Tuesday, March 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பின்தங்கிய தமிழர்களும் முன்னேறிய பிரித்தானிய மக்களும் : உருத்திரன்

இனியொரு... by இனியொரு...
03/30/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் 26.03.2010 அன்று நடைபெற்றது. 5 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட வரலாறு கண்டிராத ஆர்ப்பாட்டத்தில் ஆளும் கூட்டரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களோடு மக்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். மக்களின், குறிப்பாக வறிய மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் பிரித்தானிய அரசின் பொருளாதாரத் திட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டம் ஆளும் அரசிற்குத் தெளிவான செய்தியை சொல்லியிருந்தது.

தான் தோன்றித்தனமான பிரித்தானிய அரசின் அனைத்துத் திட்டங்களையும் இனிமேல் பிரித்தானிய மக்கள் மௌனமகப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை என்ற செய்தி ஆளும் தரப்பை அதிர்வடையச் செய்தது.

மானியங்கள், ஓய்வூதியம், ஊதியத் தொகை போன்ற அனைத்து அம்சங்களிலும் அரசாங்கம் அறிவித்த குறைப்புக்களுக்கு எதிரான மக்களின் ஏகோபித்த குரலாக இந்த ஆர்ப்பாட்டம் ஒலித்து. 1920 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக வாழ்க்கைத் தரத்தினைத் தாழ்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் அரசின் நடவடிக்கைகளை பிரித்தானியவை உழைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

மக்களின் உணர்வுகள் குறித்துச் சிந்திக்காத அரசின் பொருளாதாரக் கொள்கை பிரித்தானிய மேல்தட்டு வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது என கார்டியன் பத்திரிகை விமர்சிக்கிறது.

ஆய்வாளர்கள் பலர் இன்றைய சூழலும் மக்களின் போராட்டங்களும், பிரித்தானியா 1970 ஆம் ஆண்டு சூழலுக்கு அழைத்துச் செல்லும் என்று கருதுகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்துச் சிந்திக்கின்றன.

மேற்கு நாடுகளில் நவ தாரளவாதக் கொள்கையும், அதன் உச்ச வடிவமான உலகமயமாதலும் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்கிருந்த உற்பத்தி நிறுவனங்கள் மலிவான கூலியை நோக்கமாகக் கொண்டு இந்தியா, சீனா, பிரேசில், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிற்கு இடம் பெயர்ந்துவிட்டன. 2000 ஆம் ஆண்டுகளின் பின்னான பத்தாண்டுகளில் மேற்கு நாடுகளில் சேவைத்துறையும், பண மூலதனத் துறையும் முதன்மைத் தொழிற் துறையாக மாற்றமடைந்தது. பத்தில் ஒரு பகுதி ஊழியர்கள் பண மூலதனத்தோடு தொடர்புடைய வேலைகளில் ஈடுபட்டனர். வங்கித் துறை, அசையாச் சொத்துக்களுக்கான முதலீடு போன்றன பொருளாதாரத்தின் இதயமாக அமைந்தது.

சொத்துக்களை வாங்கிக்கொள்ளவும், நாளாந்த வாழ்க்கைக்காகவும் வங்கிகளில் கடனைப்பெறுகின்ற கடன்பட்ட சமூகம் ஒன்றை இவர்களின் பொருளாதாரக் கொள்கை உருவாக்கியது. கடன் தொகை உச்ச நிலையை அடைந்ததும் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு உள்ளானார்கள். வங்கிகள் அந்தப் பணத்தை மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு தப்பித்துக்கொண்டன.

தவிர, மூன்றாமுலக நாடுகளிலிருந்து சுரண்டப்படும் பணத்தின் அளவு 3 மடங்காகக் குறைந்தது. இதற்கு பல்வேறு தீர்மானிக்கும் காரணிகள் பின்புலத்தில் இருந்தன. என்பது வேறான ஆய்வுக்குரிய விடயம்.

எது எவ்வாறாயினும் மேற்கு நாடுகள் மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை ஆக்கிரமிப்பதும் அந்த நாடுகளின் வழங்களைச் சுரண்டுதலுமே அவர்களின் நீண்டகால திட்டமாக மாறிவருகிறது.

கிரேக்கம், ஸ்பெயின், பிரன்ஸ், பிரித்தானிய என்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் போராட்டங்கள் வழங்கும் அழுத்தங்களை இந்த நாடுகள் எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறைக்கு வருமானால் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் சிக்கலான நிலை வரை வளர்ந்து செல்லும் என்று பைனான்சியல் ரைம்ஸ் என்ற சஞ்சிகை எதிர்வு கூறுகிறது.

அரபு நாடுகளின் மக்கள் எழுச்சி ஐரோப்பிய அமரிக்க உழைக்கும் மக்களுக்குப் புத்துணர்ச்சியையும் தன்நம்பிக்கையையும் வழங்கியிருக்கிறது.

