Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனால் தீர்வு கிடைக்கவில்லை, தனிநாட்டிற்கு ஆதரவில்லை : சொல்ஹெய்ம்

இனியொரு... by இனியொரு...
05/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்களுக்கு பிரபாகரனினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை என எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
நோர்வே பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது தனி நாட்டுக் கோரிக்கைக்கு “சரவதேச சமூகம்” ஒரு போதும் ஆதரவு வழங்காது எனக் குறிப்பிட்டார். இலங்கைக்குள் தனிநாடு உருவாவதனை சர்வதேச சமூகம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனும் உரையாற்றியுள்ளார்.
இலங்கை வாழ் தமிழ் மக்களை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களினால் வழிநடத்த முடியாது எனவும், உள்நாட்டில் வாழும் அரசியல் தலைவர்களே தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தீர்வின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகளவு நம்பிக்கை கொண்டிருதமையே சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தடையானதாக அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐக்கிய நாடுகள் நிறுவனம் தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும் : உணர்ச்சி வயப்படும் ராமதாஸ்

Comments 2

  1. veeran says:
    14 years ago

    18ஐ ஒட்டி 2009 ஜூன மாதம் தேனீயில் வெளியான வெளியான இக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம்

    மக்களின் பிழையான முடிவுகளும் ஆதரவுகளும் பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்.

    – அ.வரதராஜப்பெருமாள்

    அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகுந்த தோழர்களே!

    ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.! புலிகளை யாரும் வெல்ல முடியாது.! புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டிருக்கிறார்கள்.! காற்றுப் போக முடியாத இடங்களுக்குள் கூட புலிகளின் உளவுப்படை புகுந்து எதிரியின் தகவல்களை எடுத்து விடும்.! புலிகள் இலங்கையின் தேவேந்திர முனையிலிருந்து இமயத்தின் அடிவரை யாரையும் மனிதக் குண்டால் வெடித்துக் கொல்லும் வல்லமை கொண்டவர்கள்.!

    புலிகள் தீர்மானித்தால் சங்கானை தொடக்கம் சென்னைவரை, வல்லை தொடக்கம் டெல்லி வரை, பலாலி தொடக்கம் பாரிஸ் வரை, அரியாலை தொடக்கம் அயர்லாந்து வரை, தொண்டமானாறு தொடக்கம் ரொறன்ரோ வரை, பூநகரி தொடக்கம் பெர்லின் வரை யாரையும் அவர்கள் கொல்லுவார்கள். அவாகள் யார் காலையும் கையையும் அடித்து முறிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.!

    உலகின் நான்காவது பெரும் படையையே தோற்கடித்தவர்கள் புலிகள்.! உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரையும்; புலிகளின் துப்பாக்கிகளுக்குப் பயந்து நடுங்கி பிடரி குளிரும் நிலையில் ஒவ்வொரு கண நேரமும் வைத்திருந்தவர்கள்! ஹிட்லரே அறிந்திடாத வகையான சித்திரவதை முகாம்களை கண்டுபிடித்து நிறுவுவதல் புலிகள் மிகத்தேர்ந்த படுகொலை விற்பன்னர்கள்;! அவர்கள் தமிழீழம் எடுக்காமல் விடவேமாட்டார்கள்.!

    புலிகளிடமிருந்து ஓரடி மண்ணைக் கூட சிங்களப் படைகளால் கைப்பற்ற முடியாது.! ஒரு புலியைக் கூட சிங்கள இராணுவத்தால்; கைது செய்ய முடியாது ஏனென்றால் புலிகள் ஒன்றில் போராடிச்சாவார்கள் அல்லது தம்மைத்தாமே வெடித்துச் சாவார்கள் அல்லது கழுத்தில் தூங்கும் சைனட்டைக் கடித்துச் சாவார்கள்.!

    உலகில் எந்த சக்தியாலும் புலிகளின்; ஓர் அணுவைக் கூட அசைக்க முடியாது……. பிரபாகரனின் நிழலைக் கூட நெருங்க முடியாது! இப்படியான கருத்துக்களே இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழர்களில் பெருந்தொகையானோரின் சிந்தனைகளை நிறைத்து நின்றன. தமிழர்கள் மத்தியிலென்ன சிங்களவர்களிற் கணிசமானவர்களிற் கூட அப்படித்தான் இருந்தது. உலகின் பல பாகங்களிலும் பெருந்தொகையான அரசியலாளர்கள், கல்வியாளர்கள் பத்திரிகைக்காரர்கள், என பல தரப்பட்டவர்கள் மத்தியில் அவ்வாறான அபிப்பிராயமே இருந்தது.

