பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா முதற்தடவையாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கத் தீர்மானித்துள்ளார்.
பிரதம நீதியரசர், தனக்கெதிரான குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்ட நாள் முதல் இதுவரை அது தொடர்பில் எதுவித கருத்துகளையும் பிரதம நீதியரசர் தெரிவிக்கவில்லை.
அவரது சட்டத்தரணிகளே ஊடகங்களுக்குப் பதில்களை வழங்கி வந்தனர். இந்நிலையில், குற்றப் பிரேரணையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கையொப்பமிட்டு அதனை அனுப்பியுள்ள நிலையில், இது விடயத்தில் இதற்கு மேலும் மௌனம் காக்காதிருக்க கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தீர்மானித்துள்ளார்.
நீதித்துறையில் தாம் ஆற்றிய சேவைகள், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பன தொடர்பில் இந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது அவர் விரிவான விளக்கங்களை வழங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதற்கான விசேட செய்தியாளர் மாநாடு இன்று அல்லது நாளை இடம் பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறீ லங்காவில் இன்றைய சிறீ லங்கா அரசு ஒரு புற்றுநோய் போன்றது புற்று எங்கே உள்ளது என்று, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா வாலும் கண்டு தீர்ப்புக்கூற முடியாது. உலகில் சிறந்த வைத்தியர்களை எவர் தருவித்தாலும் அதனை இனம்கண்டு மாற்றமுடியாது. அதற்கு மருந்துமில்லை. இந்த அரசின் நோய்முற்றி அது தானாகவே அழியும். அதுவரை அதற்கும் வேதனை, அதுசார்ந்த அனைவருக்கும் வேதனை.