பிண எண் 1084 இன் அம்மா
HAZAAR CHAURASI KI MAA (MOTHER OF 1084)
location:SCARBOROUGH CIVIC CENTERE (TORONTO)
date :20 .12. 2009 -Sunday
time :2:30 p.m
1970களில் கல்கத்தாவின் வீதியெங்கும் இந்தக் குரல்கள் தான்
ஒலித்துக் கொண்டிருந்தன. இவ்வாறு இத் திரைப்படத்தை அறிமுகம்
செய்திருந்தார்
மணி தர்சா (2007 இலங்கை).
ஆம். 1970களின் இந்திய அரசால் ஒடுக்கப்பட்ட வங்காள கிளர்ச்சியில்
தன் அன்புக்குரிய மகனை இழந்த அம்மாவின் கதை இது. 30வருடங்களுக்கு மேலாய் போரினில் தம் எண்ணற்ற பிள்ளைகளை இழந்த
எமது நிலத்தின் தாய்மாரது குரலுக்கு நெருக்கமானதாய் ஒலிக்கிறது.
பிள்ளைகளை இழத்தலின் வலியை கூறும் இத் திரைப்படத்தின் கதாசிரியர்
ஆச்சரியத்துக்கு இடமின்றி வங்காளத்தில் அந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த
மஹாஸ்வேதா தேவி என்கிற பெண் மனிதஉரிமைப் போராளியே ஆவார்.
ஹிந்தியில் புகழ்பெற்ற கோவிந்த் நிஹ்லானியால் இயக்கப்பட்ட இத்
திரைப்படத்தின் திரையிடல் மார்கழி மாதம் 20 ஆம் திகதி TORONTO வில் இடம்பெறுகிறது.
தொடர்புகளுக்கு: சேனா: senavaraiyan@gmail.com கோணேஸ்:konesh_14@hotmail.com 647-891-8597
“நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு.
அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது
எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலமைகள், இந்தச்
சமூகம் எல்லாவற்றையும்… அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம்,
பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு
உலகமாக இருக்கும்.”
“இருட்டினில் வாழ்பவர்களுக்கு ஒளியைக் கொண்டு வருவது பற்றி
நான் கனவு காண்கிறேன். என்னுடன் உள்ள நண்பர்க ளுடன் நான்
இந்தக் கனவைப் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் எங்களுடைய
கனவுகளைப் புரட்சியினூடாக நிதர்சனமாக்க விரும்பு கிறோம்.
நாங்கள் ஒரு புதிய உலகத்தைச் சிருஸ்டிக்க விரும்புகிறோம்.
சமத்துவம், சமாதானம் நீதி, என்பவற்றை எல்லோருக்கும் கொடுக்கும்
ஒரு புதிய உலகமாக அது இருக்கும்.”