    ஆனால் சிறிலங்கா இராணுவம் ஒரு மூச்சுப்பிடித்து தாக்கிய போதுதான் புலிகளின் இராணுவ பலவீனங்களும் போலித்தனங்களும் வெளிப்பட்டன. •புலிகள் ஒரு தொடர் நேரடி யுத்தத்துக்கு தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்தது. கொரில்லாப் போர்த் தந்திரத்துக்கு மாறும் வல்லமையையும் புலிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிந்தது. •புலிகள் கட்டியிருந்ததெல்லாம் ஒரு மாயமாளிகையே என்பது அம்பலமானது. •புலிகளிடம் நீண்டகாலப் போருக்கு உரியவகையான எந்தவித தயாரிப்பும் இருக்கவில்லை யுத்த உபாயங்களும் இருக்கவில்லை என்பது வெளிப்படையானது.

    •புலிகள் தாங்கள் தமிழீழ முப்படைகள், தமிழீழ பொலிஸ் நிலையங்கள், தமிழீழ நீதிமன்றங்கள், தமிழீழ வங்கி, தமிழீழ சிவில் நிர்வாகம் எனக் காட்டிய பிரமாண்டங்களெல்லாம் சினிமாப் படப்பிடிப்புக்குப் போடப்பட்ட காட்சி செட்டுகள்;, வேஷங்கள் போன்றவையே என்பது அம்பலமானது. •புலிகளின் விமானப் படையைப் பற்றி உலக அதிசயத்தைப் போல் பேசினார்கள். கடைசியாக அவைகள் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வான வேடிக்கை காட்டிய பறக்கும் தகரப்பெட்டிகள் என்னும் குட்டு வெளிப்பட்டது.

    •மாவிலாறில் ஓடத் தொடங்கிய புலிகள் கடைசியாக முள்ளிவாய்க்காலில் சரணடைகின்ற வரை ஒரு இடத்தில் கூட அரச படைகளுக்கு முன்னால் புலிகளின் தரைப்படை ஏன் நின்று பிடிக்க முடியாமற் போனது. ஏனென்றால் வன்னியின் பள்ளிக் கூடங்கள் ஒவ்வொன்றிலுமிருந்தும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி விட்டு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதே புலிகளின் பிரமாண்டமான தரைப்படை. அந்த அப்பாவிச் சிறார்கள் முன்னால்போன போது அரசபடைகளால் சுடப்பட்டார்கள் பின்வாங்கி ஓடிய போது புலித் தளபதிகளால் சுடப்பட்டார்கள் ஆக மொத்தத்தில் பாவம் அவர்கள் சிட்டுக் குருவிகள் போல் செத்து மடிந்தார்கள்.

    புலிகளின் தளபதிகளோ அரச படைகள் முன்னேற முன்னேற தாம் மட்டும் தப்புவதற்காக தொடர்ந்து கால் பிடரியில் அடிபட ஓடினார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் நந்திக் கடலின் ஓரம் வரை ஓடினார்கள. ஒரேயொரு இடத்தில் மட்டும் அவர்கள் முன்னோக்கி நடந்தார்கள். கடைசியாக ஓடவழியில்லாமல் போனபோது கைகளைத் தூக்கியபடி அரசபடைகளை நோக்கி முன்னே நடந்து போய் காலடியில் விழுந்தார்கள்.

    •சிறீ லங்கா அரசின் எத்தனையோ நவீன போர்ப்படகுகளையும் பல கப்பல்களையும் அடித்து கடலில் மூழ்கடித்த புலிகளின் கடற்படை எப்படி காணாமற் போனது. புலிகளின் கடற்படை ஒரு கள்ளக்கடத்தலுக்கான படையே தவிர வேறோன்றுமில்லை என்பதை பலரும் புரியத் தவறிவிட்டார்கள். அந்தப் படையால் இரவோடிரவாக இரகசியமாக திட்டமிட்டவகையில் எதிர்பாராத வகையான தாக்குதல் மூலம் அரசின் போர்ப்படகுகளை ஆங்காங்கே தாக்கி அளிக்கலாம். அதற்கு மேலாக ஒரு அரசின் முறையான கடற்படையமைப்பை வெல்லும் திறன் ஒரு கள்ளக்கடத்தல் கடற்படைக்கு எவ்வகையிலும் ஏற்படமுடியாது என்பதே இங்கு வெளிப்பட்டுள்ளது.

