புலமையிலும் எளிமையிலும் பாரதி ஒரு மகா கவியே! ஆனால் மானுட விடுதலை நோக்கில்…………….?
சாதியப் பிரச்சினைகள் பற்றி ஹா¢ஜன்பத்திரிக்கையில் காந்தியார் எழுதிய கருத்துகளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளிக்கும் போது ‘இவ்வாறுநான் அவருக்குப் பதில் அளித்து உள்ளதால்இ அவர் கூறியுள்ளவை முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள்அவரை ஒரு தீர்க்கதா¢சியாக மதிப்பதோடுஇ அவர் வாய் திறந்தால் பிறர் தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும்இதெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாதுஇ என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச்செய்துள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்இ பாரதியார் மானுட விடுதலைக்கருத்தியலுக்கு முற்ற முழுக்க எதிரானவர் என்று பெரும்பான்மை மக்கள் உணராத நிலையிலும்இ அவருடைய மானுடவிடுதலை எதிர்ப்புச் சிந்தனையை மறைத்து அவரை உத்தம புத்திராகச் சித்தா¢ப்பதில் பார்ப்பனர்கள் மட்டுமல்லாதுஒடுக்கப்பட்ட மக்களும் பெருமளவு இணைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியது.
பாரதியார் தமிழ் மொழியில் புலமை மிக்கவர்.வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் இன்னும் பல வடிவங்களில் செய்யுட்களை இயற்றுவதில் வல்லவர். அதைவிடமுக்கியமான விஷயம் பண்டிதர்களிடையே சிறைபட்டுக் கிடந்த தமிழ் மொழியை அவர்களிடம் இருந்து விடுவித்து எளிய பாமர மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேர்த்தியாகச் செய்தார். இதை நிச்சயமாகப்பாராட்டித் தான் ஆக வேண்டும்.
ஆகவே புலமையிலும் எளிமையிலும் அவரை ஒரு மகா கவி என்று கூறுவது பொருத்தமேஆகும்.
ஆனால் அவர் பெண் விடுதலைக்காகவும்இ சாதிய விடுதலைக்காகவும் போராடியவர் என்றும் பொதுவுடைமைக்கொள்கையைத் தூக்கிப் பிடித்தவர் என்றும் கூறுவது பொருத்தமற்றது மட்டுமல்ல; உண்மைக்கு நேர் எதிரானதும் ஆகும்.
முதலில் பெண் விடுதலையை எடுத்துக் கொள்வோம். அவர்தன்னுடைய ‘மாதர்’ என்ற கட்டுரையில் ‘பெண்ணை …ம்பாத்யம் பண்ணி பிழைக்கவிடக் கூடாது. அவளுக்குப்பிதுரார்ஜிதத்தில் பாகம் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவேபாவிக்க வேண்டும்’ என்று கூறி விட்டு, பின் பற்பல கற்பனா வாதங்களை அவை கற்பனா வாதங்கள் என்றுநன்கு புரிந்து கொண்டே அடுக்கிக் கொண்டே போகிறார்.
இவற்றைக் காணும் ஒருவர் எப்படி எப்படி முயன்றாலும் அவர்ஒரு பெண் விடுதலைவாதி என்று நினைக்கவே முடியாது. பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடையாத வரையில் அவர்களுக்கு உண்மை விடுதலை இல்லை.’பெண்ணைப் பொன் போல் போற்ற வேண்டும்’ ‘பெண்கள் வீட்டின் கண்கள்’ ‘பெண்களைக் கண்டால் ஆண்கள் வணங்கவேண்டும்’ என்ற பித்தலாட்டஙகள் எல்லாம் புராணக் குப்பைகளிலேயே கூட உள்ளன.
இவற்றை மீண்டும் கூறுவதினால்ஒருவர் எப்படி பெண் விடுதலையை முன்னெடுப்பவராகக் கொள்ள முடியும்? அதுவும் ஐரோப்பியப் பெண்கள் வேலைக்குப்போய்ப் பொருளாதார விடுதலை பெற வேண்டும் என்று போராடுகிறார்கள் என்று தொ¢ந்து கொண்ட பிறகும்’ஐரோப்பிய ஸ்தி¡£ ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம்பேதப்படுகிறது’ என்று கூறியிருக்கிறார் என்றால் பெண் விடுதலை பற்றிய ஞானம் இல்லை என்றோ பெண்விடுதலை கூடாது என்பதற்காகக் குழப்புகிறார் என்றோ தான் நினைக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும் பெண்விடுதலை உணர்வாளர் என்று கூறவே முடியாது.
