Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

இனியொரு... by இனியொரு...
02/20/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

balachandranஇன்று எமக்குத் தேவை அடிப்படைவாத அடையாளங்களா அன்றி ராஜபக்ச பாசிசத்தையும், பேரினவாதிகளையும் பலவீனப்படுத்தும் உடனடி நோக்கமா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் நண்பர்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டது குறித்த காட்சிகளின் பின்னர், ஜெயலலிதா, கருணாநிதி, சீமான், வை.கோபாலசாமி, ராமதாசு போன்ற அதே முகங்கள் மறுபடி களத்தில் குதித்து நாளை மரணித்துப் போகும் சீசன் வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே ஆகிவிடாத உண்ர்ச்சி வயப்படுத்தலுக்கு இவர்கள் அனைவரையும் உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரச பாசிஸ்ட் ராஜபக்சவும் அதன் பரிவரங்களும் போர்க்குற்றத்திற்காகவும் இனப்படுகொலைக்காகவும் தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் என்றால் உலகத்தில் இன்னொரு பாசிஸ்ட் எந்த மூலையிலாவது ராஜபக்சவை முன் உதாரணமாகப் பயன்படுத்தில் இனக்கொலை செய்துவிடக் கூடாது என்பதற்காக;! இலங்கையில் இன்னொரு இனக்கொலையாளி கொலை செய்வதற்கு அஞ்ச வேண்டும் என்பதற்காக; ! ! இதுவே ஈழம் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்று யாராவது எண்ணினால் அது போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
ஒரு பேரினவாதிக்கு எதிராக இன்னொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கை பார்ப்பது அவலத்துள் வாழும் மக்களின் தலைகளில் சம்மட்டியால் அடிப்பதற்கு தயாராவதைப் போன்றது.

உலகத்தில் வெற்றிபெற்ற அழிக்கப்படாத போரட்டங்களில் எல்லாம் பாலச்சந்திரனின் கொலை போன்ற உணர்ச்சிமயமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட அந்தப் போராட்டங்களில் எல்லாம் அவ்வாறான சம்பவங்கள் மக்களை அணிதிரட்டும் ஆயுதங்களாகவும் அரசியல் மயப்படுத்தும் ஆயுதங்களாகவும் பயன்பட்டிருக்கின்றன.

பிரித்தானியா இலங்கைக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவது அறிந்திருந்தும் ஏகாதிபத்தியங்களின் அரசியல் சதிகளையே நம்புகின்ற அளவிற்கு அரசியல் இருள் சூழ்ந்த சமூகத்தில் உலா வருகின்றோம்.

அரசியல் வறுமைகொண்ட சமூகத்தில் சனல் 4 பிரச்சார ஊடகமாகி, புரட்சிகரமான போராட்ட சூழலையே கையகப்படுத்தி வைத்திருக்கிறது. சனல் 4 இன் கைவசம் உள்ள அனைத்து ஆவணங்களும் அமரிக்க அரசின் தேவைகளுக்கு ஏற்ப சிறிது சிறிதாக வெளிப்படுத்தப்படும். அது பிரச்சாராச் சாதனமாக, மற்றய பக்கத்தில் தமிழ் நாட்டின் சந்தர்ப்பவாதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சீசன் உணர்ச்சி அரசியலை ஆரம்பிப்பார்கள். புலம் பெயர் ‘ஊடகங்கள்’ ஊத ஆரம்பித்துவிடுவார்கள். தேசியக்கூட்டமைப்பு தேர்தலுக்கான அத்திவாரத்தைப் போட்டுக்கொள்ளும். நோர்வேயோ சுவிஸர்லாந்தோ இலங்கைக்கு அமரிக்க சார்பில் உதவிக்கரம் நீட்டும். அமரிக்கா பிரேரணை ஒன்றை நிறைவேற்ற நோர்வேயிடமோ சுவிஸர்லாந்திடமோ இலங்கை அரசு தஞ்சமடைய அமரிக்கா தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும்.

மீண்டும் அடுத்த சீசன் வரும் வரை இது சுழற்சி முறையில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றது போன்றே நடைபெறும்.