    சிறிலங்காவின் அரச படைகள் முறையாக தொடர்தாக்குதலை நடாத்திய போது புலிகளின் அத்தனை போலி அமைப்புக்களும் பொலு பொலுவென உலுந்து கொட்டிச் சின்னாபின்னமானதையே கடந்த சில மாதங்களில் நாம் கண்டோம்.

    1980களில் பிரபாகரனை சிலர் சேகுவேரா மற்றும் அமில்கார் கப்ராலுடன் ஒப்பிட்டார்கள்… புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்ட போது பிரபாகரனை ஒரு சிலர் மாவோ சே துங் மற்றும் ஹோ சி மின்னுக்கு கொஞ்சமும் சளைக்காதவர் என்றார்கள்… 1990களில் புலிப்பிரச்சாரகர்கள் பிரபாகரனை யசீர் அரபாத்துடனும் மற்றும் நெல்சன் மண்டேலாவுடனும் சமப்படுத்தினார்கள்….. 2000ம் ஆண்டுகளில் புலி ஆதரவாளர்கள் பிரபாகரனை பூமியில் தோன்றிய சூரியதேவன் என தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டாடத் தொடங்கினர்கள்; ……

    ஆனால் 2009ம் ஆண்டு அதே பிரபாகரன் கைகளைத் தூக்கியபடி சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் சினிமாப் படங்களில் வரும் வில்லன் கடைசியாக கதாநாயகன் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்பது போல சரணாகதி அடைந்தபோதுதான் இவ்வளவு குரூரங்களுக்கும் கொடூரங்களுக்கும் ஒழித்து நின்று தலைமை தாங்கிய பிரபாகரன்ஸ. முப்பதாயிரம் தமிழ் இளைஞர்களைப் பலிக்கடாவாக்கிய பிரபாகரன்,,,, மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கேடயமாக வைத்திருந்த பிரபாகரன் கேவலம் எவ்வளவு தூரம் தன் உயிர் மேல் மட்டும் ஆசை கொண்ட ஒரு கோழை, பொய்யன், போலித்தனமான ஆள் என்பது அம்பலமாகியுள்ளது.

    1974ம் ஆண்டு ஆனி ஐந்தாம் நாளில்; பொலிஸால் சுற்றி வளைக்கப்பட்டு தப்ப முடியாது என்ற நிலை வந்த போது சைனட் அருந்திச் செத்த அந்த மாவீரன் சிவகுமாரனுடன் எவரும் பிரபாகரனை ஒப்பிட வேண்டாம். இந்த 2009 ஆண்டின் மே மாதத்தின் ஒரு நாளில் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் அரச படைகளுக்கு எதிராக யுத்த களத்தில் சண்டையிட்டு குண்டடிபட்டு இறந்திருக்கக் கூடிய ஒரு 14 வயது சின்னப்பையனின் அல்லது அவ்வாறே அங்கு இறந்திருக்கக் கூடிய ஒரு சாதாரண சிங்கள இராணுவ வீரனின் காலடித் தூசுக்குக் கூட பிரபாரன் சமனாக முடியாது.

    1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டிற்குப் பின்னர் புலிகள் இதுவரை நடாத்திய இந்த யுத்தத்தில்:-•உலகில் எங்கும் இல்லாதவாறு ஒரு லட்சம் கோடி ரூபாக்களுக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். இதில் ஐம்பதாயிரம் கோடி ரூபாக்களுக்கு (சுமார் 5000 மில்லியன் டாலர்களுக்கு) மேற்பட்டவை தமிழர்களிடமிருந்து மிரட்டி பறித்த கப்பங்களும் வெருட்டி வசூலித்த கொள்ளை வரிகளும் பொய்சொல்லித் திரட்டிய கொடைகளுமே. மிகுதி போதை மருந்துகள். தங்கங்கள் வைரங்களை சர்வதேச அளவில் கள்ளக்கடத்தியதாலும் சில சர்வதேச நாடுகளின் கொடுப்பனவுகளாலும் திரட்டப்பட்டவை.