‘பெண்மை வாழ்க’ என்று கூறப் புறப்பட்ட பாரதியார்’பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை’ என்றும் ‘பெண்கள் விடுதலைக்கும்மி’ யில் ‘சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்’என்றும் கூறிஇ பெண்களின் பாதுகாப்பு ஆண்கள் கையில் தான் என்பதையும்இ ஆண்களைச் சமையல் வேலை செய்யவைத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சா¢க்கை உணர்வையும் வெட்ட வெளிச்சமாகவே காட்டி இருக்கும் பாரதியாரைப்பெண் விடுதலைப் போராளியாக .. வேண்டாம்.. பெண் விடுதலை விரும்பியாகவாவது எப்படி நினைக்க முடியும்?அவருடைய விருப்பம் எல்லாம்இ பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதன் மூலம் ஆண்கள் அதிக சுகத்தைஅனுபவிக்க முடியுமே என்ற ஏக்கத்தில் நிலைத்து இருந்ததே ஒழியஇ பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம்அவருக்குத் துளியும் இருந்ததில்லை.
இப்பொழுது பாரதியாரின் சாதிய விடுதலைஉணர்வையும் பொதுவுடைமைக் கருத்தின் மீதான காதலையும் அலசிப் பார்ப்போம். ‘ஆகாவென் றெழுந்ததுபார்யுகப்புரட்சி’ என்ற சொற்களை வைத்துக் கொண்டு பாரதியாரின் பொதுவுடைமைக் காதலைப் பலவாறாகப்பாராட்ட வேண்டும் என்று பாரதி புகழ்பாடிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்பாடல் ரஷ்யாவில் 1917 ஆம்ஆண்டு பிப்ரவா¢ மாதத்தில் முதலாளிகள் அரசைக் கைப்பற்றியதில் மகிழ்ந்து எழுதினாரா அல்லது நவம்பர்மாதத்தில் லெனின் ஆட்சியைக் கைப்பற்றிய போது எழுதினாரா என்பது பற்றிய தெளிவில்லை.
இப்பாடலில்லெனின் பற்றியோ பொதுவுடைமை இயக்கம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை. பிப்ரவா¢ மாதத்தில் முதலாளிகள்ஆட்சியைக் கைப்பற்றிய போது ஜார் அரசன் வீழ்ந்ததைப் பற்றித் தான் பாரதியார் கூறியிருக்கிறார்.
ஐயமுள்ள விஷயத்ததைப் பற்றி விவாதிக்கவேண்டாம். சோவியத் ஆட்சி அமைந்த பின் சுரண்டலாளர்களுக்கு எதிராக லெனின் அரசு எடுத்தநடவடிக்கைகளுக்காகஇ பாரதியார் தெளிவாகத் தொ¢வித்து உள்ள கருத்துகளை அலசிப் பார்க்கலாம்.
பாரதியார் தன்னுடைய ‘தொழிலாளர் பெருமை’கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே கூர்மை அடையும் முரண்பாடுகளைவிளக்கி விட்டு இந்தியாவில் இது போன்று முரண்பாடுகள் கூர்மை அடைய விடக் கூடாது என்றும் ஆரம்பத்திலேயேகவனித்து கிளர்ச்சிகள் நிகழா வண்ணம் வர்க்க சமரசத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது வர்க்கசமரசம் ஏற்பட வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமே ஒழிய தொழிலாளர் விடுதலை அடைவது அவருடையநோக்கம் அல்ல என்பது தெளிவாகத் தொ¢கிறது. ஆகவே முதலளித்துவவாதிகள் வேண்டுமானால் பாரதியாரைக்கொண்டாடிக் கொள்ளலாமே ஒழியஇ பொதுவுடைமைவாதிகள் நிச்சயமாக பாரதியாரை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை எற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவரை நிராகா¢க்க வேண்டியது இல்லையே என நினைப்பவர்கள் அவருடைய செல்வம் (1)செல்வம் (2) என்ற கட்டுரைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். சோஷலிச அரசை அமைத்த பிறகு அதை எதிர்த்துக்கலகம் செய்த உள்நாட்டு வெளிநாட்டுச் சுரண்டலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகைள அறிந்து கொதித்துப்போகிறார். சிலர் சோவியத் அரசைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் அப்படி எழுதி இருக்கலாம்என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்று அவருடைய சொற்கள் தெளிவாகத் தொ¢விக்கின்றன.சுரண்டலாளர்கள் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் அன்பினால் மட்டுமே அவர்கள் மனதை மாற்றவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தாங்கள் தாக்கப்படும் போது எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்இருப்பதாக லெனின் கூறுவதைச் சுட்டிக் காட்டி விட்டு ‘லெனின் வழி சா¢யான வழியில்லை’ என்றும்இது போன்று சுரண்டலாளர்களைப் பலாத்காரமாகத் தண்டிப்பவர்கள் பரம மூடர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு’லெனின் வழி சா¢யான வழி இல்லை’ என்று நேரடியாகவும் ‘லெனின் பரம மூடர்’ என்று மறைமுகமாகவும் கூறியுள்ளபாரதியாரை முதலாளித்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொள்ளலாம். பொதுவுடைமைவாதிகள்பாரதியாரை நிராகா¢க்ககாமல் இருப்பது கொடும் குற்றமாகும்.