உணர்ச்சிவயப்படுத்திய அரசியல்வாதிகள் சற்றுக்கொழுத்து எனர்ஜி ஏற்றிக்கொண்டு அடுத்த சீசன் வரை காத்திருப்பார்கள்.
இந்த சுழற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட குடிடியேற்றங்கள் எந்தத் தடையும் இன்றி நடைபெறும். புத்தர் சிலைகளால் கோவில்களும் பள்ளிவாசல்களும் நிரப்பப்படும், இலங்கையின் வரைபட எல்லைகள் வெட்டித் திருத்தப்படும், இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள், இலவசக் கல்வி அழிக்கப்படும், தெற்காசியாவின் சுற்றுலா மையமாக இலங்கை மாற்றப்படும், பாலியல் தொழில் உட்பட அனைத்து சீரழிவுகளும் நிறுவனமயப்படும்முன்னைனாள் போராளிகள் நவீன அடிமைகள் ஆவார்கள், போதைவஸ்துக்களுக்கு அடிமையான சமுதாயம் உருவாகும், எதிர்ப்பதற்கு முனைவோர் சாட்சியின்றிக் கொலப்படுவார்கள்..

இன்னும் சில சீசன் அரசியல் நடைபெறுகின்ற கால எல்லைக்குள் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம் ஒன்று முன்னர் இருந்ததாக வரலாறு எழுதப்படும்.

அப்போதும் சிலர் பிரபாகரனின் புகழ் பாடுவதை மட்டுமே தொழிலாகக் கொள்வார்கள், தெய்வம் என்பார்கள், கோவில்கட்டி சிலைவைப்பார்கள். புலி எதிர்பாளர்கள் எல்லாம் பிரபாகரனால் மட்டும் தான் நடந்தது என்பார்கள்.
இலங்கையில் புதிய பேரினவாத அரசு ஒன்று பிரபாகரனின் சிலை வைத்து அர்ச்சனைக்குக் கூட ஏற்பாடு செய்துவிட்டு நல்லிணக்கம் என்பார்கள்.

அடையாளங்களால் கொழுக்கும் அரசியல் வியாபாரிகளிடமிருந்து அரசியலை மீட்பதும், அமரிக்காவிலும் சனல் நான்கிலும் தங்க்யிருக்கும் அரசியலிலிருந்து உயிர்ப்பதும் மக்களின் அவலங்களைக் குறித்துச் சிந்திப்பதும், உலகம் முழுவதும் அழிவுகளிலிருந்து மீள உறுதியுடன் போராடும் மக்களோடு இணைந்து கொள்வதும் அவசியம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
உள்துறை அமைச்சரே பயங்கரவாதத்திற்கு ஆதரவு

உள்துறை அமைச்சரே பயங்கரவாதத்திற்கு ஆதரவு

Comments 12

  1. அரிச்சந்திரன் says:
    13 years ago

    நாவற்குழியில் பதற்றம்: சிங்கள குடியேற்றவாசிகள் மீது தாக்குதலுக்கு தயார்படுத்தல்?
    தமிழர் தாயகத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்களவர்களை தமிழீழப் பகுதியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டவகையில் குடியேற்றி வருகிறது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சுமார் 134 குடும்பங்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர்.

    தமிழ் மக்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்களவர்களை தமிழர்களின் மரபுரீதியான தாயகத்தில் குடியேற்றும் நடவடிக்கை தமிழர் தரப்பிடம் கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.

    இந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புத்திரன் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன அழிப்புப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்மை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டுபண்ணியுள்ளது.

    இந்த கொந்தளிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், நாவற்குழியில் திட்டமிட்ட வகையில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது தாக்குதல் நாடத்தவென இளைஞர்கள் குழு தயாரவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      They are still unsettled about various thins. The government machinary is in place. Let us be patient.

    • Mahendra says:
      13 years ago

      நாவற்குழியில் பதற்றம்: சிங்கள குடியேற்றவாசிகள் மீது தாக்குதலுக்கு தயார்படுத்தல்? யார் தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்? நிச்சயம் மகிந்த கூட்டம்தான். சிங்களக் காடையர்களை, குற்றவாளிகளைத் தமிழ்மண்ணில் குடியேற்றுவது சிங்களத்தின் வழக்கம். இவர்கள் இருந்தாலென்ன அன்றி இறந்தாலென்ன தமிழர்கள் தொடர்ந்தும் பயங்கரவாதிகளே என உலகிற்கு காட்டுவதற்கான மகிந்த கூட்டத்தின் தயார்படுத்தலே இதுவென நம்பலாம். தாக்குதல் நடைபெற்றால் எத்தனை அப்பாவித் தமிழர்கள் பலியாவார்களோ? புத்தனுக்குத்தான் வெளிச்சம்.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        The country as a whole is very desensitized to many things. There is no firm national policy for anything.  We all can can pray to our own Gods and wait patiently.  

