பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது
வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது. இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பினரால்( Comité de Défense Social ) முன்னெடுக்கப்பட்ட பிரதான கோசமாகவும் கோரிக்கையாகவும் அமைந்திருந்தது வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்கள் சார்ந்த நலன்களே. குறிப்பாக யுத்த்தாலும் படுகொலைகளாலும் வன்முறை அரசியலாலும் பாதிப்புற்று புகலிடம் தேடி பிரான்ஸ் வந்த இலங்கை மக்களுக்கு வதிவிட அனுமதி வழங்கு என்ற கோசம் கொண்ட பதாகையே பிரதானமாக முன்னெடுக்க்பட்டது. இவ் ஊர்வலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வதிவிட உரிமை மறுக்கப்ட்ட மக்களும் தங்கள் தங்கள் கோரிக்கைகளோடு பதாகைகளை தாங்கி வந்தனர். பிரான்சில் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்களும் சமூக அக்கறையாளர்களும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தின் அமைப்பாளர்களே கடந்த சனியன்று நடந்த இலங்கை அரசிற்கெதிரான ஊர்வலத்தையும் ஏற்படு செய்திருந்தனர். அவ்வூர்வலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்ப முனைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அரசு வதிவிட அனுமதியற்ற மக்களை அவமானப்படுத்தும் முறையில் சோதனை இடுவது அவர்கள் வாழும் குடியிருப்புக்களை சுற்றிவலைத்து குற்றவாளிகள்போல் கைது செய்வது சிறையில் அடைப்பது நாட்டைவிட்டு பலாக்காரமாக அனுப்புவது போன்ற மனித உரிமை விழுமியங்களை மீறும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படல்வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகவும் தீவிரமாகவும் ஆர்ப்பாட்டக்காறர்களால் முன்வைக்கப்ட்டது. பிரான்ஸ் அரசு வதிவிட அனுமதியற்றவாகளை ஆபத்தானவர்களாக நோக்குகின்ற போக்கை கைவிடவேணுமென்றும் வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் முப்பதாயிரம் வதிவிட அனுமதியற்றவர்களை கைது செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து நாட்டைவிட்டு வெளியேற்றும் அரசின் செயல்பாடு நிறுத்தப்படவேண்டுமென்றும் இந்த சிறப்பு முகாம் என்ற சிறைகள் மூடப்படவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்ட்டது.
சமூகப்பாதுகாப்பு அமைப்பின்( Comité de Défense Social ) சார்பில் தோழர்கள் கிறீஸ்தோபர், மேரிகிறீஸ்ரியன், தோமா, கிறீஸ்ரி ,செபஸ்த்தியான், ரமணன் ,வரதன்கஸ்ரோ,அசோக் முதலானோர் ஊர்வலத்தை நெறிப்படுத்தினார்கள்.
அடேயப்பா பறவாயில்லை. பிரயோசனமான வேலை. விசா இல்லாமல் கஸ்ரப்பட்டு பார்ர்தால்தான் தெரியும் எங்கள் கஸ்ரம்.அடுத்தமுறை ஊர்வலம் செய்யும்போது ஒருவாரத்திற்கு முதலே தெரியப்படுத்தவும் நானும் என்னைப்போன்ற விசா அற்ற துன்பப்படும் பலரும் வருவார்கள். வைக்கோல் பட்டறை…… ..போல் சிலபேர் குலைப்பார்கள். கவலைப்படவேண்டாம்.
//RAJAN on March 15, 2009 12:27 pm நண்பர்காள்! இப்போதுதான் நீங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள். இதுவரைகாலமும் நீங்கள் அலைந்தீர்கள். ஏதோ ஏதோ எல்லாம் செய்தீர்கள். என்ன பிரயோசனம் கண்டீர்கள்? உங்கள் விளைச்சளை பிழையான இயக்கவாதிகள் உங்களோடு இருந்து பலனை அறுவடை செய்து கொண்டார்கள். ஐனநாயகம் மனித உரிமை கதைத்த இயக்கவாதிகள் புலிகளின் வீழ்ச்சி கண்டு புலிகளின் அதிகாரத்தை பங்குபோட இங்கு இயக்கம் கட்ட தொடங்கினார்கள். நீங்கள் எல்லாம் கதைத்த “அனைத்து வன்முறைக்கும்” எதிரான கோசம் என்னவாயிற்று?. பார்த்தீர்களா உங்கள் நண்பர்கள் எல்லாம் அதிகாரத்திற்காக இயக்கவாதத்தை வளர்க்கும் இழிவான அரசியலை. இனியாவது இயக்கவாத நண்பர்களை தவிர்த்து சமூக நலன் கொண்ட நண்பர்களோடு கைகோருங்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழியை அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.”//
RAJAN நீங்கள் எழுதியது 100% உண்மை.எனவே இனியாவது இயக்கவாத நண்பர்களை தவிர்த்து சமூக நலன் கொண்ட நண்பர்களோடு கைகோருங்கள்.