பாரதியாரின் பொதுவுடைமை எதிர்ப்பு இத்துடன்நின்று விடவில்லை. பொதுவுடைமையின் மூலம் மானுட விடுதலை கிடைக்காது (!?) என்று தெளிவாகப் புரிந்துகொண்ட பாரதியார்இ மானுட விடுதலைக்காக அளித்துள்ள தீர்வைப் பார்த்தால்இ இப்படிப்பட்ட மகானுபவரை உலகம்இது வரை கண்டதில்லை என்றும் இனியும் காண முடியாது என்றும் நிச்சயமாகத் தோன்றும். அவருடைய தீர்வு என்னதொ¢யுமா? ஒவ்வொரு ஊரிலும் உழைக்கும் மக்களும் சுரண்டல்வாதிகளும் அவ்வூரிலுள்ள கோயிலின் முன் ஒன்று கூடிஎதிரெதிரில் நின்று கொள்ள வேண்டும்.
சுரண்டலாளர்கள் தங்கள் உடைமைகள் யாவும் தவறான வழிகளிலேயேபெறப்பட்டு இருந்தாலும்இ அவற்றைப் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதை உழைக்கும் மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். (வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும்; தவறான வழியில் பெறப்பட்ட உடைமைகளையும்பிடுங்கக் கூடாது என்று பாரதியார் தெளிவாகக் கூறுகிறார்) அதன் பின் உழைக்கும் மக்கள் கடமை தவறாமல்சுரண்டும் வர்க்கத்தினருக்காக உழைக்க வேண்டும். சுரண்டல் வர்க்கத்தினரோ உழைக்கும் வர்க்கத்தினரை விட்டால்வேலை செய்வதற்கு ஆட்களில்லை என்பதால் அவர்களுடைய கஷ்டங்களை நினைத்து நெஞ்சு உருகுவதாகவும் இனிமேல் அப்படிகஷ்டப்பட விட மாட்டோம் என்றும் தொ¢விப்பார்கள். பின் அவரவர்கள் தங்கள் தொழில்களைச் செவ்¨வாயகச்செய்ய வேண்டும் என ஒப்புக் கொண்டு அப்படி ஒரு பட்டயம் எழுதி அதைக் கோயிலில் அடித்து வைத்து விட வேண்டும்.இது தான் சமூகப் பிரச்சினைகளுக்கு பாரதியார் தரும் தீர்வு.
இது பெரும் நகைப்புக்கு உரியது என்பது ஒரு புறம்இருந்தாலும்இ பழைய வர்ணாசிரம முறையில் இருந்து இம்மியளவும் மாற்றமில்லாதது என்பதைக் கவனித்துப் பார்க்கவேண்டும். இவ்வாறு வர்ணாசிரம தர்மத்திற்காக ஏங்கும் ஒருவர் சாதிய விடுதலையை முன்னெடுப்பவர் என்று எப்படி நினைப்பது?
பாரதி ஒரு புலுடாக்காரன்.ஆங்கிலம் படிக்க நேர்ந்த கோளாறால் சில் மனிதாபிமான விடயங்களை பேசியிருக்கிறான்.அந்த கல்வி கொடுத்த அறிவில் நின்று தமிழிலும் சில முன் மாதிரியான் விசயங்களை செய்ய முயன்றிருக்கிறான்.கவிதையில் வீச்சுடையவனாக இருந்திருக்கிறான்.அவ்வளவுதான். தற்பெருமையும் ,கோழைத்தனமும் ,பிழைப்புத்தனமும் ,தப்பித்து ஓடும் குணமும் கொண்டவனாகவே வாழ்ந்தவன் பாரதி.
