Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம் : சுனந்த தேஸப்ரிய

இனியொரு... by இனியொரு...
05/06/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts

நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவரது கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர்கள் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல.

இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியை தண்ணீரில் மிதந்துசெல்ல விட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணி வரை அங்கு கூடியிருந்த அவர்கள், உடலானது பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள்.

பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவமொன்றை அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்பொழுதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும் வண்ணம் அக் கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக் கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களையே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.

எந்தவொரு நற்பண்புள்ள சமூகத்தினாலும் மிகக் கேவலமாகக் கருதப்படக் கூடிய இச் செய்கை நடைபெற்றிருப்பது எங்கோ தொலைதூரக் கிராமமொன்றிலல்ல. இலங்கையின் இராணுவத் துறையால் எப்பொழுதுமே கண்காணிப்புக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித் துறையில். இந்தச் செய்கையில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களென உறுதியாகச் சொல்வதற்கான சாட்சியங்கள் இல்லாமலிருப்பதற்கு வாய்ப்பில்லை. அது ஏனெனில், இராணுவத்தின் பாதுகாப்பு அல்லது அறிதலற்று வேறொரு குழுவுக்கு இரவில் ஆயுதங்களைப் பாவிப்பதற்கோ, நள்ளிரவில் இது போன்ற காரியங்களைச் செய்வதற்கோ இயலுமென எண்ணுதல் மிகவும் கடினம்.

எவரால் செய்யப்பட்டிருப்பினும், இலங்கையின் பெரும்பான்மையான அத்தோடு ஆட்சியாளர்களின் மதமான பௌத்த மதத்துக்கு மட்டுமல்லாது, ஒழுங்குமுறையாக மதங்கள் உருவாவதற்கு முன்பிருந்த எந்தவொரு மானிட நம்பிக்கைகளுக்கும் கூட இந்த ஈனச் செயலானது பொருத்தமானதல்ல. இறந்தவர்களை கௌரவிப்பதென்பது மானிட சமூகத்தினைப் போலவே தொன்மையானதொரு பண்பாடு. துட்டகைமுனு மன்னனுடன் கடுமையாகப் போரிட்டு இறந்து போன அரசன் எல்லாளனது கல்லறையானது, கௌரவிக்கப்பட வேண்டுமென துட்டகைமுனு மன்னனினாலேயே இடப்பட்ட கட்டளையை பெருமிதத்தோடு ஞாபகப்படுத்துமொரு சமூகத்தில் இப்பொழுது யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்களின் பிற்பாடு, இந்த மோசமான ஈனச் செயல் நடைபெற்றிருக்கிறது.

எந்த நிலைமையின் கீழும், எந்த வர்க்கத்தினராலும் கூட இம் மாதிரியான பழிவாங்கும் செய்கையொன்று, சிங்கள மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதென்று எண்ணுவது கடினம்.

பிரபாகரனின் அரசியலோடு ஒன்றுபடுபவர்களைப் போலவே அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறார்கள். அது எவ்வாறாயினும் இம் மாதிரியான மனிதத் தன்மையற்ற நடவடிக்கையின் மூலமாக புலப்படுவது முழுத் தமிழ்ச் சமூகத்தையே அவமதிப்புக்கு உட்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட பலம் மிக்கவொரு சக்தி இலங்கையில் செயற்பாட்டிலிருக்கிறதென்பதுதான். இந்த நடவடிக்கையால் தமிழ்ச் சமூகத்துக்கு சொல்லப்படும் செய்தி என்ன? அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் எனப்படுபவர்கள், தங்களிடையே மரணித்தவர்களை கௌரவிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் என்பதுதானே?

இந்த அறுவெறுப்பூட்டும் கேவலமான செய்கை, அரசியல் ரீதியாக தமிழ் இளைஞர்களினுள்ளே எவ்வளவு இயலாமையையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்?