  2. k.ruban says:
    13 years ago

    முப்படைகளின் தலைவர் இலங்கையின் அதிபர் ராஜபக்சவும் இராணுவ படையணிகளும் மற்றும் அரசயந்திரங்களும் இறுதியுத்தத்தில் நடத்திய போர்குற்றங்கள் பற்றியும் இனப்படுகொலை பற்றியும் கடந்த நான்குஆண்டுகளாக கடுமையான கண்டனங்களுடன் உலகம்முழுக்க அம்பலப்படுத்தப்பட்டது மட்டுமன்றி இதில் இந்தியா ஐநாசபை உட்பட சிலமேற்குலகநாடுகளின்தொடர்புகளும் அம்பலப்படுத்தப்பட்டது.
    ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு பெரும்தரப்பு தமிழ்ஈழவிடுதலைபுலிகளும் சிலஅரசசார்பு தமிழ்அமைப்புக்களும் . இவர்களின் இந்த போர்குற்றங்கள்பற்றியதான கொலைகுற்றச்காட்டுக்களில் இருந்து தப்பிவிட்டார்கள் அல்லது தப்பிக்கவிடப்படுகிறார்கள். இவர்களைபற்றி பெரும்பான்மையான ஊடகங்கள் அம்பலப்படுத்துவதில்லை அல்லது அப்டி ஒன்று நடந்தாகவே காட்டிக்கொள்வதில்லை! இப்போர்குற்றங்களில் ஈடுபட்ட பல தமிழர்கள் வேளிநாடுகளில் சுதந்திரமாக வசிக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை

  3. Shiva says:
    13 years ago

    Kala,
    I really enjoyed your wordings. this is the better version.

  4. அரிச்சந்திரன் says:
    13 years ago

    புலிக்குப் பிறந்தவன்
    புலியாகி விடுவானோ
    எனப்பயந்து அழித்தனரோ..!
    இன்று கண்ணீருடன்
    தலை குனிகிறோம்..!
    உம் நினைவுகள்
    எம்மை என்றும்
    தட்டி எழுப்பும்..!
    சந்திரன் மறைவதில்லை
    பாலச்சந்திரன்களும் மறைவதில்லை..!
    எங்கள் நினைவுகளில்
    என்றுமே வாழ்வீர்!

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      You can see the innocence of a child in the eyes of that Balachandran. Look like he is having a snack in a bunker. Citizen by Descent of Sri Lanka – Shri Lanka.   

  5. C.kumar says:
    13 years ago

    12 வயதுச்சிறுவன் (பெரும்பாலும் அப்பாவிச்சிறுவனாகத்தான் இருப்பார். ஏனெனில் வீட்டில் கடைசிப்பிள்ளை). சிங்களக்காடையர்களினால் அல்லது புலிக்காடையர்களினால் ( கருணா குழு) அநியாயமாக கொல்லப்பட்டது பகுத்தறிவுள்ள மனிதர்கள் (புலிகளோ அல்லது புலி ஆதரவாளர்களோ அல்ல) அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய விசயம். நானும் இந்தப் படுகொலையை நிச்சயமாக கண்டிக்கின்றேன். ஆனால் பாலச்சந்திரனின் தந்தை பிரபாகரன் தலைமையிலான  காடையர்குழு தங்களுக்கு வேண்டாதவர்களை எல்லாம் கொலைசெய்ததற்கும் இச்சம்பவத்திற்கும் நான் முடிச்சுப் போடுவதற்கு  விருப்பவில்லை. ஆனால் தற்போது காவடி எடுக்கும் புலி ஆதரவாளர்களும் தமிழ்நாட்டு தமிழ் ஈழ (கொலை ஆதரவாளர்களும்)ழஆதரவாளர்களும் 2009 க்கு பின்னர் பிறந்தவர்களா? என்று பலர் கேட்கும்போது என்போன்றவர்களினால் பதில் கூற முடியவில்லை.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      After eliminating his father and bother Charles Anthony they may have thought that  he held some vital information. Now they have wiped him out too. Here at Batticaloa they are mapping continuosly. That is their daily routine work. 

  6. Mahendra says:
    13 years ago

    பாலச்சந்திரனின் தந்தை பிரபாகரன் தலைமையில் போராடியவர்கள் அனைவருமே காடையர்குழு. எதிர்த்தவர்கள் அனைவருமே கெளதாரிகுழு. காட்டிக்கொடுத்தவர்கள் அனைவருமே கெளதமபுத்தர்குழு. தொழிளாளர் புரட்சி தோற்கடிக்கப்பட்டிருந்தால்! இன்று கார்ல்மாக்ஸ், லெனின் தலைமையில் போராடிய அனைவரையும் காடையர்குழுவிற்குள் அடக்கிவிட்டு வாந்தி எடுக்கக்கூடியவர்களும் உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Then only he signed a memorandum of understanding with the leader of a national political party. Modern technology came to put the Killer Machine (Mangala Samaraweera) out of buisiness for ever on May 18, 2009.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...