பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எவருமே துணை போகக் கூடாது : பிள்ளையான்

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி மக்கள் உட்பட எவருமே துணை போகக் கூடாது. புலிகளின் தமிழீழக் கனவு முற்றாக கலைந்து விட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய ரி.எம்.வி.பியினரின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே கிழக்கு மண்ணை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற உயர் அரச அதிகாரிகள், விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசினார். தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், போராட்டம் போராட்டம் என்று எமது மக்கள் எதையுமே சாதிக்கவில்லை. தமிழீழம் என்ற அமைப்பிற்கு மாற்றீடாகவே மாகாணசபையை உருவாக்கியுள்ளனர். அதனூடாக எமது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். நீண்ட காலங்களாக நிறைவு செய்ய வேண்டும். நீண்ட காலங்களாக அபிவிரத்தி இன்றி காணப்பட்ட நமது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. விவசாயத்துறையை கட்டியெழுப்புவதன் ஊடாக வறுமையை ஒழித்து வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் என்றார்.

8 thoughts on “பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எவருமே துணை போகக் கூடாது : பிள்ளையான்”

 1. புலிகளை நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்களிடம் இருந்து விலகியும் இருக்கலாம் ஆனால் சிங்கள இன வெறி பாசிஸ்டுகளோடு கைகோர்த்திருக்கும் பிள்ளையான் கருணா குழு சிங்கள பேரினவாதத்தின் மீதும்.இலங்கை அரசின் மீதும் என்ன பார்வை வைத்திருக்கிறார்கள்.

 2. பேரினவாதிகளும் ஒருவகையில் பயங்கரவாதிகளே
  பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர்களும் அவர்களே.
  அதற்காக-பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் பழிக்கு பழி போன்ற தர்க்கங்களை
  யாரும் இனிமேல் ஏற்றுக்கொள்ள முடியாது
  வலிமை நிறைந்த படைகளைக்கொண்டு பேரினவாத அரசாங்கத்தை அடிபணியப்
  வைத்திருக்க முடியும் எமது உரிமைகளை பெற்றிருக்க முடியும் அதற்கான வழங்கள்
  எல்லாம் எம்மிடையே நிறையவே இருந்தன இதை புலிகள் நாசப்படுத்திவிட்டார்கள்.இனி
  இருக்கிற ஒரேஒருவழி தமிழ்மக்கள் பயங்கரவாதத்தை விட்டொழித்து பேச்சு வார்த்தை மூலம்
  விட்டுக்கொடுக்காத போராட்டம் நடத்துவதுதான்.
  இந்த பார்வையில் கருணா பிள்ளையான் போக்கு சரியாதே!
  மிகுதியை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 3. kகருணா பிள்ளையானின் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது. சிங்கள பாசிஸ்சுகளோடு சமரசம் செய்து கொண்டு தேர்தலில் பங்கேற்று தங்களை வழமாக்கிக் கொண்டு இருக்கும் இந்த புதிய புரட்சியாளர்கள்.ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்வார்கள் காரணம் வலுவான சிந்தாம் அற்ற ஒரு ஆயுதக் குழுவால் எதையுமே செய்ய முடியாது.ஆயுதப் பாதையா தேர்தல் நிலைப்பாடா என்பதில் கூட பிள்ளையான் குழுவிடம் தெளிவான பார்வை இல்லை.புலிகள் மீதான் வெறுப்பு எதிரிகளுடன் கைகோர்க்க வைத்திருக்கிறது.

 4. அண்ணா ராவணா!
  யாருக்கையா வலுவான சித்தாதம் இருந்தது.
  ஒரு புறத்தில் மார்க்சிய புத்தகப் பூச்சிகள் இருந்தார்கள். மறு புறத்தில் ஆயுதப் படைகள்.
  இவர்கள் எவருமே உதவாக் கரைகள்.

 5. வலுவான சித்தாந்தம் எமக்கு என்ன கூறுகிறது?
  மனிதனுக்கு மேலே மனிதன் சவாரி செய்யாதே என்று கூறுகிறது
  எந்த இனத்திலையும் மதத்திலையும் கெட்ட தன்மைகள் சில இருக்கவே செய்யும்.
  இதற்காக இனத்திலையோ மதத்திலையோ துவேஷத்தை ஏற்படுத்தாதே
  வயிறு வளர்கிற அரசியலை தூக்கியெறியப் போராடு!
  சிறுபான்மை இனங்களின் பிரச்சனை தீப்பதற்கான தீர்வு இன்றைய அரசு தன்கையில் வைத்துள்ளது. அதை செழிமைப்படுத்தவும் துரிதப்படுத்தவும் போராடு !
  மகாணங்களுக்காண சுயயாட்சி மத்தியில் கூட்டாச்சி
  பல இனங்களையும் மதங்களையும் கொண்டது நம்நாடு
  தத்துவங்களையும் தீர்வுகளையும் தேடிப் பரதேசம் போகாதே
  ஐக்கியஇலங்கை அதற்காவே பேச்சுவார்த்தை
  அதற்காகவே செயல்படு அதந்காகவே போராடு இதுதான் நாம்கண்ட வலுவான தத்துவம்.

 6. “மகாணங்களுக்காண சுயயாட்சி மத்தியில் கூட்டாச்சி
  பல இனங்களையும் மதங்களையும் கொண்டது நம்நாடு
  தத்துவங்களையும் தீர்வுகளையும் தேடிப் பரதேசம் போகாதே
  ஐக்கியஇலங்கை அதற்காவே பேச்சுவார்த்தை
  அதற்காகவே செயல்படு அதந்காகவே போராடு இதுதான் நாம்கண்ட வலுவான தத்துவம்.”
  காமெடியாகத்தான் இருக்கிறது போங்கள்…..இலங்கைத் தீவில் சிங்கள தமிழ் தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் சாத்தியக் கூறுகள் முற்றாக அருந்து போனதாகவே நினைக்கிறேன். பயங்கரவாத அரசுக்கு எதிரான பார்வையும் பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கிடையிலான பார்வையும் கொண்டே இந்த இருவரில் இருந்தும் விலகி சிங்கள் பாட்டாளி வர்க்கம் தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பதுதான் ஜனநயகம்.இது உங்களுக்கு வரட்டுத்தனமாக தெரியலாம். ஆனால் இதுதான் விடுதலைப் பார்வை. என நினைக்கிறேன்.

 7. இராவனா;
  இலங்கைத்தீவில் சிங்கள தமிழ் சேர்ந்து வாழும் சாத்தியக்கூறுகள்
  முற்றாக அற்று போகதாக நினைக்கிறீர்கள். அப்படியே திரும்பிவந்து
  சிங்கள பாட்டாளி வர்க்கம் தமிழ்மக்களுன் விடுதலைக்கு குரல் கொடுப்பது தான் ஜனநாயகம்
  இது தான் விடுதலைப் பார்வை……
  ஒரு கேள்வி; அப்ப நாம்மெல்லாம் எங்கிருப்பம்?
  இது உங்களுக்கே! காமடியாய் தெரியவில்லையா?

 8. முதலமைச்சர் பிள்ளையானுக்கு இன்னும் எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கு.
  அதை எல்லாம் விட்டுப்போட்டு இப்படியான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தால், யாரு வந்து கிழக்கை முன்னேற்றுவது.
  அடுத்து இந்த அறிக்கையில் உண்மை இருப்பினும், இப்படியான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முதலமைச்சர் பிள்ளையானுக்கு இன்னும் காலம் இருக்கு.

Comments are closed.