தமிழ் அரசியல் கைதிகள் சாரிசாரியாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இனச்சுத்திகரிப்ப்பைத் திட்டமிட்டு நடத்திவரும் இலங்கை அரசு கைதிகளின் சிறைக்கூடங்கள் குறித்த விபரங்களைக் கூட வெளியிட மறுக்கிறது. இலங்கை வதை முகாம்களின் கோரம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதற்கு பாலகுமார், யோகி ஆகியோரின் மறைவு சான்றுகளாகும்.
கடந்த வருடம் இவர்கள் கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை இலங்கை அரச சார்பு ஊடகங்கள் வெளியிட்டன.
இந்தநிலையிலேயே இவர்கள் வன்னி இறுதிப்போரின் போது கடந்த ஆண்டு கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார் சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மீளமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர.
போரினால் கணவனை இழந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அவசரத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். வவுனியா,யாழ்ப்பாணம். கிளிநொச்சிப் பகுதிகளில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்தித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அவர் அந்தப் நாளிதழுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில், தான் சந்தித்த கணவனை இழந்த பெண்களுள் க.வே. பாலகுமாரனின் மனைவி மற்றும் யோகரட்ணம் யோகியின் மனைவியும் உள்ளடங்கியிருந்தனர் என்று கூறியிருக்கிறார். பாலகுமாரன் கடந்த ஆண்டு வன்னி கிழக்கில் நடந்த போரின் போது கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேர்கள பிடுங்கி மரங்கள வீழ்த்தும் கொடிய அறம் செய்கிறது சிங்களம்.நமது கடமை நல்லதை மட்டுமே செயவதுதான் என்றார் புத்தர் ஆனால் எல்லாத் தீங்கையும் தமிழருக்கு செய்கிறதே சிங்களம்.வாழும் இந்தநொடியில் உயிர்ப்புடன் வாழ் என்றார் புத்தர் தமிழ்ர் வாழும் உரிமையை மறூக்கிறதே சிங்களம்.
அபிவிருத்தி, தெற்கு-வடக்கு இணைப்பு என்று பேட்டிக்கு பேட்டி, அறிக்கைக்கு, அறிக்கை விடுபவர்கள் சாரிசாரியாக கைது செய்தோ, சரண் அடைந்தோ உள்ள தமிழ் அரசியல் கைதிகள் என்று கூறப்படுபவர்களின் பெயர் விபரங்களை இதுவரை வெளி விடாததன் காரணம் என்ன? மர்மம் என்ன?
இந்த வடக்கின் சிற்றரசரின் தலைமையில் புதிய தமிழ் ஒன்றியத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்ப்பதற்காக என்று கூட்டு சேர்ந்தவர்கள் அன்றோ இந்தியாவிற்கு டீல்கள் வைக்க சென்ற கூட்டமைப்பினரோ இவர்களைப் பற்றி சிந்திக்கிறார்களா? அல்லாத விடத்து இவர்களின் கையாலாகாத்தனமா?
பேட்டிகளுக்கும் அறிக்கைகளுக்கும் மட்டும் பஞ்சம் இல்லை.இப்படியே அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்களும், கலாச்சார மாற்றங்களையும் நடைபெறுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.