miss out is we tend to treat countries and people as permanent enemies based on our past experiences and refuse to work with them. This even applies to us in our personal lives unfortunately. Second we do not take advantage of such powerful countries to make use of them to our benefit. This was very clear during the peace process. We have to play the game to their tune and optimize our gains. May be it is cultural but unless we change we will always be at the losing end.

  9. Selvan says:
    14 years ago

    US is a country like any other Western country. You cannot arbitrarily handle people like what we do in our countries in the East. There are diplomats in the US who commit crimes here and get away with it using their diplomatic immunity. You will find the Iranian leader going to the US and lecturing the US president and even ridicule him. Where we miss out is we tend to treat countries and people as permanent enemies based on our past experiences and refuse to work with them. This even applies to us in our personal lives unfortunately. Second we do not take advantage of such powerful countries to make use of them to our benefit. This was very clear during the peace process. We have to play the game to their tune and optimize our gains. May be it is cultural but unless we change we will always be at the losing end.

  10. Kumar says:
    14 years ago

    நம் தவறுகளை உணா்ந்து செயற்படும் ஆற்றல் இல்லாதவரை,அடுத்தவனை முற்றாக நம்பி நம் கைகளை கட்டி நிற்கின்ற கோளைத்தனம் அகலாதவரை( இதே கோளைத்தனமே பிரபாகரனை பப்பாவில் ஏற்றிவிட்டு யாவையும் அவனே முடித்துவைப்பான் என்று நம்பி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது) நாம் எந்த திசையிலுமே நகர முடியாது.
     மேற்குலகம் தம் நலன்களுக்காக நாடுகளையோ அரசுகளையோ மிரட்டி பேரம்பேசும்போது சில சந்தா்ப்பங்களில் அந்த பேரத்தின் விளைவால் சில நன்மைகள் நிகழ்ந்துவிடுவதுண்டு அந்த நன்மைகள்தான் கோசவோ,தென்சூடான் போன்றவைகளாகும்.தற்சமயம் நமது திசையிலும் இப்படியொரு நிலமை ஏற்பட்டுள்ளது இதில் ராயபக்ச சரணடைந்தால் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதே சிறந்த வளியென ரோபேட் பிளைக் கூறுவது தவிர்க்கமுடியாததாகும்.

  11. Nakkeeran says:
    14 years ago

    In today’s world order we have to sail with the international community as far as possible. Without the support of the international community we cannot move forward. At the same time the international community must be convinced that what the Thamils ask is reasonable and just. After the destruction of Mullivaaikkal there is sympathy to our cause. Let us use that sympathy to advance our cause.

  12. S.G.Ragavan says:
    14 years ago

    உடலில் உள்ள அங்க குறைபாடுகள் , காலில் உள்ள புண்கள் என்பவற்றை காட்டி பிச்சைகாரர்கள் பிச்சை கேட்கும் போது எம்மிடம் ஏற்படும் கழிவிரக்கம் (sympathy ) காரணமாக சில்லறைகளாக விட்டெறிவது உண்டு இச் சில்லறைகள் பிச்சை எடுப்பவர்களின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. தமிழர்கள் ஆகிய நாம் உண்மையில் அடாவடிக்காரர்களால் அடித்து காயப் படுத்தப் பட்டு தெரு வீதியிலே பிச்சை எடுக்க விடப் பட்டிருக்கிறோம்.
    எமது புண்களை காட்டி நாம் பிச்சை எடுக்கும் உரிமையை மறுக்கிறார்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினர் இல்லையேல் நாம் எடுக்கும் பிச்சையை பௌத்த தர்மத்தை பின்பற்றுவோர் அநாகரிக மான முறையில் தட்டிப் பறித்து செல்கின்றனர். நாம் நொண்டிகளாகவே இருக்க வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு பரம ஆசை. மேற்குலகம் சில்லறைகளை எமக்கு எறியும், நாம் நொண்டிகளாகவே இருக்க வேண்டும் என அவர்களும் விரும்புவார்கள். உலகத்தின் தந்திரோபாய அரசியலில் நீச்சலடித்து தப்பிவரமுடியாமல் தமிழர் தரப்பு பிச்சை எடுக்கும் விடிவற்ற அரசியலையே முன்னெடுக்க கூடிய கள நிலைமையே இன்றும் காணப் படுகின்றது.

