அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும் என ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா. புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் மூலம் இலங்கையை இரண்டாக்க கண்ட கனவையே அரசு போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் .தேர்தலுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தமது முடிவைத் தெளிவாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தோன்றி பேராபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பிரபாகரன் போர் மூலம் நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு பிளவுபடுவதற்கும் 13 வது திருத்தச்சட்டத்திற்கும் தொடர்புகள் கிடையாது என்பது ஜோசப் பெரேரா தெரிந்துகொள்ளும் வரை அவர் சார்ந்த இனவாதக் கட்சியும் இணைந்தே இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போராடத்தூண்டுகிறது என்பது வெளிப்படையானது.
திட்டமிட்ட குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழ்ப் பேசும் மக்கள் சொந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்டு சிறுபான்மையாக்கப்பட்டுள்ள கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தியே வட கிழக்கு இணைந்த மாநிலமாகும் என திருத்தச்சட்டம் கூறுகிறது. தவிர, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியே வடகிழக்கு இணைப்பு மட்டுமன்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஆணையிட வேண்டும். ஆக, 13ம் திருத்தச்சட்டம் எந்தவகையான குறைந்தபட்ச உரிமைகளையும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வழங்கப்போவதில்லை.
அது நடைமுறைப் படுத்தப்படுகிறதோ இல்லையோ தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையில் எந்தவகையான பாதிப்புக்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. சட்டமுலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் அனல் பறக்க நடக்கும் விவாதங்களும் அன்னி நலன்களுக்கானதாகும். தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.
தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டம் பிரபாகரனின் ‘கனவு’ அல்ல. மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி.
தமிழர்களின் கனவில் கலைந்த விம்பம்,பிரபாகரனாக இருக்கலாம்.ஆனால் தமிழர்களின் கனவு நனவாக வேண்டும்.
ஈழத் தமிழர்களீன் கனவு பிரபாகரனின் கனவு கண்டிப்பாக மெய்பட வேண்டும்.தமிழ் ஈழம் மலர வேண்டும்.
Very soon the IC will,force an election on north and east to determine if they want to be separated.then the results will be obvious.The MR govt.willmgive in a platter what VP dreamed for.you cannot keep on suppressing a minority forba long time.definitely there is going to be a change in govt.in India soon.the new Indian PM may not be man without backbone.
பிரபாகரனின் ‘கனவு ;லோரன்ஸ் திலகர், அடேல் பாலசிங்கம், அன்ரன் பாலசிங்கம், யோகரட்னம் (யோகி), பரமமூர்த்தி ஆகிய விடுதலைப்புலிகளின் புpரதிநிதிகள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் காணப்படுகின்றனர். 1989 மே 5ம் தேதி எடுக்கப்பட்டது இந்தப்படம். தமிழரின் எதிரியான சிங்கள அரசின் ஜனாதிபதி பிரேமதாசாவுடன்டன் கூட்டுச் சேர்ந்து தமிழர் இயக்கங்களையும், உதவிக்கு வந்த அமைதிப்படையையும், தமிழ் அரசியல் கட்சிகளையும் கூட தாக்கி அழித்தனர் புலிகள்.
உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இது போன்று எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை; எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று சக போராளி இயக்கத் தலைவர்களையும், அவர்களது இயக்க அங்கத்தினரைப் படுகொலை செய்தவர்கள் புலிகள் மட்டுமே. பிரேமதாசா சிங்கள இராணுவத்தைத் தாக்குவதற்காவா ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கினார்? எந்த ஒரு தமிழ் இயக்கமும் எமது எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை. இப்படியான செயலை ஆரம்பித்து வைத்தவர்களே புலிகள்தான். உலகத்திலேயே மிகவும் வெக்கக்கேடான போராட்டம் ஈழத்தில்தான் நடந்தது என்றால் அது மிகையல்ல. துரோக வழியில் பெற்ற ஆயுதங்களைக் கொண்டுதான் புலிகள் இயக்கம் இருபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களைக் கொன்றனர் என்பதை மிகவும் சுலபமாக மறைத்து திம்பு மாநாடு 1985 ஜூலை 8 முதல் 13ம் திகதி வரையில் முதல் கட்டமாகவும், 1985 ஆகஸ்ட் 12 முதல் 17ம் திகதி வரையில் இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில் வைத்துச் சிங்கள இராணுவத்தினர் 200 தமிழர்களைப் படுகொலை செய்தனர். இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தமிழர்களைக் கொல்லும் ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று அனைத்துத் தமிழ் விடுதலை இயக்கங்களும் வெளியேறின. இதுதான் நடந்த உண்மை.டெலோ இயக்கத்தில் இணைந்துதான் பிரபாகரன் இரண்டு கொள்ளைகளை நடத்தினார். பணத்தில் பாதி கைக்கு வந்ததன் பின்னர் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் பிடிபட்ட பின்னர் இந்தியா வந்து மீண்டும் புலிகள் இயக்கத்தை தொடங்கினார் பிரபாகரன். பணமும், பலமும் வந்து சேர்ந்ததும்தான் தான் இணைந்திருந்த அதே இயக்கத்தை பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி அழிக்கிறார் பிரபாகரன்.டெலோ இயக்கத்தினரைப் படுகொலை செய்வதற்கு முன்னர், பிரபாகரன் ஈழத்தில் மைக்கல், அப்பன், சுந்தரம், ஒபரே தேவன் என்று பலரைக் கொன்றுள்ளார். சென்னை பாண்டிபசாரில் வைத்து உமா மகேசுவரன் மற்றும் கண்ணன் என்பவரையும் 1982ல் துப்பாக்கியால் தானே முன்னின்று சுட்டார்.“கந்தன் கருணைப் படுகொலை”யும், “வெலிக்கடைப் படுகொலை”யும்
30-03-1987 அன்று கிட்டு (அன்றைய புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி) தனியாக ஓரு வாகனத்தில் இரவு வேளையில் சென்ற போது இவருக்கு எதிரியான ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கைக் குண்டை இவரது வாகனத்தினுள் வீசிவிட்டார். குண்டு வெடித்ததால் இவரது பாதம் ஒன்று காணாமல் போய்விட்டது.
2000 தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்து களைப்படைந்திருந்த வேளையில்தான் கிட்டுவுக்கு இந்தக் கதி ஏற்பட்டது.பிரபாகரனும் அவருடைய குழுவும் 1983-07-23 அன்று 13 சிங்களச் சிப்பாய்களைக் கண்ணிவெடி வைத்துக் கொன்றனர். இதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாகச் சிங்கள இராணுவம் 1983-07-25 அன்று அதாவது இரு நாள்கள் கழித்து 53 தமிழ் இளைஞர்களைப் (குட்டிமணி உட்பட) படுகொலை செய்தனர் வெலிக்கடைச் சிறையில் வைத்து. இதற்கு உலகத் தமிழர்கள் வைத்த பெயர் “வெலிக்கடைப் படுகொலை.”“வெலிக்கடைப் படுகொலை”யைச் செய்தவர்கள் சிங்கள இனத்தவர்கள், “கந்தன் கருணை”ப் படுகொலையைச் செய்தவர்கள், மேதகு புலிகள். இந்த இரண்டு படுகொலை நிகழ்ச்சிகளிலும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்தான். குறிப்பாக விடுதலைப் போராளிகள்.போராளிகளே ஒன்றுபடுங்கள்! உங்களுக்குள் மோதிக்கொள்ள வேண்டாம்” என்று எப்போதாவது ஒரு நபர் கேட்டுக்கொண்டதுண்டா?
தமிழர்களுக்கு ஒழுங்கா, மரியாதையாக தனியாக வாழ மண் வேண்டும். இல்லையெனில் மீண்டும் போர் வேடிக்கும்.
தமிழர்கள் சிந்திய குருதியும்,வியர்வையும்,அவர்கள் கண்ட கனவு இலட்சியம் விரைவில் அடையவேண்டும்.
புதிய மொந்தயில் பழைய கள்ளா?
தமிழ் ஏழம் மலரனும்
Did I see the Secretary of Defense Colonel Gothapaya Rajapakse standing by the side of someone this week in a Tamil News Paper? Man this is too much to handle here at Batticaloa.