ஆனால் நல்ல பொதுவுடைமைக்கொள்கை வாதியாக வாழ்ந்து பின் திரிபுவாத பாதையில் சென்ற ஜீவானந்தம் போன்ற தலைவர்களால் ” பாரதி ஒரு பொதுவுடைமைவாதியாக ” பிரச்சாரம் செய்யபட்டார்.அவரது சீடர்கள் இன்றும் பாரதியை போற்றிவருகிரார்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்று பாரதி அபிமானிகள் மற்றும் போலி கம்யூனிச வாதிகளும் புளுகிவருகிராகள்.ஆனால் அவனோ
ஆங்கில ஆட்சியாளருக்கு எதிர் நட்வேடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்று வெள்ளைகார அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவன்.அவனது காலத்திலேயே வ.உ. சிதம்பரம் சமரசமில்லாத்தால் சொத்திழந்து ,சிறையில் சீரழித்தவர் எட்டப்பனின் பரம்பரையில் வந்த மன்னனுக்கு எட்டப்பனின் [ பரம்பரை வரலாற்றை எழுதித்தருவதாக ] கடிதம் எழுதியன்.கட்டப்பொம்மனை பற்றி தன வாழ் நாளில் ஒரு வரி கூட எழுதாத அந்நிய ஆட்சியின் விசுவாசி.
ஈனப்பரையரேனும் நம்முடன் வாழபர் அன்றோ …கவனியுங்கள் ” ஈனப் பறையர் ” என்று தாழ்த்தப்பட்ட மக்களை சொன்னவன்.இவனை விட சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாதி ஒழிப்பு பற்றி பேசியிருக்கிறார்கள்.
பாரதி தாசன் இவனது அபிமானியாக இருந்தவர் .இவனது கவிதையால் ஈர்க்கப்பட்டவர்.தனக்கு ஒரு புனை பெயர் வையுங்கள் என்ற மாணவராக கேட்ட போது “பாரதிதாசன் என்று வை “என்று சொன்னவனும் பாரதி தான்.பாரதிதாசனின் கவதை ஆற்றலை நன்கு அறிந்து அதிலும் தனக்கு தாசன் பெயர் வைத்த தற்புகழ்ச்சிக்காரன் .
இவரது குயில் பாட்டு என்ற கவிதை அப்பட்டமாக ஷெல்லியை கொப்பியடித்தது என்று சில வருடங்களுக்கு முன் கவிஞர் நா.காமராசன் கூறியிருந்தார்.
வறுமையில் வாடினான் என்பதும் பொய்.சுதேசமித்திரன் பொறுப்பாசிரியராக இருந்ததால் அவர்க்கு வருமானம் வந்தது.
அவருடைய குளறுபடிகள் ஏராளம் .ஒரு பார்ப்பனராக பிறந்ததால தான் இந்த சலுகை ஐயாவுக்கு.!!!!
ஜீவானந்தம் பெரியாருடன் மனக் கசப்பு கொண்ட பொழுது அவருக்கு எதிராக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகப் பெரியார் எதிர்த்த பாரதியாரை உயர்த்திப் பிடித்து இருக்கலாம்.
பாரதியாரை நிராகரிக்காத பார்ப்பனர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் உள்ள களைகள் என்ற கருத்து சரி தான். ஆனால் பாரதியாரின் கயமைகளை விளக்கும் பார்ப்பனர்களும் (உதாரணமாக ம.க.இ.க. வைச் சேர்ந்த மருதையன்) இருக்கிறார்கள். அவர்களை ஏன் களை எடுக்க வேண்டும்?
மருதையன் எப்படி பார்ப்பனர் ஆவார். அவர்தான் தன்னுடைய உணர்வு செயல் எல்லாவற்றையும் பாட்டாளியாக மாற்றிக்கொண்டாரே. பார்ப்பனியம் என்பது இந்து சடங்குகளையும்,பண்பாடு,கலாச்சாரங்களையும் நடைமுறையில் கடைப்பிடிக்கும் படித்தவர்களையும்,பொருளாதாரத்தினால் தன்நிறைவு அடைந்தவர்களையும் தான் குறிக்கும்.இது கருப்பாக இருக்கும் திராவிடர்களையும் சேர்த்தே குறிக்கும். சாதி பார்க்காத தமிழன் இருக்கிறானா? புலம் பெயர்ந்துப்போனாலும் சாதிப்பார்த்துதானே திருமணம் செய்துக்கொள்கிறீர்கள்.இதில் தேவையில்லாமல் மருதையனை ஈர்த்துள்ளீர்கள்.
ஆட்டை கடிட்த்து மாட்டை கடித்து, கடைசியில் மனிதனை கடித்த மாதிரி கடைசியில் பாரதியாரை குறை கூற கிளம்பியாச்சு
இவர்கள் எல்லாம் உத்தமர்கள் பாரதியை சாடுகிறார்கள் வேடிக்கையாக இருக்கிறது. எல்லோருடைய முதுகிலும் அழுக்கு இருக்கிறது. பாரதியிடம் கொஞ்ஞம் குறைவாகவே இருந்திருக்கிறது. பெரியாரிடம் குறை இருக்கவில்லையா இல்லை பெரியாரை பின்பற்றுவர்களிடம் குறை இல்லைடயா. நடிகர் சத்தியராஜ் பெரிய பொம்பள பொறுக்கியாமே ? பேசிக்கிறார்கள்.