  13. Nakkeeran says:
    14 years ago

    இப்படியான எதிர்மறைக் கருத்துக்களால் எந்தப் பலனும் இல்லை. தமிழர்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள், எதனையும் தட்டிக் கேட்டுப் பெறும் நிலையில் இல்லை என்பதெல்லாம் விரக்தியின் வெளிப்பாடுகள். முள்ளிவாய்க்காலில் பேரழிவைச் சந்தித்தோம் என்பது உண்மை. ஆனால் அதிலிருந்து மீண்டு இருக்கிறோம். வட – கிழக்கில் நடந்து முடிந்த தேர்தல்களில் தமிழ்மக்கள் சலுகைகளுக்கு விலை போகாமல் தேசியத்தின்பால் நின்று வாக்களித்திருக்கிறார்கள். மகிந்த இராசபக்சே ஒரு பிரதேசசபையில் ஆவது வென்று தமிழ்மக்கள் தன் பக்கம் நிற்கிறார்கள் என்று பரப்புரை செய்ய முடியாது போய்விட்டது. சிங்களப் பெரும்பான்மை ஆட்சியில் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மை இன்று உலகுக்குத் தெரிகிறது. மகிந்த இராசபக்சே வி.புலிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்கவே தனது இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை எடுத்ததாக போர்க்காலத்தில் செய்த பரப்புரை பொய் என்பதை உலகம் இன்று தெரிந்து கொண்டுள்ளது. யாப்பில் இருக்கும் காவல்துறை, நிலம், வட – கிழக்கு இணைப்பு அதிகாரங்களை மகிந்த இராசபக்சே நடைமுறைப்படுத்த மறுக்கிறார். இந்த சனநாயக விரோத செயல்பாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் அம்பலத்துக்குக் கொண்டு வரவேண்டும். போரில் சிங்களம் வென்றாலும் அதன் பலனை சிங்களம் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணிசேரா நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்ற நாடுகளின் ஆதரவு ஒப’பீட்டளவில் அதற்குக் குறைந்து வருகிறது. ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகள் சிறிலங்காவின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எல்லா முனைகளிலும் எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து போராடுவோம். சுதந்திரத்தை யாரும் வலிய வந்து தரமாட்டார்கள். நாம்தான் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  14. yazhavan says:
    14 years ago

    நக்கீரன்….. எம்முடைய மக்களுக்கு நாங்கள் மறுத்த சுதந்திரத்தை
    முதலில் வழங்குவோம். அதன் பின் மற்றவர்களிடமிருந்து எங்களுடைய சுதந்திரத்தை பெறுவோம். சும்மா இருந்த க(த)ம்பியை வ(அ)ளை(ழை)த்து வைரவர் ஆக்கிவிட அது ஆடு மாடு கோழி கேட்டுதாம் என்ற கதையாகிவிட்டது எம்கதை. நாங்கள் இனப்பிளவை தவிர்த்து இன ஐக்கியத்திற்கு பாடுபட்டால் பலன் கிடைக்கும் என்று நம்புகின்றேன். சும்மா அரசியல் வாதிகளை குற்றம் சொல்லாமல் (அவர்கள் என்ன சிங்கள மக்களுக்கு மட்டும் கொட்டோ கொட்டு என்று பொட்டிக்கொண்டா இருக்கிறார்கள். அவர்களையும் தான் நன்றாக சுறண்டுகிறார்கள். என்ற படியால்தானே இலங்கையின் பொருளாதாரம்………..இப்படி) (சப்பிறா வில் கொள்ளையடித்த உதயனையே நாம் எம்பி ஆக்கிவிட்டிருக்கின்றோம். பிறகெப்படி சிங்களவர்களை குறைசொல்வது?) உங்களுக்கு சிங்கள நண்பர்கள் இல்லையா? அவர்கள் மூலம் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முயற்சியுங்கள். மீண்டும் ஒரு கம்பியை வளைக்கவேண்டாம். நம்ப நட நம்பி நடவாதே என்று எதற்காக சொல்லியிருக்கிறார்கள்?

