இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் பல மாநிலங்களில் திவீரமடைந்து வருகிறது. டெல்லியை ஒட்டிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தையொட்டி போலீசாரும் ராணுவமும் அமைத்திருந்த தடுப்புகளை விலக்கி விட்டாலும் பல மாநிலங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. காரணம் இந்த போராட்டங்களில் புகுந்து பாஜகவினர் இதை கலவரங்களாக மாற்ற முயல்வதுதான் இது போன்ற சூழலுக்குக் காரணம்.
இந்த போராட்டம் வடமாநிலங்களில் பெரிய தாக்கத்தை உருவாக்கினாலும் அரியானா மாநிலத்தில்தான் இது திவீரம் பெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டம் நடந்த போது கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்த வருகிறார் என்பதால் அதை பெரிய அளவில் பாஜக விளம்பரம் செய்தது. அப்போது அங்கு வந்த பாஜக எம்.பி ராம் சந்தர் ஜங்ராவின் காரை விவசாயிகள் தாக்கினார்கள். பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தாக்கியதில்
விவசாயி குல்தீப் ராணா படுகாயமடைந்து ஹிசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாய தலைவர் ரவி ஆசாத் தெரிவித்தார்.
உள்ளூர் காவல்துறையினர் பாஜகவினருக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் கோபமடைந்த விவசாயிகள் கேதர்நாத்தில் பிரதமர் மோடியின் வழிபாட்டை நேரில் காண்பதற்காகச் சென்ற பாஜகவினரை தடுத்து போராட்டம் நடந்த பகுதியில் உள்ள ரோஹ்தக்கின் கிலோய் கிராமத்தில் உள்ள கோவிலில் அடைத்து வைத்தனர். காவல்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் பாஜக தலைவர்களை விடுவிக்க மறுத்து விட்டனர்.
பாஜக தலைவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோவிலைச் சுற்றி விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி வைத்து விட்டதால் போலிசாரால் அங்கு நுழையவும் முடியவில்லை. ஏழு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு விவசாயிகளிடம் பாஜக தலைவர்கள் மன்னிப்புக் கேட்ட பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். பாஜக தலைவர்களுக்காக எந்த இந்துக்களும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.