விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் தமிழக முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை (26) இரவு அவரது வீட்டில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16‐ம் திகதி இரவு விமானம் மூலம் சென்னை சென்ற பார்வதி அம்மாள், மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அவர் சென்னையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால், அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாக சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் கடிதம் எழுதினால், மத்திய அரசிடம் நிச்சயம் அனுமதி பெற்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார் எனவு சுப. வீரபாண்டியன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனிருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவநடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த கருணாநிதி இலங்கை அரசு நிகழ்த்திய தமிழ் இனப்படுகொலையின் பின்னார் இலங்கை அரச சார்பு நிலை எடுத்துள்ளார். தமிழக இந்திய அரசுகள் தமிழின அழிப்பைப் பின்னணியிலிருந்து நிகழ்த்துவதின் ஒரு குறியீடாகவே கருணானிதியின் இந்தக்கூற்றுக் கருதப்படலாம் என அரசியல் வடாரங்கள் தெரிவித்தன.
கருணாநிதி எப்போதுமே புலிகளை ஆதரித்தது இல்லை. அப்படி அவர் ஆதரித்திருந்தால் அதற்கான சான்றுகளை நீங்கள் தர முடியுமா? எம்.ஜீ.ஆருக்கும் இவருக்குமான பதவி அதிகாரப் போட்டியில் இவர் போராளைகளை வைத்து விளையாடினார். குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தது கருணாநிதி. அதன் பின்னர் குட்டிமணியின் குடும்பத்தாருக்கு சென்னையில் இலவச வீடு வழங்கினார் எம்.ஜீ,.ஆர் இது ஒரு வரலாற்று உண்மை இல்லையா?
“குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தது கருணாநிதி. ”
எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?
கருணாநிதியை மீறிய ஒரு அரசியல் அயோக்கியனைக் காணுவது அரிது என்பதை ஏற்கிறேன். ஆனால் எல்லக் குற்றங்களையும் அவர் மீது சுமத்த் இயலாது.
கருணநிதியோ எம்.ஜி.ஆரோ யாரையும் ஆதரித்தது நிலைப்பாடு சார்ந்தல்ல. வசதி கருதியே.
இருவருமே மத்திய அரசை மீறி எதையுமே செய்ய மாட்டாதவர்கள்.
xxxஇல்ங்கை அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் குட்டி மணியை ஒப்படைத்தது கருணாநிதிதான். இது இப்போது சொல்லப்பட்ட குற்றச்சாட்டல் நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது.
அருள், நன்றி.
இலங்கை அரசு கருணாநிதியிடம் நேரடியாகக் கேட்க இந்தியச் சட்டப் படி இடமிராது.
நாட்டை விட்டுத் திருப்பி அனுப்பும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.
மத்திய அரசே இவ்வாறன விடயங்களைக் கையாள முடியும்.
(நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வருவதால் தகவல் சரியாக இருக்கத் தேவையில்லை).
கருணநிதி ஒத்துழைத்திருப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை.