தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே அமைச்சர் எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் செய்த பாவத்திற்கு ”பாவ மன்னிப்பு” கோருகின்றனர். இது எவ்வாறு நியாயமாகும்.
நாட்டில் கொலைகள் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் அதிகத்துள்ளன. இவ்வாறான சூழலில் இங்கு வந்து விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு வெளியேற முடியுமா என்ற அச்சம் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் மீது நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார்.