சரியாக சொன்னீர்கள்நண்பரே
ஐயா செல்வன் அவர்களே, இக்கட்டுரையில் பாரதியாரின் முதுகில் அழுக்கு பற்றி – முதுகில் என்ன உடம்பில் உள்ள அழுக்கு பற்றியும் – எழுதப்படவில்லை. மானுட விடுதலைக் கருத்திற்கு எதிரான அவருடைய எண்ணங்களில் சில மட்டுமே எழுதப்பட்டு உள்ளன. அவர் ஆங்கிலேய அரசின் கீழ் படிந்த வேலையாள் என ஒப்பமிட்டுக் கொடுத்த செய்தியையும் இது போன்ற பிற செய்திகளையும் படிக்க வேண்டும் என்று விரும்பினால் திரு.வாலாசா வல்லவன் (தொடர்பு எண் 9444321902) எழுதிய திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் என்ற நூலைப் படித்துப் பாரக்கவும். மேலும் ‛வ.உ.சி. கண்ட பாரதி’ என்ற வ.உ.சி.யின் படைப்பையும் படித்துப் பார்க்கவும். பாரதியார், உடம்பில் கால் அங்குலம் அழுக்கு படிந்த பிச்சைக்காரனை அழையா விருந்தாளியாகக் கூட அழைத்து வந்து பிறருக்கு உபத்திரவமாக இருந்த செய்திகளையும், அழுக்குப் பிச்சைக்காரருடன் போதை மருந்தை அளவுக்கு மீறிச் சாப்பிட்டு உளறிக் கொட்டிக் கொண்டு இருந்த செய்திகளையும் மனம் நொந்து அவர் பதிவு செய்து இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இருக்கட்டுமே – அவரோடநல்ல விசயங்ளை அனுபவித்திட்டு போவோமே – மனதை தொட்டு சொல்லுங்கநீங்க யோக்கியனா ?
எலிப் பொறியில் உள்ள வடையும், தூண்டிலில் உள்ள புழுவும் சுவையானதாக இருக்கிறது என்பதனால் அவற்றைத் தேடி ஓடக் கூடாது நண்பரே. பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆசைப்படுபவர்கள் எடுத்துக் காட்டும் விஷயங்கள் அது போன்றவையே.
இராமியா
செத்தவனும் , புகழ் பெற்றவனும் தமிழர்களைப் பொறுத்தவரையில் நல்லவர்கள்.அவர்களை பற்றி பேசவே கூடாது.பாரதியை பற்றி கட்டுக்கதைகளே ஏராளம்.உண்மைகைகள் எப்போதும் கசப்பவயாகத்தான் இருக்கும்.கேள்வி கேட்காத செக்குமாட்டுத்தனம் பல விடயங்களிலும் உண்டு.
புலிகளையும் பிரபாகரனையும் இவ்விதமே கேள்வி கேட்க திராணியற்று இருந்ததால்தான் அவரது சுத்த ராணுவ கண்ணோட்டம் இன்று தமிழ் மக்களை இன்றைய அரசியல் கையறு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கேள்வி கேட்பதுநல்லது – குற்றம் கண்டு பரிசு வாங்குவது சரியல்ல
சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
வேதாந்தங்கள், தத்துவங்கள் ,சித்தாத்தங்களுக்கு அடிமையாக மறுத்த மனிதர்களை,அடிமைகளில் அல்லது மந்தைகளில் ஒன்றாக பார்க்க முடியாத ஒர் ஏக்கந்தான், இந்த அடிமை அல்லது மந்தையின் எழுத்து
“விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவியைப் போலே”
பாரதி பற்றிய நல்லதொரு கட்டுரை. மேலும் தொடர வாழ்த்துக்கள்.
என் விடலைப்பருவத்தில் இதை ஒத்ததொரு கேள்வியை ஒரு இடதுசாரி சட்டத்தரணியிடம் கேட்டேன். (இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும் கூட) அன்றிருந்த மக்கள் நடுவே அக்காலச் சூழலில் முற்போக்காகச் சிந்தித்தவர் பாரதி. ஆனால் முழு வளர்ச்சியடைந்த கம்யூனிஸ்ட் அல்ல என்ற பொருள்பட அவர் பதில் கூறினார்.
