பார்வதியம்மாளை திருப்பி அனுப்பப்பட்ட விவாகரம் தொடர்பாக முத்த வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்துள்ள மத்திய இந்திய அரசின் குடியேற்றத்துறை. ‘’ இந்த மனுவைத் தாக்கல் செய்தவர் பார்வதியம்மாளின் உறவினரோ, நெருங்கிய சகாவோ கிடையாது. தவிறவும் மனுதாரருக்கும் பார்வதியம்மாளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது பார்வதியம்மாள் இந்தியப் பிரஜையும் கிடையாது. எந்த ஒரு வெளிநாட்டினரையும் திருப்பி அனுப்பவோ விசா மறுக்கவோ இந்திய குடியுரிமைத் துறைக்கு அதிகாரம் உண்டு. தவிறவும் கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழகஅரசு கேட்டுக் கொண்டதன் பேரிலே பார்வதியம்மாளுக்கு எதிரான எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது. அதன்படி பார்த்தால் கோலாலம்பூரில் உள்ள தூதகரம் பார்வதியம்மாளுக்கு விசா வழங்கியிருக்கக் கூடாது.வெளிநாட்டவராக இருப்பதால் அவருக்கு இந்தியாவில் அடிப்படை உரிமை எதுவும் இல்லை. எனவே, அவரை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் குடியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை குறைகூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. குடியேற்ற அதிகாரிகளின் விளக்கத்தை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் ‘’ கடந்த 7 ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன. இதுகுறித்து தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்றும், விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.