    •1990க்கும் 2009க்கும் இடையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்களை யுத்தத்தில் சாகக் கொடுத்திருக்கிறார்; இவ்வேளை 25000க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை புலிகளென யுத்த களத்திலும் சைனட்டைக்கடித்தும் சாகப் பண்ணியிருக்கிறார்கள்

    •10000க்கு மேற்பட்ட ஆற்றல்மிக்க சமூக உணர்வு கொண்ட தமிழர்களை தலைவர்களை சமூகப்பிரதிநிதிகளை துரோகிகள் என படுகொலை செய்திருக்கிறார்கள்.

    •வடக்கு கிழக்கு மாகாணத்தமிழர்கள் அனைவரினதும் வீடுவாசல்கள், தொழில் மூலதனங்கள்;, கல்விநிலைங்கள், பொதுக்கட்டிடங்கள் அனைத்தையும் அழியப்பண்ணினார்;கள் (இவற்றின் பெறுமதியும் சுமார் 5000 மில்லியன் டொலர்களென மதிப்பிடப்படுகிறது),

    •இந்தக்காலகட்டத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை மேலைத்தேய நாடுகளுக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவுக்கும் அகதிகளாக ஊரைவிட்டு ஓடப்பண்ணியிருக்கிறார்கள்.

    •ஒரு லட்சம் முஸ்லிம் மக்களை அவர்கள் பலநூறு ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து துரத்தினார்கள்.

    •ஊருக்குள்ளேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாகுவதற்கு காரணமானார்கள். அவர்களை சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் கையேந்தி பிச்சையெடுக்கும் வாழ்க்கைக்கு உள்ளாக்கினார்கள்.

    புலிகள் விதைத்த அழிவுகளையும் இழப்புக்களையும் துன்பங்களையும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் செய்த இத்தனைக்கும் காரணமான புலிகள் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தந்த நன்மையென்று எந்தவொரு துளியுமேயில்லை.

    நண்பர்களே! தோழர்களே!

    ஒவ்வொரு தமிழரையும் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்படி செய்யுங்கள்

    •எமக்கேற்பட்ட எல்லா அவமானங்களையும் புறக்கணித்து எல்லா அவச்சொற்களையும் தாங்கியபடி விடாப்பிடியாக இந்தியாவின் நண்பர்களாக கூடிநின்று அதன் துணையை முறையாக்கி வடக்கு-கிழக்கு மாகாண சபை மூலம் நாம் தேடிவைத்த நன்மைகளை யெல்லாம் புலிகள் பிரேமதாசாவுடன் கூடி நாசம் செய்தார்கள்.

    •பிரேமதாசாவினதும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சக்திகளினதும் சதிவலைக்குள் விழுந்த புலிகள் தமிழர்களோடு நின்ற இந்தியாவை தமிழர்களிடமிருந்து தூரம் போகும்படி விலக்கினார்கள்

    •சந்திரிகா அவர்கள் தமிழர்களுக்கு அநியாயம் நடந்திருக்கின்றது என்பதை ஒரு இயக்கமாக்கி அதனை தானாகவே சிங்கள மக்கள் மத்தியில் பரப்பினார். ஆகவே தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் தானாக நாடி வந்து முன்வைத்த அரசியல் தீர்வு நன்மையை புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் யுஎன்பியுடன் கூட்டமைத்துக் கொண்டு நின்று எட்டியுதைத்து தூர ஓட்டினார்கள்,

    •ரணிலின் ஆட்சிக் காலத்தில் உலக நாடுகள் ஒருங்கு திரண்டு வழங்குவதற்க முன்வந்த நிறைவான மாநில சுயாட்சி அமைப்பை புலிகள் ஏறெடுத்தும் பார்க்க மறுத்து இறுமாப்புக் காட்டினார்கள். தம்மை அசைக்க முடியாது என்ற அகங்காரத்தில் கடல் வானம் பூமி ஆகியவற்றின் மீது அனைத்து இறைமையும் புலிகளுக்கே என்றார்கள், புலிகளின் சண்டியர் படைகளையும், பொடிசுகள் கொண்ட பொலிஸையும் கங்காரு நீதிமன்றங்களையும் வடக்கு கிழக்கு மக்கள் மீதான கட்டற்ற கட்டுமிராண்டி அதிகாரங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கொக்கரித்தார்கள். இல்லையென்றால் சிங்கள இராணுவத்தினரின் 40000 சவப்பெட்டிகள் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், தென்னிலங்கை முழவதுவும் குண்டு மழை பொழியும், சிங்களவர்களின் நாடும் வீடுகளும்; சுடுகாடாகும் என்று புலிகள் மிரட்டினார்கள்.