  15. நக்கீரன் says:
    14 years ago

    ஒட்டுமொத்த தமிழினத்தையே சிங்களம் தீண்டப்படாதவர்களாகப் பார்க்கிறது. முதலில் சிங்கள ஏகாதியத்தின் பிடியில் இருந்து விடுபடுவோம். அதன் பின் எமது வீட்டை துப்பரவு செய்வோம். சிங்கள – பவுத்தம் தமிழினத்தை தீண்டப்படாதவர்களாகவே பார்க்கிறது.

    • yazhavan says:
      14 years ago

      அப்படியென்றால் நீங்கள் துப்பரவில்லத வீட்டில் தான் இருக்கின்றீர்கள். பவுத்தம் என்றுசொல்கிறீர்கள் உங்களுடைய மதத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும். மதத்தைப்பற்றி கதைப்பதை நிறுத்திவிடுங்கள். நாங்கள் அதற்கு அருகதையற்றவர்கள். பிக்குகள் எல்லாம் புத்தர்கள் அல்ல ஐயர்கள் எல்லோரும் ஞானிகளும் இலல்லை. உங்களைப்போன்ற புரிதல் இல்லாத ஆலோசக்ர்களால் தான் இப்படியான விளைவுகளை முதுகில் சுமக்கின்றோம். சிங்களவர்கள் எல்லோரும் பெளத்தர்களில்லை அவர்களில் கிறிஸ்தவர்களும் உண்டு. உங்களிலும் கூட………

  16. நக்கீரன் says:
    14 years ago

    ஆமாம் சாதித் தடிப்பில்லாவிட்டாலும் சாதிப்பிடியில் தமிழ் சமூகம் இருப்பதைத்தான் துப்பரவு இல்லாத வீட்டில் இருப்பதாகச் சொன்னேன். மதங்கள் எல்லாவற்றிலுமே நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்து மதத்தில் மட்டும் (சிங்கள பவுத்தத்திலும் சாதி வேற்றுமை இருக்கிறது. காரணம் அவர்கள் இந்துவாக இருந்து பவுத்தர்களாக மாறியவர்கள்) இருக்கிறது. பிக்குகள் பவுத்தர்கள்தான். பலவேளை உண்மையான பவுத்தர்களாக இல்லை. அவர்கள் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும். காசைக் கையால் தொடக்கூடாது. ஆனால் இன்று பவுத்த பிக்குகள் எல்லா வேலையும் செய்கிறார்கள். நான் எங்கேயாவது ஆலோசகர் என்று சொன்னேனா? இது எனது ஆலோசனை அல்ல. இது எனது கருத்து. சிங்களவர்கள் எல்லோரும் பவுத்தர்கள் இல்லை என்பது எனக்கும் தெரியும். 93 விழுக்காடு சிங்களவர் பவுத்தர்கள். அவர்கள் கையில்தான் இன்று ஆட்சி அதிகாரம் இருக்கிறது. பவுத்த சிங்களவர் இல்லாத ஒருவர் பிரதமராகவோ ஆட்சித்தலைவராகவோ கட்சித்தலைவராகவோ வந்ததில்லை. நாடு சமயம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து சமத்துவமாகப் பார்க்கப்படாததே இன்றைய சிக்கலுக்குக் காரணம். இதைப் புரிந்து கொள்ளும் வல்லமை உமக்கு இருக்கிறது என நம்புகிறேன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In