இத்தகைய குற்றசாட்டுகள் அமெரிக்கா முதல் இங்தியா வரை விடுதலைப்போர் வரலாற்ற்ல் உண்டு.தமிழர்கள் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.ஒருமித்த குரல் என்றுமே ஈழம் பெற்றுத்தரும்.
இனியும் ஈழத்தமிழர்களை வீரவசனம் பேசி சிங்கள தேசம் ஏமாற்றிவரும் நிலையில் எதனையும் சாதிக்க முடியாது . என்பது தெரிநதும் நாம் எம்மை அடையாளம் காணப்படாமல் டக்ளஸ்தேவானந்தா கருணா போன்றோரை வளர்ப்பதில் அர்த்தம் இல்லை அரசியல் சுதந்திரம் என்றால் என்ன என்பதனை புரியாத சிங்கள இனவாதம் 64வருடம் தொடர்ந்ததை இனியும் தொடர முடியும் என்றால் ஈழத்தமிழர்கள் தம்மை பாதுகாக்க போராடித்தான் ஆக வேணடும் என்ற நிலை மாறி அனைத்துலக அரசியல் சமூகம் அதற்கான பதிலை தேடும் என்பதில் எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டியவர்கள் சிங்கள இனவாதிகள்தான்.
அதனால் ஈழத்தமிழர்கள் யார் அவர்களது சுதந்திரம் என்ன என்பதனை புரியாத சிங்கள இனவாதத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதனை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அனைத்:துலகமே எதிர்பார்த்திருப்பதனை புரிந்தால் 64வருட அரசியலை தவறான முறையில் வளர்த்து தம்மை தாம் அழிக்க ஆயுதம் ஏந்தி பேராடிய சிங்கள தேசம் என்பது புரியும். காரணம் தமிழர்கள் போராடியது தமக்காக சிங்கள தேசம் போராடியது இனவாதத்திற்காக என்ற உண்மை சிங்கள மக்களுக்கு புரியவேண்டியதே காலத்தினது தேவை.
அவற்றினை சில தமிழர்களும் புரியாமல் செயல்படுவது வரலாற்றில் எது எப்போது என்பதில் உள்ள புரிதல் ஆனது மாற்றுக்கருத்துக்களாக வளர்கப்பட்டாலும் . வரலாற்றினது தோல்வியாக அடையாளம் காணப்பட முடியாது காரணம் ஒரு மனித சக்திக்கு அப்பால் பட்டதே வரலாறு அதனை தவறானவர்கள் தம்மை அடையாளம் காட்ட முடியாது என்பதற்கு ஈழவிடுதலையும் ஒரு உதாரணம் . 30வருட ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல முள்ளிவாய்கால் அவலத்தில் கூட ஈழத்தின் வரலாற்றினை அடையாளமாககொண்டுதான் இன்றைய நிலையினது புரிதல் உள்ளது அதனால் விடுதலைப்புலிகள் அமைபில் தவறுகள் வளர்கப்பட்டதற்கும் பலகாரணங்கள் இருந்திருக்கலாமே தவிர வரலாற்றிற்கான தவறாக கருத முடியாது. அதனை உலகத்தமிழினம் மட்டுமல்ல சிங்கள தேசமும் புரிய வேண்டிய தேவை உள்ளது.
அதனால் இந்தியாவோ அனைத்துலக அரசியல் சமூகமோ யதார்தங்களில் எது சரி என்பதனை ஏற்றாக வேண்டும் என்பதே காலத்தினது விதி அதனால் புரிந்துணர்வற்ற இனவாதிகள் தம்மைதாம் அடையாளம் காணுவது போல் அதனை வளர்க்க பக்கபலமாக செயல்பட்ட தமிழர்களும் ஈழவரலாற்றினது உண்மை எது என்பதில் தெளிவுபட வேண்டும். அதாவது கடந்தகால போராட்டம் நியாயமானது அதனை அடையாளமாக கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழினம் அடையாளப்படுத்தி உள்ளார்கள் அதனை சந்தற்பமாக பயன்படுதத்தவறினால் உலகமே நாட்டை தவறான பாதைக்கு மாற்ற நிற்பந்திகப்பட வேண்டிய நிலையை சிங்கள அரசியல் சமூகம் எதிர் நோக்க வேண்டிவரும் என்பது கால யதார்தமும் புரிதலும் .