இந்தச் சம்பவமானது தங்களது தன்மானத்தைக் குறிவைத்த அவமதிப்பொன்றென தமிழ்ச் சமூகத்தில் வாசிக்கும், எழுதும், சிந்திக்கும் மக்களினது, அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், சிந்தனையைத் தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனிதத் தன்மையற்ற செயலினால் சிங்கள அரசு குறித்து, தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அவநம்பிக்கையானது இன்னும் இன்னும் அதிகரிக்காமல் இருக்குமா? எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குறித்த எந்தவொரு பேச்சும் எங்கள் சிங்கள சமூகத்தில் எழவில்லை. அதற்குக் காரணம் பெரும்பான்மையான ஊடகங்கள் வெளிப்படுத்தும் பெரும்பான்மைச் சிந்தனை மற்றும் சுய பாதுகாப்பு.

பாராளுமன்ற அமைச்சரும் தொலைக்காட்சி நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலியின் கன்னம் வெடிக்குமளவுக்கு அவரது கணவரால் அவர் தாக்கப்பட்ட செய்தியானது, இலங்கையின் பெரும்பான்மை ஊடகங்களால், எவ்வளவு காலத்துக்கு மீண்டும் மீண்டும் சுவையூட்டப்பட்டு பதிவுசெய்யப்பட்டது? (ஆனால் அந்தச் சம்பவமானது பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை.) எத்தனை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும்? வைத்தியசாலையிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்று தொடர்ச்சியாகப் பதிவுசெய்ய அனேக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் காட்டிய ஆர்வம்தான் என்னே!

எனினும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையொன்றாக, யாழ்ப்பாணத்தில் தாயொருவரின் சடலம் எரியூட்டப்பட்டதன் பிற்பாடு அந்த அஸ்தியின் மீது, சுட்டுக் கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டதன் மூலம் செய்யப்பட்ட அவமதிப்பை பதிவு செய்ய எந்த ஊடகம் முன்வந்தது? இந்த இரண்டு சம்பவங்களுக்கிடையிலும் நீண்ட கால முக்கியத்துவம் எமது சமூகத்துக்கு இருப்பது எந்தச் சம்பவத்தில் என்பதில் வாதிடுவதற்கு ஏதுமில்லை.

மக்களது அமைதிக்கு இடையூறு நேரும் வண்ணம் செய்தி பதிவு செய்வதில் ஈடுபட வேண்டாமென ஜனாதிபதியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா வரை ஊடகங்களுக்கு அறிவுருத்துகிறார்கள். எச்சரிக்கிறார்கள்.

இனத்துவேசத்தைக் கிளப்புகிறார்களென அரசியல் கட்சிகள் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். என்றபோதிலும் இந்த நாய் உடல்களின் அரசியலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் உதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு முக்கியஸ்தரும் வாய் திறக்கவில்லை. இனத் துவேஷம் மற்றும் மக்களிடையே ஒற்றுமையின்மை ஏற்படுவதுவும், பரவுவதும் இவ்வாறான நடவடிக்கைகளால்தான் என்பதனைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பது யாரால்?

இந்த அவமதிப்பை ஏதோவொரு சம்பவம் என எண்ணி மறந்துவிட முடியுமென எவரும் எண்ணுவதற்கோ, வாதிடுவதற்கோ இடமிருக்கிறது. எனினும் அவ்வாறு முடியாதிருப்பது, இதுவரையில் இது ஒரேயொரு சம்பவம் மாத்திரமல்ல என்பதனாலேயே. யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு கேள்விப்பட்ட புனர்நிர்மாணம், மீள்குடியமர்த்தல் போன்ற எண்ணங்கள் சமூக அரசியல் நடவடிக்கையொன்றாக உருவாவதற்குப் பதிலாக இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் ஆட்சியொன்றின் கீழ் இரண்டாம் தரப்புக் குடிமக்களாக வைத்திருப்பதே.

தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவு செய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப் புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயேதான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அதனாலேயேதான். அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.

ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களை சுதந்திரமாகவும், ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே.