“ஈனப் பறையர்” என்பது பற்றி வேறோரு கருத்துமுள்ளது. அக்கவிதை படித்த உயர்சாதி எனத்தம்மைக் கருதுவோருக்காக (அவர்களே படிக்கததெரிந்தவர்கள்) எழுதப்பட்டது. எனவே வேறோரு கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக சில விடயங்களில் சமரசம் செய்துள்ளான்.
அதேவேளை பல முரண்பாடான கருத்துக்களையும் அவன் வெளிப்படுத்தியுள்ளான்.
பாரதியின் குயில் பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாததால் அதனை அணுகியவர்கள் கன்னா பின்னாவென்று பல அர்த்தங்களில் அதனை விளக்கியதோடு அது ஷெல்லியிடமிருந்து காப்பியடித்தது என்று கூட எழுதியிருக்கிறார்கள். குயில் பாட்டு பாரதியின் கடந்த கால வரலாற்றைக் கூறும் ஓர் சுய சரிதையாகும். இதனைப் “பாரதியின் குயில் பாட்டின் தத்வ ரகஸ்யம்” vd;Dk; vdJ E}y; nrhy;Yf;Fr; nrhy; tpsf;fkhf vLj;Jr; nrhy;Yfpd;wJ. ghujpia> Fwpg;ghf mtuJ Fapy;ghl;ilg; Gupe;J nfhs;s tpUg;gg;gLgtHfis me;j E}iy thrpj;Jg; ghHf;FkhW gzpTld; Ntz;LfpNwd;. njhlHGfl;F:
karunanandarajah@yahoo.co.uk vd;w ,-nkapypy; vd;id mZfTk;.
ed;wp
www. thamilarivu. com
பாரதியின் குயில் பாட்டைச் சரிவரப் புரிந்து கொள்ளாததால் அதனை அணுகியவர்கள் கன்னா பின்னாவென்று பல அர்த்தங்களில் அதனை விளக்கியதோடு அது ஷெல்லியிடமிருந்து காப்பியடித்தது என்று கூட எழுதியிருக்கிறார்கள். குயில் பாட்டு பாரதியின் கடந்த கால வரலாற்றைக் கூறும் ஓர் சுய சரிதையாகும். இதனைப் ‘பாரதியின் குயில் பாட்டின் தத்வ ரகஸ்யம்’ என்னும் எனது நூல் சொல்லுக்குச் சொல் விளக்கமாக எடுத்துச் சொல்லுகின்றது. பாரதியை, குறிப்பாக அவரது குயில்பாட்டைப் புரிந்து கொள்ள விருப்பப்படுபவர்களை அந்த நூலை வாசித்துப் பார்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். தொடர்புகட்கு:
karunanandarajah@yahoo.co.uk என்ற இ-மெயிலில் என்னை அணுகவும்.
நன்றி
http://www.thamilarivu.com / .co.uk
இராமியா
இன்றைக்கு பார்பனன் என்பீர் நாழைக்கு பறையன் என்பீர் இன்னும் விட்டா அமெரிக்கன் சீனன் ரஸ்ஸியன் என்று என்னெல்லாமோ அடுக்கிகொண்டு போவீர் ஏன் உமது அம்மை அப்பனையே சந்தேகிப்பீர் . அமெரிக்கன் துரோகி என்பீர் அவன் கண்டுபிடித்த கணனியில் பொழுது பொக்குவீர். போங்கையா போங்க போயி வேலய கவனியுங்க. பார்பனனாம் பார்பனன் யாருக்கு இங்க ஜாதி வெறின்னு புரியல்ல. எனக்கும் எத்தனயோ பார்பன நண்பர்கள் இருக்கிறாங்க அவுகளுக்கு உங்க அளவு ஜாதி வெறி இல்ல.