    •ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் ஆரம்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கித்தான் நின்றார்கள். அதனால்த்தான் அவர்கள் ஜெனீவாவில் புலிகளுடன் பேசி சமாதானமாக ஒரு தீர்வைக் கண்டுவிட நோர்வேயின் துணையை நாடினார்;கள். ஆனால் ஜெனீவா சென்ற புலிகளோ சிறிலங்கா அரசினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளை கிண்டலடிக்கும் வகையில் பேச்சுவாத்தையில் அக்கறை காட்டாமல் ஐரோப்பிய நாடுகளின் உல்லாச பகுதிகளில் சுற்றுலா வந்தார்கள்.. … … அங்குள்ள ஒவ்வொரு நாட்டிலும் தமது ஆதரவாளர்களை உசுப்பேத்திவிட்டு காசு கறப்பதிலேயே கண்ணாக இருந்தார்கள்.

    •தமிழீழப் பிரிவினையைத் தவிர வேறெந்தத் தீர்வைப் பற்றி எந்த ஒரு தமிழர் பேசினாலும் அதற்காக முயற்சித்தாலும் அவரைத் துரோகியெனப் பிரகடனப்படுத்தினார்கள் – படுகொலை செய்து கொண்டாடினார்;கள். புலிகள் தமிழர்கள் மீது நடத்திய படுகொலைகளைத் தட்டிக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை. இவ்வாறாக யமனுக்கு அப்புறம் எந்தவொரு தமிழனதும் உயிரை எடுக்கும் உரிமை பிரபாகரனுக்கே உரியது என்னுமோர் நிலைமையே நிலவியது.

    •1957 தொடக்கம் 1983 வரைக்கும் சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவில்லை – கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்பது வரலாறு. அதுபோலவே 1985ம் ஆண்டு தொடக்கம் பொட்டுகள் வைத்த பொட்டன் உட்பட பொட்டு வைக்கப்பட்டுப் போகின்ற வரை பிரபாகரனின் புலி அமைப்பானது, தமிழர்களுக்கு எந்த நன்மையும் எவராலும் கிடைத்து விடாமல் தடுத்து விட்டமையும் தமிழர்களின் வரலாறே. சிங்களத் தலைவர்களுக்கும் ஜனநாயகரீதியான தமிழ்த் தலைவர்களுக்குமிடையே ஒரு நியாயமான அரசியல் உடன்பாடு ஏற்பட்டு விடாமல் புலிகள் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததுவும் நடந்து முடிந்துள்ள – மறுக்கமுடியாத – மறைக்க முடியாத வரலாறே.

    •தமிழர்களுக்கு அரச அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க கூடாது என்று செயற்படும் சிங்கள இனவாதிகள் எதையெல்லாம் செய்ய நினைத்தார்களோ – எவற்றைச் செய்யவெல்லாம் முயற்சித்தார்களோ அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு புலிகள் மிகவும் துணையாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே புலிகளின் இந்த அழிவு தமிழர்களை முற்போக்கான பாதையில் வழி நடப்பதற்கான வாய்ப்புக்களைத் திறந்து விட்டிருக்கிறது. சிங்கள இனவாதத்தின் தமிழருக்கு எதிரான குறுகிய நோக்கங்களை பின்னடையச் செய்திருக்கிறது என்பதில் தமிழர்களுக்கு தெளிவான கண்ணோட்டம் வேண்டும். புலிகளின் அழிவை சிங்களவர்கள் கொண்டாடியதைவிட அதிகமாக தமிழர்களே உண்மையில் கொண்டாடியிருக்க வேண்டும். ஏனென்றால் புலிகள் தொடர்ந்தும் இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகளில்;:

    •இன்னும் சில லட்சம் தமிழர்கள் சுடுகாடுகளில் கல்லாகியிருப்பார்கள்

    •இன்னுமொரு எட்டு லட்சம் பேர் கனடாவுக்கும் ஐரோப்பிய ந

  2. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    One hand all that he is saying is right. On the other hand they also got used as they may not know that Brigadier Sarath Fonseka ( December 1950) was recruited in 1999.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...