வன்னி இனக்கொலையின் கோராத்திற்கு மற்றொரு குறியீடாக்க பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கருதப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அந்தக் குழந்தை இராணுவத்தின் பிடியில் வைக்கப்பட்டிருப்பதும் பின்னர் கோரமாகக் கொலைசெய்யப்பட்டிருப்பதும் ஒரு நாட்டின் பாதுகாப்புப்படை எவ்வாறு குழந்தைகளைக் கையாள்கிறது என்பதற்கான அடையாளம்.
பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமை பேரவையில் ஈழவாதிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தாம் உரிய பதிலை வழங்க போவதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பொய்யான குற்றச்சாட்டை இராணுவத்தின் மீது சுமத்த ஏன் நான்கு வருடங்கள் தாமதமானது என தான் கேள்வி எழுப்ப போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா இலங்கையில் இனப்படுகொலையைத் தலைமைதாங்கிய இராணுவத் தளபதிகளுள் பிரதானமானவர்.
58 ஆவது படைப்பிரிவின் தளபதியான சில்வா இனவழிப்புக் களத்தில் இறுதிவரை ஈடுபட்டவர். வெள்ள முள்ளிவாய்க்கால், கரைய முள்ளிவாய்க்கால், பின்னதாக நந்திக் கடல்வரை சாரிசாரியாக மனிதர்கள் கொல்லப்படக் கரணமானவர்.
They have thrown the baby out with the bath water again.
You are repeating your catchy pharases with no relevance to the topic in question.
58 ஆவது படைப்பிரிவின் தளபதியான இனக்கொலையாளி சில்வாவும் இலங்கைப் பௌத்த பிக்குகளின் ஆசியைப் பெற்றுக்கொண்டவன். அத்துடன் தமிழினத்திற்கே குழிபறிக்கும் தமிழர்களின் வழிகாட்டலையும் பின்பற்றுபவன். பாலச்சந்திரன் கொலையை திசை திருப்ப, பாலச்சந்திரன் புலிகளின் சிறார் படையணியில் இருந்தவர் என சுப்பிரமணியசுவாமி என்ற அரசியல் கோமாளி தெரிவித்ததையே இந்த சில்வா பின்பற்றியுள்ளான்.