2

 

26.03.2011 நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தை உலகம் முழுவது கூர்ந்து கவனித்துகொண்டிருந்தது. தமது திட்டமிட்ட நிகழ்சி நிரலின் கீழ் இயங்கும் அரசுகளின் செயற்பாடுகளை அந்த அரசுகளைப் பலப்படுத்துவதன் ஊடாகவன்றி அவற்றின் மீதான மக்கள் திரள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் ஊடாகவே சிறிதளவேனும் மாற்றியமைக்க முடியும் என்பதை இப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

இதே தினத்தில் பிரித்தானியாவிலிருந்து இயங்கும் புலி சார் வானொலியான உயிரோடை ஒரு மணி நேரத்தை அர்ப்பணித்து பிரித்தானிய தமிழ் போரம் (BTF) சார்ந்த உறுப்பினர்களோடு இணைந்து கலந்துரையாடல் ஒன்றை ஒலிபரப்பியது.

வானொலியில் பிரசன்னமாகியிருந்த மேற்கு லண்டனைச் சேர்ந்த ஒருவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று தொடர்பான அந்த உரையாடல் மிகவும் சுவாரசியமாக நடைபெற்றது. பிரித்தானிய ஆளும் கட்சிக் கூட்டணியில் பிரதான கட்சியான பழைமை வாதக் (Conservative ) கட்சியின் தமிழ் உறுப்பினர் பழமை வாதக் கட்சிக்கான தமிழ்ர்கள் (Tamils for Conservative) என்ற அமைபை உருவாக்கி அதற்கான தமிழ் மக்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கு லண்டனில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதை அறிந்த உயிரோடை வானொலி அவரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அவருடனான கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. ஆளும் கட்சியில் சிங்களவர் ஒருவர் ஆளுமை செலுத்துவதால் தான் அவர்கள் இலங்கை அரசைப் பகைத்துக்கொள்கிறார்கள் இல்லை என்று ஆரம்பித்த இவரின் நகைச்சுவை பிரித்தானியத் தமிழர்கள் கொன்சர்வேட்டீவையும் ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கைகு ஊடாக நகர்ந்து சென்றது.

அவரது செயலை ஆதரித்த் பி ரி எப் பிரதானி, தமிழர்கள் பிரதான கட்சிகள் மூன்றிலும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அந்த மூன்று பிரிவினரும் பி ரி எப் இல் கூட்டாக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஒடுக்கப்பட்ட இனமான தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவல்ல, அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வலிமையுள்ள பிரிவினரின் அடிபடை எதிரிகளோடு ஒரே வரிசையில் அமர்ந்திருந்துகொண்டு, உலகம் இனப்படுகொலையே வேடிக்கை பார்க்கிறது என்று கூறிக்கொள்வதில் என்ன பயன்?

வன்னிப் படுகொலைகள் நடந்தபோது உலகம் கொல்லபட்டவர்களுக்கு ஆதரவாகக் ஏன் குரல் கொடுக்கவில்லை, மக்கள் எழுச்சிகள் உருவாகவில்லை என்பதற்கு பி ரி எப் உம், கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள் போன்ற அமைப்புக்களும் சிறந் உதாரணம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எஐடியுசி தொழிலாளர்களுக்கு செய்த துரோகமும் ஒட்டுவேட்டையாடப்போகும் சி.பி.ஐ யும் : கு.கதிரேசன்

Comments 4

  1. mano says:
    15 years ago

    கட்டுரையின் முதல் வரியில் எழுதப்பட்ட 26 .03 .2010 என்பது தவறு. 2011 ஆக இருக்க வேண்டும். திருத்தவும்

  2. சாம்பசிவன் says:
    15 years ago

    புலி வாலை நிமிர்த்த முடியாது

    இப்பவாது புரிந்திருக்கும் என கருதுகிறேன் “புலி வாலை நிமிர்த்த முடியாது” என்பது.

  3. thalai says:
    15 years ago

    இனியொரு ஆசிரியர்கள் சிலரும் புதிய திசை யும் பி.ரி.எவ் உடன் இணைந்து வேலை செய்ததாக அறிந்திருக்கிறேன். இப்ப ஏனிந்த எதிர்ப்பு.

  4. thurai says:
    15 years ago

    பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகள்ப் பல இலங்கையில் கொலைகளிற்கும்
    அரசிற்கெதிரன பயங்கரவ்தாத்திற்கும் உதவிபுரிந்தன. இப்போ இலங்கை இவர்களிடமிருந்து காப்பாற்ரப்பட்டு விட்டது. இவர்களிற்கு புலம்பெயர் தமிழர்களின்
    பண உதவி குறைந்துள்ளதால் இவர்களின் பின்ணணியிலுள்ள
    பல நிறுவனங்கழும்,பணச் சலவை செய்பவர்க்ழும் சிரமப்படுகின்றார்கள்.

    இலங்கை அரசின் மீது குற்ரம் சுமத்துவதற்கு ஆதாரங்களை இலங்கையில் உள்ளவர்களிடமிருந்து வாங்குவதற்குப் பண உதவி செய்யும்படி அழைப்பு
    விடுத்துள்ளார்கள். ஏமாறுபவ்ர்கள் உள்ள வரை ஏமாற்றுபபவர்கள் ஏமார்ரிக்கொண்டே இருப்பார்கள். சிங்களவ்ர் அல்ல தமிழர்கள் தமிழர்களையே
    அதுவும் லண்டனில் வாழும், தமிழரில் அக்கறை கொண்ட ஈழத்தமிழரின் இரத்தத்தையும்
    சதையும் விளம்பரமாக்கி புலம்பெயர் தமிழர்களின் பணத்தை
    விழுங்கி வாழும் முதலைகள்.-துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...