இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ப.ம.க, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு எதிர்கட்சிகள் பார்வதியம்மாள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, பார்வதியம்மாள் மனித உரிமைக்குப் புறம்பாக திருப்பி அனுப்பபட்ட விவாகரத்தை தகராறு என்றும் ஒரு கலாட்ட மாதிரி சித்தரித்தும் இருக்கிறார். ‘’இப்படிப்பட்ட
ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறேன். பார்வதியம்மாள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால், இந்தச் செய்தி முறையாக, உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை.அதன் காரணமாக, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவுக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மருத்துவ வசதி பெறுவதாக செய்திகள் வந்திருக்கின்றன.மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசின் பதிலைப் பற்றி–அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்றார் முதல்வர் கருணாநிதி.