ஐயா செல்வன் அவர்களே, யாரும் சொல்லாதவற்றை எல்லாம் ஏன் கற்பனை செய்து கொள்கிறீர்கள்? உங்களுக்கும் பார்ப்பன நண்பர்கள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். பார்ப்னர்கள் நல்லவர்களா, சாதி வெறி இல்லாதவர்களா, என்று உரசிப் பார்ப்பதற்கு ஒரு உரைகல் இருக்கிறது. அது இது தான். (இவ்வுரைகல் நம்மிடையே உள்ள துரோகிகளையும் அடையாளம் காட்டும்)
எல்லா வகுப்பு மக்களிடையேயும் மிகக் குறைந்த அறிவுத் திறன் முதல் மிக அதிகமான அறிவுத் திறன் கொண்டவர்கள் உள்ளது போல பார்ப்பனர்களிலும் உண்டு. ஆனால் கல்வி வேலை வாய்ப்பு சமூக பொருளாதார நடவடிக்கைகள் என்று வரும் போது பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்கின்றனர். இது ஒடுக்கப்பட்ட வகுப்பிலுள்ள திறமைசாலிகள் கீழ்நிலை வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேரிடுவதானது மனித வளத்தை வீணாக்குகிறது. இதை விடக் கொடுமை என்னவென்றால் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைச் செய்வதால் நிர்வாகம் சீர்கெட்டு நாட்டு முனனேற்றம் பாதிக்கப்படுகிறது. இது கொடூரமான தேசத் துரோகம். இந்த தேசத் துரோகச் செயலைத் தடுத்து நிறுத்தி பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி விடாமல் தடுத்து அப்படிப்பட்ட வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டு அதனால் காலியாகும் உயர் நிலை வேலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திறமைசாலிகளை இடம் பெற வைக்கும் பார்ப்பனர்களும் பார்ப்பன அமைப்புகளும் தான் பார்ப்பன ஆதிக்கச் சார்பு இல்லாதவையாக நினைக்க முடியும். இதைச் செய்யாமல் மழுப்பும் யாரும் பார்ப்பன ஆதிக்கச் சார்பை விட்டவர்களாக நினைக்க முடியாது. மேலும் இந்த உரைகல்லில் சிக்காமல் நழுவிச் செல்லும் ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்களையும் பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணை போகும் துரோகிகளாகத் தான் நினைக்க முடியும்.
உங்கள் பார்ப்பன நண்பர்களை இந்த உரைகல்லால் உரசிப் பாருங்களேன். அவர்களுடைய சாதி வெறி வெட்ட வெளிச்மாகத் தெரியும்.
இராமியா
ஒருவேளை சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் பார்பனர்கள் இருக்கிறார்கள் இருந்தும் இருகிக்கிறார்கள். இந்தியாவை நன்றாக ஒருமுறை வலம் வந்துபாருங்கள். அவர்கள் யாழ் மக்களைபோல் கொஞம் அதிகமாகவே முயற்ச்சிப்பவர்கள். அதனால் முனேறினார்கள் முன்னேறுகிறார்கள். யாழ் மக்களிலும் வறுமையில்வாடும் வேளாலர்கள் இல்லயா. யாழ்மக்களின் விடாமுயற்ச்சியும் தங்கள் சமூகத்தாருக்கு முதலிடம் கொடுப்பதும் சிங்களவர்களுக்கு பொறுக்கவில்லை. தமிழர்கள் ஏன் முசிலீம் மக்களை குறைவாக பார்கிறார்கள், அவர்கள் மாடுசப்பிடுவதாலும் கொஞ்ஜம் சுகாதாரத்தில் அசட்டையாக இருப்பதாலும். சைவம் சாப்பிடும் அனைவருமே மாமிசம் சப்பிடுவர்களை அப்படித்தானே பார்கிறார்கள். நானும் ஒருவருடம் சைவமா இருந்தபோது எனதுவீட்டில் உள்ள அசைவ உணவைகண்டு அருவருத்து இருகிறேன். மற்றவர்களை குறைகூறிக்கொண்டிருக்காமல் ஒவ்வொருவரும் தன்னை தானெ உயர்த்த முயற்சிக்கவேண்டும்.
என்னுடைய பார்பனநண்பர்களுடன்நான் எதையும் விவாதிக்கமுடியும்நான் விவாதிப்பதும் உண்டு. சிலர் என்னொடு மது அருந்தி மாமிசமும் உண்பார்கள். நீங்கள் உங்கள் ஜாதிவெறியில் இருந்து வெளியில் வாருங்கள் முதலில். உலகம் விதியாசமானதாகத்தெரியும். You may want to read about existentialism for a change.
ஐயா செல்வன் அவர்களே, ஒரு வேளைச் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் பார்ப்பனர்களிடம் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபடச் சொல்லிப் பாருங்களேன். அவர்கள் முயற்சி செய்கிறார்கள், மற்றவர்கள் முயற்சி செய்வதில்லை என்பது இயற்கை நியதிக்கு எதிரான கருத்தாகும். அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து வித குணாம்சம் கொண்ட மனிதர்கள் உண்டு.
மரக்கறி உணவு, புலால் உணவு பற்றி இங்கு யாரும் பேசவில்லை. உணவு வகையில் இருந்து ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதையோ வல்லவரா அல்லவரா என்பதையோ முடிவு செய்ய முடியாது.