சிங்கள  மொழியில் : சுனந்த தேஸப்ரிய
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விலைபோகும் கூட்டமைப்புத் தலைவர்கள் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Comments 5

  1. thamilmaran says:
    15 years ago

    இதைத்தான் தமிழராகிய நாம் எதிர்பார்க்கிறோம்.இல்ங்கையில் தமிழர் தனித்திருப்பதான உணர்வு மாற் சிங்களவர் தமிழருக்கு நம்பிக்கை தர வேண்டும்.இது அதன் முதற்படி.

  2. YOGA.S says:
    15 years ago

    எது,நாயை சுட்டு அஸ்தியின் மேல் வீசியதா?சுனந்த தேசப்பிரிய எழுதிக் கொண்டே இருக்கிறார்!நாங்களும் வாசித்துக் கொண்டே இருக்கிறோம்.இத்தனைக்குப் பிறகும் சுனந்த தேசப்பிரியவும்,தமிழ் மாறனும் தான் “விடாப்பிடியாக”சேர்ந்து வாழ வேண்டும் என்கிறார்கள்!அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு தமிழ் மகனுக்கும் நீதியோ,நியாயமோ கிட்டவில்லை!கைது செய்து தடுத்து,குற்றம் செய்யாதிருந்தோருக்கே, உயர் நீதிமன்ற நீதியரசரே பரிந்துரைத்த போதும் “நீதி” கிட்டாத போது கூடுவதாவது,குலாவுவதாவது?ஏதோ பேசித் தீர்க்கிறார்களாம்!எத்தனை தடவை பேசி,ஒப்பந்தம் போட்டு,கிடப்பில் போட்டு,கிழித்து வீசி பார்த்து விட்டோம்!ஐ.நா வும்,அமே………………..!ரிக்காவும்,சுனந்த தேசப்பிரியவும் “சுவற்றுடன்”பேசி விட்டுப் போக வேண்டியது தான்.வாழ்க தமிழ்!!!!

  3. Mahendra says:
    15 years ago

    சிங்களன் என்றால் அவனை புத்தமதத்தவனாகவே தோற்றம்பெறச் செய்துள்ளது சிங்கள அரசு. உண்மையில் புத்தர் பிறப்பால் ஒரு இந்து, அவர் தான் பிறந்த சமயத்தை இழிவுபடுத்தியதாக வரலாறில்லை. என் போதனைகளை பின்பற்றுங்கள் என்று சொன்னவரை கடவுளாக்கி ஏற்றுக்கொண்டவர்கள், அவர் தோன்றிய மதத்திற்கும் மதிப்பளித்து பெருமைகொள்வதுதான் இயல்பாக இருந்திருத்தல் வேண்டும் ஆனால் நடப்பதோ வேறு. தங்கள் கடவுள் தோன்றிய மதத்தையே இழிவுபடுத்துவதோடு, அழித்தும் வருகின்றனர். ஆனாலும் தமிழன் நிலை வேறு. இன்றும் இலங்கையில் காணப்படும் பழைய புத்தவிகாரைகள் சில தமிழனால் கட்டுவிக்கப்பட்ட சரித்திர ஆதாரங்கள் உண்டு.

    பாதையில் முள்ளை விதைத்துப் பயணிக்கிறது சிங்களம். அந்தப் பயணத்தின் வலி தொடர்ந்தால் கால்கள் வலிமை இழந்துவிடும் என்பதை சிங்களம் இன்னமும் உணரவில்லை. உணரும்போது அதனால் எழுந்து நிற்கவே முடியாத நிலமை வரும். வெற்றியும் தோல்வியும் நிலையானதல்ல.

  4. யாழ் says:
    15 years ago

    காலம் காலமாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் அவமதிப்புகளில் இதுவும ஒன்று.  அட சிங்கள பததிரிகைகளை விடுங்கள். தமிழ் பத்திரிகைகள்  அரசியல் வாதிகள் என்ன செய்தார்கள். இனியும் இந்த இரண்டு இனமும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் (தமிழர்கள்) சிந்திக்கட்டும்.

  5. Pingback: Indli.com
  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...