லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் எக்நெலிகொட, பிரான்ஸில் தற்போது வாழ்ந்து வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காணாமல் போன ஊடகவியலாளர் எக்நெலிகொட பற்றிய தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவரது மனைவி சந்தியா எக்நெலிகொட தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் உ
ண்மையென்றால் எக்நெலிகொடவை கண்டு பிடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும் அதற்கான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்நெலிகொடவை கைது செய்வதற்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பிரதம நீதியரசரும் எக்நெலிகொட எங்கிருக்கின்றார் என்பது பற்றிய தகவல்களைத் தெரிவி
த்துள்ளதாகவும், அந்தத் தகவல்கள் உண்மையென்றால் அவரை அழைத்து வர சகல அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு உள்ளதாக சந்தியா எக்நெலிகொட தெரிவித்துள்ளார்.
கட்பிரதீப் எக்னெலிய கொட போன்ற நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச பாசிச அரசின் புதிய நாடகம் இதுவென்று கருதப்படுகின்றது.
எக்னெலியகொடவின் பெயரில் வேறொருவரை பதிவு செய்துவிட்டு அவர் காணாமல் போனார் என ராஜபக்ச அரசு பொய் சொல்ல வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஊடக வட்டாராங்களில் கருத்து நிலவுகிறது.
ஊழல் பேர்வளியான மோஹான் பீரிஸ் புதிய தலைமை நீதியரசர்
பிரகீத் கொலை : கோதாபய முதலாளியின் உத்தரவின் பெயரிலேயே எல்லாம் நடடைபெற்றது
அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் கணவரைக் கடத்தியிருக்கலாம் : சந்தியா எக்னலிகொட