ஒருவர் ஆதிக்க நுகத்தடியில் இருந்து தப்புவதற்காகப் போராடுவது ஜாதி வெறி ஆகாது. அது விடுதலை உணர்வு அகும். மாறாக ஆதிக்க நுகத்தடி நழுவி விடாமல் எச்சரிக்கையாக இருப்பது கொடூரமான ஜாதி வெறியாகும்.
உங்கள் பாரப்பன நணபர்களை நான் சொன்ன உரைகல்லில் உரசிப் பாருங்களேன்.
. குப்ப கூட்டிற பிராமணனும் இருகான் என்று தெரியாம பொலம்பு.நாம்ப இன்னா பண்ணமுடியும். உலகம் தட்டைங்கிறவாளும் இருக்காதானே..
ஐயா, குப்பை கூட்டுகின்ற பார்ப்பனர்கள் என்ன கக்கூஸ் கழுவும் பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். இதில் கவனமாகக் கேட்க வேண்டியது என்னவென்றால் குப்பை கூட்டும் தொழிலைச் செய்கின்ற பார்ப்பனர்கள் இருக்கிறார்களா என்பது தான்.
இல்ல அவுக அத பொழுதுபோக்காகத்தான் பண்றாங்க எண்டு சொன்னேனா உங்களுட்ட. ஒரு குசும்ப்பு புடிச்ச ஆளாயிருப்பீங்க போலிருக்கே ராமையா நீங்க.
ஐயா, நீங்கள் சொல்வது போல் பார்ப்பனர்கள் கீழ் நிலை வேலைகளச் செய்வது உண்மையானால், 3% உள்ள அவர்களால் 90%க்கும் மேல் உயர்நிலைகள்ல மேல் நிலை வேலைகளில் எப்படி ஆக்கிரமிக்க முடிகிறது?
முதலில் நீங்கள் எந்த கணக்கெடுப்பின்படி இதை சொல்கிறீர்கள். உங்கள் கணக்கெடுப்பு யாழ்பாணத்தமிழருக்கு பொருத்தமாக இருந்திருக்கும் போருக்கு முன்னதாக பிராமணருக்கு பொருத்தமாக இருந்திருக்கும் திமுக காலத்திற்கு முன்னதாக. இப்ப அவர்கள் பலரும் கையேந்து பவன்காரர்களாயிட்டார்கள். உமது ஜாதிவெறியவிட்டுட்டு உமது மக்களுக்கு உம்மால் என்ன செய்யமுடியுமோ அதை முதலில் செய்யும். பிராமணன் பிராமணனை பார்த்துக்கொள்ளுவான் நாம் நம்மை பார்துக்கொள்ளுவோம் மொதல்ல.
ஐயா, நான் யாழ்ப்பணத்தைப் பற்றிப் பேசவில்லை. எந்த அதிகாரமும் இல்லாத தமிழ் நாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டும் பேசவில்லை. அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்திய அரசு மற்றும் சமூக, பொருளாதார நடவடிக்கைளில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு தான் பேசுகிறேன்.
இந்த ஏற்றத் தாழ்வுகள் நிரந்தரமாக இருக்கும்படியான நடவடிக்கைகள் தான் நடந்து கொண்டு இருக்கின்றனவே தவிர மாறான நடவடிக்ககைகள் எடுக்கப்படவில்லை. ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கிற்கும் இது தான் காரணம்.
மறுபடியும் சொல்கிறேன். ஜாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகச் செய்யும் எதுவும் ஜாதி வெறி ஆகாது. அது சுதந்திர உணர்வின் வெளிப்பாடு தான். அதை ஜாதி வெறி என்று கூறுவதும் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் மாறிவிடக் கூடாது என்தற்காகச் செய்யும் முயற்சிகளும் தான் ஜாதி வெறியாகும்.
ராசேந்திரன் மீராவின் கேள்விகளுக்கு பதில் இல்லையே. எதற்கும் முந்திரி கொட்டை போல் பதில் சொல்லும் ராமியாவும் ஏன் மௌனம் காக்கிறார்.
ரவி அவர்களே! உங்கள் உசுப்பேத்தல் சரியோ தவறோ; நான் முந்திரிக் கொட்டை மாதிரி ஏற்கனவே விடை அளிக்கத்தான் செய்திருக்கிறேன். ராஜேந்திரன் அவர்களின் 11.1.2012 நாளிட்ட பின்னூட்டத்திற்கு நான் 20.1.2012 அன்று விடை அளித்து இருக்கிறேன். சகோதரி மீரா அவர்கள் 21.1.2012 அன்று தான் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார். ஆகவே என்னுடைய விடை முந்திரிக் கொட்டை போன்றது தான்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய் சொல்லில் வீரரடி……பாரதி பற்றி தவறாக பேச எந்த ******** தகுதி இல்ல.